கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிள் பதவியேற்பு விழா நடைபெற்றது தணியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்க்கு முன்னாள் ரோட்டரி சங்க தலைவரும் ஜிகே கல்வி குழும தலைவருமாகிய ஜிகே குமாரராஜா வரவேற்புரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக கௌரவ பேராசிரியர் கதிரேசன்,காட்டுன்னார்கோயில் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கதிரேசன், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளாக தலைவராக ... Read More »
மாவட்டம்
டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டமன்ற தொகுதி டி.என்.பாளையம் ஒன்றியத்தில் மக்கள் நீதி மய்ய ஆலோசனை கூட்டம் மற்றும் காமராஜர் பிறந்த நாள் தினம் அனுசரிப்பு – ஒன்றிய பொருப்பாளர் கதிர்வேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கள்ளிப்பட்டி அருகே உள்ள வேதபாறை நீர்த்தேக்கத்தை விரைந்து கட்ட வேண்டுமெனவும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. டி.என்.பாளையம் ஒன்றியப் பகுதிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இளைஞர் அணியை சேர்ந்த பிரபு, ஆனந்த குமார், வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக காமராஜர் பிறந்த நாளை ... Read More »
கோவை கலைமகள் கல்லூரியில், மாணவி உயிரிழந்த விவகாரம்! போலி சான்றிதழ் தயாரிக்க உதவியவர் கைது!!
கோவை அருகே கல்லூரியில் 2வது மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட்டவர், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியாளர் போர்வையில் 6 ஆண்டு காலமாக பல்வேறு கல்லூரிகளில் மோசடியில் ஈடுபட்டு வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி லோகேஸ்வரியின் மரணத்தை தொடர்ந்து, அதுகுறித்து விசாரிக்க, பேரூர் காவல்துறை ஆய்வாளர் மனோகரன், ஆலாந்துறை காவல்துறை ஆய்வாளர் தங்கம் ஆகியோரைக் கொண்ட தனிப்படையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி அமைத்தார். இந்த தனிப்படையினர் ஆறுமுகம் தொடர்பான விவரங்களை திரட்டியதில், நெல்லையை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம் என்றும், சென்னை கேளம்பாக்கத்தில் வசித்து ... Read More »
கோவையில் என்.எஸ்.எஸ். பயிற்சியின்போது, மாடியிலிருந்து விழுந்து மாணவி பலி!
கோவை தனியார் கல்லூரியில் என்.என்.எஸ் பயிற்சியின் போது தவறி விழுந்த சம்பவத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நரசிபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் என்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஆறுமுகம், கல்லூரியின் 3-வது மாடி விளிம்பில் நின்று கொண்டு, கீழே குதிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். சில மாணவிகள் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கீழே மாணவர்கள் பிடித்திருந்த வலையில் குதித்தனர். அவர்களைத் தொடர்ந்து, பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவியான லோகேஸ்வரி குதிக்க முன்வந்தார். ... Read More »
சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட்
ராமநாதபுரத்தில், கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார். இராமநாதபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி,கிண்டல் செய்வது தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார். Read More »
மக்கள் நீதி மய்ய கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More »
தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்த அவர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பை தப்பி ஓடினார்.பின்னர், தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. ... Read More »
சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை
சேலத்தில் ரவுடியை வெட்டி கொன்ற வழக்கில், எட்டு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன். பிரபல ரவுடியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலருக்கும் நியாய விலை கடையில் அரிசி வழங்கி கடத்தல் செய்வதில் மோதல் இருந்து வந்துள்ளது. இதையறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் இரு தரப்பினர்களை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரவுடி மோகன் தனது வீட்டிலிருந்து பழைய பேருந்து ... Read More »
கொடைக்கானலில் கோடை குறிஞ்சி விழா கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்துறை சார்பாக சுமார் 7 கோடி செலவில் கேரட் சுத்தம்செய்யும் இயந்திரமும் புகை மூட்டும் சேமிப்பு கிடங்கு மற்றும் மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டம் அறிவிக்கப்பட்டது இதில் முதல் கட்டமாக மேல்மலைக்கிராமமான கவுஞ்சி பகுதியில் உள்ள மலைவாழ் விவசாயிகளுக்கு கேரட் சுத்தம்செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டு செயல்பட்டுவந்தது இதனை இன்று மாவட்ட ஆட்சியர் வினய் அவர்கள் இந்த இயந்திரத்தை பார்வையிட்டார் அதனை தொடர்ந்து மன்னவனூர் பகுதியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாக கேரட் சுத்தம்செய்யும் இயந்திரம் மற்றும் மீன் பண்ணை அமைப்பதற்கு ... Read More »
ஓசூர் அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதார துறையினர் திடிர் ஆய்வு!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது இந்த ஆய்வை மத்திய சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் பிரசாந்த் மேற்கொண்டார் கடந்த இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு தேசிய அளவில் 21 மாநிலங்களில் மாதரி சுகாதார அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகத்தில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி சுகாதார மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் செயலாக்கம் கொடுப்பதற்காக குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மருத்துவர் பிரசாந்த் ஓசூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ... Read More »