Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 34
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 34)

மாவட்டம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பகுதியில் திருட்டு !!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் . வயது 58 கொத்தனார் இவரது மகன் தாமோதரனுக்கும் கருக்கை பகுதியை சேர்ந்த சூர்யாபிரபா என்பவருக்கும் திருவந்திபுரம் கோயிலில் திருமணம் நடந்தது பின்னர் பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலையில் வரவேற்பு திகழ்ச்சி நடைப்பெற்றது இதனால் மணமகன் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு மண்டபத்துக்கு சென்றனர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து கண்ணன் தனது வீட்டுக்கு சென்றார் அப்போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது கதவு ... Read More »

களை கட்டும் குற்றால சீசன், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கிடைக்க கூடிய அரிய வகை பழங்களின் வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூpலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் பருவ காலங்களாகும். இந்த ஆண்டிற்கான பருவகாலம் கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.இந்த பருவ நிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டு தோறும் இந்த ... Read More »

மாவட்டம் தோறும் ஆளுனர் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது!!

மாவட்டம் தோறும் ஆளுனர் ஆய்வு செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது, இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் 7 ஆண்டு சிறை என்று மிரட்டல் விடுவதைக் கண்டு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் , அஞ்சாது , பணிந்து போகாது என்றும் குட்கா ஊழல் வழக்கில் தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதனுக்கும் தொடர்பிருப்பது அம்பலமாகி உள்ளது . அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று நெல்லையில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜவாஹீருல்லா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த மனிதநேய ... Read More »

இலவச கான்கிரீட் வீடு கட்டித்தர நரிக்குறவர்கள் கோரிக்கை!!

கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் குடும்பங்களுக்கு விலையில்லா கான்கிரீட் வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள்  கோவில்பட்டிபெருந்துநிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊசி,பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மந்திதோப்பு மலையடிவார பகுதியில் குடிசைகள்,மற்றும் டெண்டுகள் அமைத்து வசித்து வருகின்றனர் இவர்களுக்கு வீடு வசதி இல்லாததால் போதிய வசதி இல்லாமல்சிரமபட்டுவருகின்றனர். மழை மற்றும்காற்று வீசும் நேரங்க்களில் தற்போது வசித்துவரும் குடிசை வீடுகளில் வசிக்கமுடியவில்லை எனவும் ... Read More »

தாயை வீட்டைவிட்டு வெளியேற்ற முயற்சிக்கும் இரு பெண்களால் பரபரப்பு தாயார் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள டர்னர்புரம் பகுதியில் வசிப்பவர் சகாயம், பல வருடங்களுக்கு முன்னதாகவே கணவனை பிரிந்த சகாயம் தன்னுடைய இருபெண்குழந்தைகளையும் மிகவும் கஷ்ட்டங்களுக்கு மத்தியில் வளர்த்து வந்துள்ளார், இவர்களில் சகாயத்தின் மகள்களான ஆரோக்கிய மேரி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் தங்களது சுய விருப்பத்தின்படி திருமணங்கள் முடித்து சென்ற பின்னர் டர்னர்புரம் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வரும் சகாயம் தனக்கு சொந்தமான வீட்டில் இருந்து கிடைக்கும் வாடகை பணத்தை வைத்து ஜீவனம் செய்து வருகின்றார், இந்நிலையில் வயதான தன்னுடைய ... Read More »

காரைக்குடியில் 60 லட்சம் வெளிநாட்டு பணம் அமலாக்கதுறையினர் விசாரணை !!

காரைக்குடியில் 2 கோடி உள்நாட்டு மற்றும் 60 லட்சம் வெளிநாட்டு கரன்ஸி கொள்ளையடிக்கப்பட்டுபிடிபட்ட சம்பவத்தில் அமலாக்கதுறையினர் விசாரணை.சிவகங்கை மாவட்டம்காரைக்குடியில், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் சுப்பிரமணி என்பவர், தனது ரூபாய் 45 இலட்சம் திருடு போனதாக காவல்துறையனரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீஸார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியின் கார் ஓட்டுனர் நாராயணன் ,தனது நண்பர்களுடன் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து நாராயணனை பிடித்து விசாரணை செய்ததில் திருடு போன பணம் 2 கோடியே 60 இலட்சம் என தெரிய வந்தது. இதில் ... Read More »

குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ள கிராம நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

வேடசந்தூர் அருகே டொக்குவீரன்பட்டி சேர்ந்த குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி வேலுச்சாமி என்பவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது டொக்குவீரன்பட்டி கிராமம் .இக்கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமரிவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலுச்சாமி நத்தம் பொறும்போக்கு இடத்தில் 2.10 சென்ட்டில் வீடு கட்டி உள்ளார். ஊருக்கு பொதுவான இடத்தில் வீடு கட்டி இருப்பதால் உடனடியாக ... Read More »

திண்டுக்கல் அருகே மாயனத்திற்கான பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!!

திண்டுக்கல் அருகே மாயனத்திற்கான பாதையை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.திண்டுக்கல் அருகே உள்ளது அழகர்நாயக்கன்பட்டி கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு சொந்தமான மயானம் இவ்வூர் அருகே உள்ளது. மாயனத்திற்கான பொதுபாதையை இக்கிராம மக்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சிமரத்துபட்டியை சேர்ந்த துரை ராஜ், துரையப்பா, ரமேஷ், ஆகிய மூவர் தங்களுக்கு சொந்தமான 9 சென்டு நிலம் என கூறி ... Read More »

ராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாகராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள்.. காவல்துறை தீவிர விசாரணை!!

ராமேஸ்வரம் அருகே கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்டியபோது பெட்டி, பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயிற்சி மேற்கொண்ட இடம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வசித்து வரும் எடிசன் என்பவரது வீட்டில் கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்ட முயற்சித்துள்ளனர். அப்போது பள்ளத்தில் சிறு, சிறு பெட்டிகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு பெட்டியை பரிசோதித்தபோது, துப்பாக்கித் தோட்டாக்கள் ... Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கு! தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு உத்தரவு!!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உயர்நீதிமன்ற கிளையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அ மர்வு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதேபோன்ற 10 வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இருப்பதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகள் தொடரப்பட்டிருப்பதாகவும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com