Monday , 25 October 2021
Home » மாவட்டம் (page 3)

மாவட்டம்

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நவம்பர் 14ந் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும். சென்னை திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என அவர் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களை மக்கள் மத்தியில் விளக்கிடும் வகையில், ... Read More »

சத்தியமங்கலம் அருகே உள்ள உணவகத்தில் திடீர் தீ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உணவகத்தில் பற்றி எரிந்த தீயை, 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நகராட்சி வணிகவளாகத்தில் உள்ள ஸ்ரீகண்ணாஸ் புட்ஸ் என்ற உணவகத்தில் இன்று அதிகாலை திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவை திறந்தபோது குளிர்சாதனப்பொட்டி மற்றும், மரச்சாமான்களும், உணவுபொருள்களும் எரிந்து கொண்டிருந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு தீ அணைக்கப்பட்டது. இதில் பல லட்சம் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை ... Read More »

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை

மதுரை: விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இன்பமூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மனைவி திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More »

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி பழுதாகி நின்றது – போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரிலிருந்து ஆப்பக்கூடலுக்கு வந்த லாரி நடுவழியில் நின்றதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த ஆதனூர் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் பழுது ஏற்பட்டு நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிய லாரிகளை மலைப்பாதையில் அனுமதிக்கக்கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More »

தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுப்பாறையில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராய பாகவதர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டவுள்ள இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் வலுவோடு வைத்திருப்பதாக ... Read More »

பவானி சாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவின் சில பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த மாதம் நீர்மட்டம் 102 அடியை எட்டிய நிலையில் தற்போது மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் ... Read More »

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் கமல்ஹாசன் பரமக்குடி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன். ... Read More »

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு கூடாது- சிஐஐ மாநாட்டில் முதல்வர் வலியுறுத்தல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது எடுத்த படம். சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பும், தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய கனைக்ட்-2019 மாநாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- ... Read More »

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 16,600 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது மழை குறைந்ததன் காரணமாக அந்த அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,205 கன அடியாகக் குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 5,600 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திறக்கப்படும் ... Read More »

மாணவனைச் சுட்டது தற்செயல் விபத்து என கைதானவர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே மாணவனை சுட்டுக் கொன்ற இளைஞர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த, விஜய் என்பவர் தனது வீட்டில் வைத்து முகேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் விஜய் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com