Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 60
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 60)

மாவட்டம்

அரியலூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினரிடையே மோதல் ஒருவர் படுகாயம் நீடிக்கிறது பகைமை

அரியலூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க-தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். அரியலூர் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக போட்டியிடுபவர் இராஜேந்திரன். இவரை ஆதரித்து நடிகர் குண்டுகல்யாணம் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, 234-தொகுதிகளிலும் அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார். அப்போது தி.மு.க.வை குறி;த்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.தொண்டர் ஒருவர் குண்டு கல்யாணத்தை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனை கண்ட அ.தி.மு.க.வினர் அந்த நபர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் ... Read More »

தி.மு.க.வின் வாக்கு வங்கி 20-சதவீதம் குறைந்துள்ளது ;நாஞ்சில் சம்பத் விமர்சனம்

அ.தி.மு.க.மிகப்பபெரிய செல்வாக்கை பெற்றுள்ளதாகவும், தி.மு.க.வின் வாக்கு வங்கி 20-சதவீதம் குறைந்துள்ளதாகவும்;, நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் விஜயபாஸ்கரை ஆதரித்து தான்தோன்றி பகுதியில் திறந்த வேனில் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க.மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுள்ளதாகவும், தி.மு.க.வின் வாக்குவங்கி20சதவீதம்குறைந்துள்ளதாகவும்;நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். Read More »

தமிழகத்தை காப்பாற்ற இதுவே தருணம் ;நடிகை காயத்ரி ரகுராம் பேச்சு

வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வராவிட்டால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தார். ஈரோடு மேற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் பழனிச்சாமி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நர்மதாதேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பாஜக கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் உடன் வந்தார். வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சி புரிந்ததால் 50 ஆண்டுகளாக தமிழகத்தில் ... Read More »

அரக்கோணம் அருகே இளம் பெண் தற்கொலை ;காவல்துறையினர் தீவிர விசாரணை.

அரக்கோணம் அருகே இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருடைய மகள் சுனிதா. இந்நிலையில் சுனிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்ட தனலட்சுமி அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவால்துறையினர் சுனிதாவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு ... Read More »

அனல் பறக்கும் வெயில் ”குடைபிடிக்கும’ நிழல்….

கோடை காலத்தில் வெயிலால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கோவை மாவட்ட இருசக்கர வாகன ஓட்டிகள், பிரத்யேக குடையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தைவானில் இருந்து இறகுமதி செய்யப்படும் இந்த குடைகளை வாங்க இருசக்‌கர வாகன ஓட்டிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். எந்த இருசக்கர வாகனத்திலும் பொருத்தும் வகையில் இந்த குடை தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத நேரத்தில் கழட்டி வைக்கும் வசதி, சுமார் 60 கிலோ மீட்டர் வேகம்‌‌ வரை சென்றாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த குடை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 2 ஆயிரத்துக்கு விற்பனையாகும் இந்த ... Read More »

கோவையில் உலக புத்தக நாள் விழா கொண்டாட்டம்; ‘சத்திய சோதனை’ புத்தகத்தின் புதிய தமிழ் பிரதியை வெளியிட்டார் கமல் .

தலைவர்கள் தொண்டர்களாக செயல்பட்டால்தான் காந்தியை போல் உயர முடியும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உலக புத்தக நாள் விழா கோவையில் கொண்டாடப்பட்டது. இதில் கமலஹாசன் கலந்துகொண்டு “சத்திய சோதனை” புத்தகத்தின் புதிய தமிழ் பிரதியை வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், அடுத்தவர்க்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையே அகிம்சையின் தொடக்கம் என்றார். அரசியலும்,மதமும் தவிர தீண்ட தகாத நோய் என ஒன்றும் இல்லை என்று கூறிய கமல்ஹாசன், தலைமைப் பொறுப்பை காந்தியைபோல் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். Read More »

கார் தீப்பிடிப்பு,கத்திப்பாராவில் பரபரப்பு ;தீயணைப்புத்துறை துரித நடவடிக்கை

கிண்டி அருகேயுள்ள கத்திபாரா பகுதியில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விமான நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது .இதனால் பதட்டமடைந்த பகுதி மக்கள் தீயணைப்பு துரையின் உதவியுடன் தீயை விரைந்து அணைக்கதொடங்கினர். பின்னர் அந்த காரில் பயணம் செய்த 5 பெண்கள் பதுகாப்புடம் காப்பாற்றப்பட்டனர் .இதனால் சற்று நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது .மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . Read More »

கருணாநிதியை வீழ்த்துவேன் ; திருவாரூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். காமராஜ் உறுதி.

‘திருவாரூர் பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்து, மக்களுக்காக எதையும் செய்யாத கருணாநிதியை இந்த முறை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும்’ என தமிழக உணவு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில், அதிமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்வர் ஜெயலலிதாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தியுள்ள திருவாரூர் பேரவைத் தொகுதி வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் ... Read More »

விடுதலை சிறுத்தை கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு;இன்று வெளியிட்டார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். 12 பேர் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதன்படி… திருவள்ளூர்- பாலசிங்கம் திருவிடைமருதூர்-விவேகானந்தன் பொன்னேரி- செந்தில் சோழவந்தான்- பாண்டியம்மாள் ஸ்ரீபெரும்புதூர்-வீரக்குமார் கள்ளக்குறிச்சி- ராமமூர்த்தி அரக்கோணம்-கோபிநாத் என்கிற இளஞ்சேகுவாரா வானூர்- தமிழ்ச் செல்வன் அரூர்- கோவேந்தன் பரமக்குடி-இருளன் மானாமதுரை-பாவலன் ஆத்தூர்- ஆதித்யன் தேமுதிக- மநக- தமாகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் ஏற்கனவே 13 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 12 வேட்பாளர்களின் பட்டியலை ... Read More »

மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வுதளம் அமைக்கப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தகவல்

‘‘மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சென்னையின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளம் அமைக்கப்படும்’’, என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை சென்னை அடையாறு ஆந்திர மகா சபாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் பி.சந்திரமோகன் பங்கேற்று அங்குள்ள 18 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com