Monday , 25 October 2021
Home » மாவட்டம் (page 5)

மாவட்டம்

கடல்போல் காட்சி தரும் பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக பெரிய பாசனப்பரப்பை கொண்டதாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மற்றும் வடகேரளாவில் பெய்த தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து, இன்று காலை நீர்மட்டம் 104 புள்ளி 28 அடியாக உள்ளது. அணை முழு ... Read More »

தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஆந்திர மீனவர்கள் தாக்குவதாக புகார்

நாகை மாவட்ட மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்துள்ள ஆந்திர மீனவர்கள், அவர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 9 பேர் கடந்த 28 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த ஒன்றாம் தேதி சென்னைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் தங்கள் பகுதிக்கு வந்ததாக கூறி ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாகை மீனவர்களை சிலர் தாக்குவது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆந்திர மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரையும் ... Read More »

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதிப்பு

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும் கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே தமிழர்களால் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் சிலை உள்ளது. கையில் எழுதுகோல் மற்றும் திருக்குறள் ஏந்தியவாறு அமர்ந்த நிலையில் ((50 ஆண்டுக்கு முன்)) இந்த சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் சிலையின் மீது விஷமிகள் சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர். இன்று காலையில் இதைப்பார்த்த ... Read More »

மதம் மாறி 2 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது

முதல் மனைவியை ஏமாற்றி விட்டு 2-வது திருமணம் செய்த குமரி என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். இவர் 2 பெண்களையும் மணப்பதற்காக கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களுக்கு மாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரை சேர்ந்தவர் தங்க பொன்சன் (வயது 36). மும்பையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்தார். மும்பையை சேர்ந்தவர் பாத்திமா (39). விபத்தில் கணவரை பறிகொடுத்தவர். தாயுடன் வசித்து வந்த பாத்திமாவுடன் தங்க பொன்சன், நெருங்கி பழக தொடங்கினார். கடந்த 2010-ம் ஆண்டு தங்க பொன்சனுக்கும், பாத்திமாவுக்கும் ... Read More »

கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர், மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவ மாணவிகளுடன் இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கரூர் நகராட்சியில் நாள்தோறும் ஒவ்வொரு பகுதிகாளாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வெங்கமேடு அண்ணா காலணியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றதோடு, பள்ளி மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்தப் பணிகளை ஆய்வு செய்ததோடு, மாணவிகளுடன் இணைந்து தாமும் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுபட்டார். வீடுவீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு, ... Read More »

பவானிசாகர் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்இ ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்ததால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடுஇ திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெயத பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 764 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும்இ கீழ்பவானி வாய்க்காலில் 2000 கன அடி ... Read More »

சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை

சேலம் மாவட்டம் சங்ககிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 61 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை ஏழு மணியளவில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரம் நடைபெற்ற சோதனையின்போது, அலுவலக உதவியாளர்கள் டிபன்பாக்ஸ் கைப்பை உள்ளிட்டவைகளில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று ... Read More »

நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரம் பூர்த்தி விழா

நெல்லையில் தாமிரபரணி மகா புஷ்கரம் பூர்த்தி விழாவை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கு நடைபெற்ற மகா ஆரத்தி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12 நாட்கள் நடைபெற்றது அந்த விழா நிறைவு வருவதையொட்டி தாமிரபரணி மகா பூர்த்தி விழா அந்தய புஷ்கரம் என்ற பெயரில் நவம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. Read More »

முதுமலை காப்பகம் பகுதியில் சுற்றித் திரிந்த புலி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை சுற்றுலா பயணிகள் படம் பிடித்தனர். தொடர் மழை காரணமாக பச்சைப் பசேலென இருக்கும் வனப்பகுதியின் சாலை ஓரங்களுக்கு வன விலங்குகள் பவனி வரத்தொடங்கி உள்ளன. நேற்று முதுமலைப் புலிகள் காப்பகம் வழியாக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் எதிரே புலி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போன்களில் படம்பிடித்தனர். Read More »

நாளை சூரசம்ஹாரம் – திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சஷ்டி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. லட்ச்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என கருதி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com