ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டுஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குடிநீர் பாட்டிலுக்குள் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை விமானநிலையத்தில் அனைத்து தரப்பு அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ... Read More »
மாவட்டம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5-வது யூனிட்டில் மீண்டும் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட் உள்ளன. இந்த யூனிட் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், அலகுகளில் திடீரென ஏற்படும் பழுது காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி 5-வது யூனிட்டில் உள்ள கொதிகலன் பழுது காரணமாக ... Read More »
குரங்கணி தீ விபத்து : பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு…
தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ட்ரெக்கிங் சென்றவர்கள் சிக்கி பலியானது தமிழகத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியது. கொழுக்கு மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்னையில் உள்ள டிசி.எஸ்.-ல் பணியுரிந்த பூஜா, நிஷா, நிவேதா, அகிலா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தனர். இந்நிலையில், அந்த மலைப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் சிக்கி ஏற்கனவே 14-பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 15 -ஆக அதிகரித்தது . மதுரை கென்னட் மருத்துவமனையில் 99 சதவீத தீக்காயத்தால் தீவிர சிகிச்சையில் இருந்த திருப்பூர் ... Read More »
அதிமுக அலுவலகத்திலும் ஜெயலலிதா உருவப்படம்…
அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. அம்மா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து ஜெயலலிதா உருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்மையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read More »
மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை அப்புறப்படுத்தியது கோவில் நிர்வாகம் …
மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. மேலும் கிழக்கு கோபுர பிரகாரத்தில் இருந்த வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் தீப்பிடித்து எரிந்ததால் இடிந்து விழுந்தது. இந்த பயங்கர தீ விபத்துக்கு காரணமான கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோவில் நிர்வாகம் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற ... Read More »
மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து ; தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்து ஆய்வு…
தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசிய புலனாய்வு அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். இதில், 76 நம்பர் கடை ஊழியர் கருப்பு, தேங்காயில் வைத்து சூடம் ஏற்றி சுற்றிய போது, தவறி விழுந்து தீ பற்றியது . அதனை பார்த்த பக்கத்து ... Read More »
பாண்டிச்சேரி ; ப.ஜ.கவின் 3 நியமன ச.ம.உறுப்பினர்களின் நியமனம் செல்லாது …
பாஜகவை சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்கள் மூன்று பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். இதனிடையே அவர்களுக்கு சட்டசபையில் அலுவலகம், அடையாள அட்டை மற்றும் பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டுமென மனு அளித்து இருந்தனர். இந்நிலையில் வரும் 23-ம் தேதி சட்டசபை கூடவுள்ள சூழ்நிலையில் சபாநாயகர் வைத்தியலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவை செயலர் வின்செண்ட் ராயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜகவை சேர்ந்த ... Read More »
நாம் தமிழர் கட்சியினர் மீது போலீஸ் அடக்குமுறை …
திருவாரூர் நன்னிலம் நாம் தமிழர் கட்சியினரைக் கைது செய்ததற்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய் பதிக்கும் முயற்சிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மக்களோடு முதன்மையாய் களத்தில் நின்ற அப்பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான அன்புச்செல்வன், ஜானகிராமன், ரவி மற்றும் சமூகச்செயற்பாட்டாளர் திலக் ஆகியோர் மீது 6 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பிணையில் வர இயலாத வகையில் வழக்குத் தொடுத்துச் சிறையிலடைத்திருக்கிறார்கள். இவ்வழக்கில் ... Read More »
வரி ஏய்ப்பு செய்பவர்கள் தான் ஜி.எஸ்.டிக்கு எதிராக பேசுகிறார்கள் ; எச்.ராஜா சாடல் …
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் ஜி.எஸ்.டியை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருவருதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாஜகவின் 3 ஆண்டு சாதனை விளக்க மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி மருத்ததால், பாஜகவினர் தேசியசெயலாளர் எச்.ராஜா தலைமையில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த ... Read More »
விவசாயி மர்ம மரணம் ; வனத்துறையினருக்கு பொதுமக்கள் அடி,உதை…
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயி மர்ம மரணம் விவகாரத்தில் வனத்துறை ஊழியரை அடித்து துவைத்ததோடு, போராட்டத்தில் குதித்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பொதுமக்களும் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கியதால் மேல்புழுதியூர் கிராமத்தில் கலவரம் உருவானது. இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்விவசாயி திருமலை. இவர் ... Read More »