Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 52
Thursday , 29 September 2022
Home » மாவட்டம் (page 52)

மாவட்டம்

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நகராட்சியின் சார்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குடிநீருக்கான ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ளது. இதிலிருந்து வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கும், பேருந்து நிலையத்துக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ள பகுதியில் பேருந்து நிலைய கடைகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் தேங்குவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு ... Read More »

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூபாய் 5 லட்சம் கொள்ளை

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூபாய் 5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாரயணன், இவர், செங்கல்பட்டில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ரூபாய் 5 லட்சம் பணம் எடுத்துள்ளார். பின்னர், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் சென்றார். தொடர்ந்து, காஞ்சிபுரம் காந்தி சாலையில் காரை நிறுத்திவிட்டு எதிரே இருந்த உணவகத்தில் உணவருந்தச் சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது, காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 5 லட்சம் பணம் ... Read More »

இராஜபாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷமருந்தியும், தூக்கிட்டும் தற்கொலை

 இராஜபாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷமருந்தியும், தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு தேவதர்சினி என்ற ஆறு வயது மகள் உள்ளார். மீன் பண்ணை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், திடீரென மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலங்களை ... Read More »

அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ;அரசு அறிவித்த விதியின் கீழ் உதவித்தொகை வழங்கிட கோரிக்கை

நாற்பது விழுக்காடு ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கலாம் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் துரைசாமி உட்பட திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 40-விழுக்காடு ஊனம் இருந்தாலே, உதவித்தொகை வழங்கலாம் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான 70-வகையான சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல் ... Read More »

பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் ;தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை அருகே பள்ளி வாகனம் மோதி 4-வயது சிறுமி உயிரிழந்ததை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தஞ்சையை அடுத்த ஒருத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது 4-வயது மகள் நந்தினி. இவர், பூதலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி.படித்து வந்தார். இன்று காலை பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்ற இவர், புத்தகப்பையை கீழே தவறவிட்டதால், அதனை எடுக்க வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார். இதனை கவணிக்காத ஓட்டுனர் இராமச்சந்திரன் வாகனத்தை இயக்கியதில் நந்தினி மீது பின் சக்கரம் மோதி ... Read More »

வீட்டின் பூட்டை உடைத்து 22-சவரன் தங்க நகைகள் கொள்ளை;கத்தியை காட்டி மிரட்டியதாக பாதிக்கப்பட்டோர் புகார்

நாமக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்து 22-சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள கங்காநகர் பகுதியில் வசித்து வருபவர் குணசீலன். அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி பரிமளாவும், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் இருவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்த முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி பரிமளா அணிந்திருந்த 22-சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். தகவல் அறிந்த ... Read More »

சொத்து தொடர்பான தகவல்களை 24-மணி நேரமும், அறிந்து கொள்ளும் புதிய வலைதளம் அறிமுகம் ;தொடங்கிவைத்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி

சொத்து தொடர்பான தகவல்களை 24-மணி நேரமும், அறிந்து கொள்ளும் வகையில் வருவாய்த்துறையினருக்கான, புதிய வலைதளத்தை, புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு, வருவாய்த்துறையினருக்கான புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலம், சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்கள், நிலப்பதிவேடுகள், பட்டா விவரங்கள் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் 24-மணி நேரமும் இந்த வலைதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். இந்த ... Read More »

20 லட்சம் ரூபாய் மோசடிவிவகாரம்;சசிகலா புஷ்பா மீது சம்மந்தப்பட்ட நபர் புகார்

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் ஒப்பந்தத்திற்கு டெண்டர் விடப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தை தனக்கு அளிக்க ஏற்பாடு செய்ய சசிகலா புஷ்பாவிற்கு 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், நெல்லை சாந்திநகரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு பணம் கொடுத்ததாகவும், தற்போது அது குறித்து கேட்டால் சசிகலா புஷ்பா மிரட்டுவதாகவும் ... Read More »

சோ.ராமசாமிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி

பல்வேறு உடல் நலக் குறைவினால் அவதிப்பட்டு வரும் துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலமாக அவர் உடல் நலக் குறைவினால் அவதிபட்டு வருகின்றார். தற்போது சரியாகிய நிலையில் மீண்டும் அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Read More »

அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. * திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கொடைக்கானல் முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை அடுத்து கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. * விருத்தாசலத்தில் உள்ள மேரிஸ் கல்லூரியில் முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com