Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 50
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 50)

மாவட்டம்

உதிரிபாக கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

ஈரோடு அருகே உதிரிபாக கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் செல்போன் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருபவர் தர்மா. இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றிருந்தார். இதனையறிந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் தங்கநகைகள் மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த தர்மா, ... Read More »

180 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குவது என்ற புதிய அறிவிப்பை கண்டித்து வேலூர் அருகே அரசு பண்ணை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

180 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குவது என்ற புதிய அறிவிப்பை கண்டித்து வேலூர் அருகே அரசு பண்ணை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் த்தில் ஈடுப்பட்டனர். வேலூர் மாவட்டம் ராணி பேட்டையை அடுத்த நவலாக் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான தோட்டப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்துறை இயக்குனர் தட்சணாமூர்த்தி வெளியிட்ட புதிய அறிவிப்பில் தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 180 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப் படுமென தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு கண்டனம் ... Read More »

தேனி அருகே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை அப்பகுதி மக்களை முற்றுகை

தேனி அருகே குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை அப்பகுதி மக்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டம் காமய்யக்கவுண்டன்பட்டிக்கு உட்பட்ட 15-வது வார்டில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் புதிய மேம்பாலம் ஆகியவற்றை செய்து தர வேண்டும் என்றும், இல்லாவிடில் உள்ளாட்சித் தேர்தலை ... Read More »

பட்டாசு விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் ;அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆறுதல்

சிவகாசியில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலா 2 லட்சம் ரூபாய் வழங்கினார். சிவகாசியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலா 2 லட்சம் ரூபாய் வழங்கினார். தனியார் ஸ்கேன் மையம் சார்பில் இத்தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையில் வெடி விபத்தில் இறந்த 8 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்குப் பின் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று மினி லாரியில் ... Read More »

பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்; வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பட்டாசு கடைகள், கிடங்குகளில் விபத்து ஏற்படாமல் தடுக்க ஆய்வுப்பணியில் ஈடுபட வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உத்தரவிட்டுள்ளார். சிவகாசி விபத்து நிகழ்விடத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஊரகத்தொழில்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சிவஞானம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனையடுத்து அமைச்சர் உதயகுமார் நடத்திய ஆய்வு கூட்டத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர், இது போன்ற விபத்துக்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். ... Read More »

மாணவியை தரக்குறைவாக பேசிய பேராசியர்கள்?…மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவரை பேராசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.‌ அதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட 5 பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க‌வேண்டும் என‌ வலியுறுத்தியும் 500க்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். Read More »

உலக்கையால் தாக்கியதால் பார்வை இழந்த தெரு நாய்: தாக்கியவர் மீது வழக்கு பதிவு

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உலக்கையால் அடித்ததில் தெரு நாய்க்கு இடது கண் பார்வை பறிபோனதுடன், காலும் உடைந்தது. சிட்டி என்ற அந்த நாயை விருகம்பாக்கம் இந்திரா நகரில் வசித்து வந்த வேலு என்பவர் பராமரித்து வந்துள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பு நெற்குன்றத்தில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டார். அவ்வப்போது விருகம்பாக்கம் செல்லும் போது வேலு, சிட்டி நாயை பார்த்து வந்துள்ளார். வியாழக்கிழமை, வேலு குடியிருந்த வீட்டின் அருகே குடியிருப்பவர்களிடம் இருந்து போன் வந்துள்ளது. அப்போது அவர்கள் வேலுவிடம், விருகம்பாக்கம் இந்திரா நகர் ... Read More »

பண்ருட்டி அருகே சாலையோரத்தில் 500 ரூபாய் கிழிந்த நோட்டுக்கள்

பண்ருட்டி அருகே சாலையோரத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிப்பாக்கம் கிராமத்தின் சாலையோரம் நேற்று மாலை 1000, 500, 100 ரூபாய் நோட்டுகள் பரவிக் கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல்கள் பரவியது. ஊர்மக்கள் சென்று பார்த்தபோது ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. இதனை சிலர் வீட்டுக்கு அள்ளிச் சென்றனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பண்ருட்டி போலீசார் விரைந்து சென்று அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More »

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு ;மீனவர்கள் கொந்தளிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியுள்ளனர். படகுகளில் இருந்த மீன்களை கடலில் வீசி எறிந்த இலங்கை கடற்படையினர் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்ததால் பெரியளவு இழப்பைச் சந்தித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலில் அச்சமின்றி, பாதுகாப்பாக மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More »

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து தருமபுரி அருகே, பேருராட்சி அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகை

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து தருமபுரி அருகே, பேருராட்சி அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட போமல்லாபுரம் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் வினியோகித்து வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு இன்னல்களுக்கு ஆளாவதாகவும் வேதனை தெரிவித்த அப்பகுதி மக்கள் போமல்லாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதேபோல் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதியில் குடிநீருடன் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com