Monday , 25 October 2021
Home » மாவட்டம் (page 4)

மாவட்டம்

மாணவிகள் விடுதிக்குள் புகுந்து மாணவியை கடத்திச் சென்ற இளைஞன்

தேனி மாவட்டத்தில் விடுதிக்குள் புகுந்து மாணவியைக் கடத்திச் சென்றவர்கள் குறித்து சக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்துள்ளனர். ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கடமலைக்குண்டு அரசு கள்ளர் மாணவியர் விடுதியில் 50 மாணவிகள் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடத்தப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் சக மாணவிகள் கடமலைக் குண்டு காவல்நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் ... Read More »

வேலூர் அருகே ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்தி ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல்

வேலூர் மாவட்டம் ஏலகிரிமலை அருகே 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தொழிலதிபரை போலீசார் தேடி வருகின்றனர். அத்தனாவூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்ற அந்த தொழிலதிபர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் பணி நிமித்தமாக வெளியில் சென்ற அருள் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் எண்ணுக்கு அழைத்த மர்ம நபர், அருளை கடத்தியுள்ளதாகக் கூறி 50 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அருளின் மனைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில் ... Read More »

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரு பிரிவினர் இடையே மோதல்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தபோது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் உருவானது. தகராறு முற்றியதால் தள்ளுமுள்ளு மற்றும் கைககலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தாசில்தார் கோவில் ... Read More »

பவானிசாகர் அணை எந்நேரமும் நிரம்பும் என்பதால் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு

பவானிசாகர் அணை எந்நேரமும் நிரம்பும் என்பதால் உபரி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியாகவும், நீர் இருப்பு 32.4 டிஎம்சி ஆகவும் நீர்மட்டம் 104.54 அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் ... Read More »

பெண்ணாக பிறந்ததால் 15 நாள் ஆன குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்த தந்தை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாளேயான பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக தந்தை கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் திடீர் என்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில் சந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட ... Read More »

காவல்துறையின் செரிமனி பரேட் நிகழ்ச்சி

காவல்துறையின் செரிமனி பரேட் மற்றும் பயிற்சி காவலர்களுக்கான நினைவூட்டல் பயிற்சி கோவை காவல் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. ஆண்டுதோறும் காவல்துறையினரின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கென செரிமனி பரேட் நடத்தப்படுகிறது. அந்தவகையில் கோவை காவல் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்ற செரிமனி பரேட் நிகழ்ச்சியில், கோவை காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் கோவை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப்படை மற்றும் அதிரடிப்படை வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் பராமரிப்பு, திறன் மற்றும் அதன் ஓட்டுனர்களின் ... Read More »

ராஜராஜ சோழனின் 1034ஆம் ஆண்டு சதய விழா

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் 1034ம் ஆண்டு சதய விழாவையொட்டி தஞ்சை நகரம் மற்றும் பெரியக்கோவில் ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. ராஜராஜ சோழன் பிறந்த நாள் அரசு சார்பில் ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி 1034ம் ஆண்டு சதய விழா இன்று மங்கல இசையுடன் தொடங்குகிறது.இதனையொட்டி பெரியக்கோவில் மற்றும் தஞ்சை நகர் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா மற்றும் ... Read More »

காட்டு யானைகளை கண்டு வாகன ஓட்டிகள் அச்சம் – பீதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரியும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள சுவர்ணவதி அணை அருகே நேற்றிரவு 2 காட்டு யானைகள் சாலையின் நடுவே நடந்து சென்று கரும்புத் துண்டுகளை தேடின. பின்னர் அந்த யானைகள் சாலையோர வனப்பகுதிக்கு சென்றபின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.மைசூரில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் கரும்புத் துண்டுகள் ஆங்காங்கே சாலையில் சிதறி விழுவதால் அவற்றை தின்பதற்காக காட்டு யானைகள் அடிக்கடி சாலைகளில் நடமாடுகின்றன. Read More »

விழுப்புரம் அருகே 6 வயது மகளுடன் கிணற்றில் குதித்து நர்சு தற்கொலை

விழுப்புரம் அருகே இன்று காலை கணவர் இறந்த சோகத்தில் மகளுடன், தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ளது நேமூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 38). இவரது மனைவி சரசு(வயது 32). இவர்களுக்கு 6 வயதில் வைசாலி என்ற மகள் இருந்தாள். சரசு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரசு தனது வேலையில் விருப்ப ஓய்வு ... Read More »

தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளம்

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு 42 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. அருவிகளில் வெள்ளம் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிபகுதிக்கு செல்லவோ, குளிக்கவோ கூடாது என 42வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com