Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 31
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 31)

மாவட்டம்

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்ட முயன்ற மகன்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள கீழ் காமாண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் ஒரு ஸ்ரீதர் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணிக்கும் அவரது மனைவி ஜெயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.மேலும்இ அவரது மனைவி ஜெயலட்சுமி அவரது தயார் ஊரான மேட்டூருக்கே சென்று வாழ்ந்து வருகிறார்.இந்தநிலையில் சுப்பிரமணி வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற வைப்புநிதி வந்துள்ளது.இந்தநிலையில் சுப்பிரமணியின் ... Read More »

ஆசிரியர் கைது தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு -முன் விரோதம் காரணமாக ஆசிரியர் மீது பாலியல் குற்றம்சாட்டி அவரை தாக்கியதாக குற்றசாட்டு.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் முன் விரோதம் காரணமாக ... Read More »

மன்னார்குடி அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி 7 பேர்மீது தாக்குதல் 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கமலாபுரம் என்ற இடத்தில் காரில் வந்த சிலர் சந்தேகம் படும் வகையில் சுற்றி திரிந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் சந்தேகம் அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகளை கடத்த வந்தவர்களாக இருக்கும் என சந்தேகமடைந்து அவர்களை தாக்கி வடபாதிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களால் தாக்கப்பட்ட திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி (24), பிரேம் (24), சத்யா (23) கார் ஒட்டுநர் ஐயப்பன் (42) புவனே~;வரன் (27)உள்ளிட்ட ... Read More »

தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி  செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்!!

சென்னை புறநகர் பகுதியில் உள்ள வண்டலூர்- மீஞ்சூர் அடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மதுரவாயல்- தாம்பரம் தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.இங்கு இருசக்கர வாகனங்கத்தில் செல்பவர்களை பின் தொடரும் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நொடியில் அவர்கள் அணிந்து இருக்கும் தங்க நகை மற்றும் செல்போனை பறித்து சென்று வந்தனர். கடந்த வாரம் 400 அடி வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற டெய்சிராணி என்ற பெண்ணிடம் 12 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.இதனை ... Read More »

சேலம் – சென்னை 8 வழி,பசுமை சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு! நில அளவீடு பணியை தடுத்த பெண்கள் கைது!!

சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் பாரப்பட்டி பகுதியில் எட்டு வழிசாலை திட்டத்திற்காக நில அளவீடு பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தர மறுத்த விவசாயிகளை ... Read More »

மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு !!

எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைதடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கண்டித்து  தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்றுரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக  திருச்சிமாவட்டம் ,மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணப்பாறை இரயில் நிலைத்தில் மறியலில் ஈடுபடமுயன்றனர். ஆனால் காவல்துறையினர்ரயில் நிலையத்திற்குள் செல்லமுடியாதவகையில் தடுப்புவேலிகள் அமைத்திருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பு வேலிகளை தள்ளிக் கொண்டு உள்ளே செல்லமுயன்றதால் போரட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தடுப்பு வேலிகளை தாண்டிச் சென்றவர்களை ... Read More »

கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் திருட்டு 8 லாரிகளை அதிரடியாக பறிமுதல்!!

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே, சட்டவிரோத மணல் கொள்ளை காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் தீவிரமாக பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பௌத்தரம் பகுதியில், கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு கொணடிருக்கும் போது, கோவையை நோக்கி சென்ற 6 லாரிகள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரிகளை கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு காவல்துறை உதவியுடன் அனுப்பி ... Read More »

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலேசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கு எதிராக தொண்டர்கள் ரகளை!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் அவைத்தலைவர் ராமுத்தேவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான தங்கதுரை பேசும் பொழுது தலைமை அறிவித்த 12 ஒன்றிய செயலாளர்களை விடுத்து புதிதாக நிர்வாகிகளை அறிவித்தார்.இதில் திண்டுக்கல் ஒன்றிய கழகத்திற்கு ஒன்றி செயலாளராக உள்ள வழக்கறிஞர் கருணாகரன் பெயரை விடுத்து வேறு புதிய நபரின் ... Read More »

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் அய்யனார்கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா!!

  அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் வயல்காட்டுபகுதியில் பழமையான அய்யனார்கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டு தோறும் கிராமத்தார்கள் சார்பில் மழைவேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி கடந்தமாதமே கூத்தாடிவயல் கிராமத்தார்கள் தாங்கள் கோயிலுக்கு தேவையான அய்யனார்,கருப்பர்,குதிரை,காளைமாடுமற்றும் மதளைகளை செய்ய மண் சிற்பிகளிடம் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் தெய்வத்தின் வாகனமான குதிரை செய்து அதற்கு வர்ணம் தீட்டி  வழிபாட்டிற்கு தயாரான நிலையில் கிராமத்தார்கள்  காலை அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிN~கம் செய்து அதனை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்து கிராமத்தார்கள் மேளதாளம் முழங்க குதிரை செய்யும் சிற்பிகள் ... Read More »

அறந்தாங்கி யூனியன் அலுவலகம் தேசிய ஊரக வேலை கேட்டு பெண்கள் முற்றுகை!!

அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஊராட்சிகளில் ஒன்று மாத்தூர் ராமசாமிபுரம்.இந்த ஊராட்சியில் உள்ளவர் முதன்மை தொழிலாக விவசாயம் செய்து வருகிறார்.இந்நிலையில் ஒன்றிய அளவில் தற்போது தேசிய ஊரக வேலை பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு பணிகள் நடந்துவரும் நிலையில ;மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிக்கு கடந்த ஒருவருடமாக பணிகள் ஒதுக்கவில்லை என்று காரணம் காட்டி மாத்தூர் ஊராட்சியை சேர்ந்த பெண்கள் அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின்னர் அவர்களிடம் அறந்தாங்கி பிடிஒ மணிமேகலை பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் இன்னும் சில தினங்களில் தாங்களுக்கு பணி வழங்கப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com