Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 28
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 28)

மாவட்டம்

லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: மாவட்டம் முழுவதும் 3ஆயிரம் வாகனங்கள் ஓடாது!!

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் டிப்பர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வண்டலூரில் காஞ்சிபுரம் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர்அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு தொண்டு நிறுவனங்களின் வதந்தியே காரணம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. இதில் 13 அப்பாவி பொது மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த ஆலை மூடப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலை மூலம் தூத்துக்குடி பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது. காற்று மாசு அடைந்துள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகின்றன. புற்றுநோய் பரவுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.இது உண்மைதான் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க நடவடிக்கைகள் தொடங்கின. இதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். 100-வது நாள் ... Read More »

இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா மற்றும் போதைபொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன.இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் மண்டம் அருகே உள்ள சீனியப்பா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் ... Read More »

லால்குடி அருகே பெண் படுகொலை-கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்!!

திருச்சி மாவட்டம். லால்குடி அருகே ரெட்டிமாங்குடி ஊராட்சியில் உள்ள கீழத்தெருவில் வசிப்பவர் தெய்வமணி(35)இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகனும் 15 வருடங்களுக்கு முன் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகாமலேயே கண்ணன்,மணிகண்டன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்திய போது மறுத்துள்ளார். இதனால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தெய்வமணி புகார் கொடுக்க பாலமுருகனை அழைத்து பேசி திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அவரோடு சேர்ந்து குடும்பம் நடத்தாமல் தனியாகவே இருந்துள்ளார் பாலமுருகன். இந்நிலையில் ... Read More »

கொடைக்கானலில் கண் தான விழிப்புணர்வு முகாம் !!

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் Dr வள்ளி தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினராக லைன் Dr கணேசன் அவர்கள் கலந்துகொண்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு கண் தானத்தின் முக்கியத்துவத்தையும் கண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார் , இந்த நிகழ்ச்சியின் பொது கண்தானத்தின் மூலம் தற்போது ஒரு ஜோடி கண்கள் நான்கு நபர்களுக்கு பார்வை கொடுக்க முடியும் என்றும் மனித உடலுறுப்பில் வளர்ச்சியில் கண்களின் கருவிழி மாறாமல் இருக்கும் என்றும் தெரிவித்த அவர் பெண்கள் கண்களில் அழகு சாதன பொருள்கள் ... Read More »

அணையில் நீர் இருந்தும் பாசனத்திற்க்கு திறக்கப்படாமல் அதிகாரிகள் அலட்சியம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீரை நம்பியே சுற்றுவட்டார பகுதிகளில் 8000 ஏக்கர் நிலங்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர் ஆண்டுதோறும் விவசாய பாசனத்திற்க்காக ஜூன் 20 ஆம் தேதியன்று கெலவரப்பள்ளி அணையிலிருந்து நீர் திறந்துவிடுவது வழக்கம், இதனை நம்பியே,விவசாயிகள் கடன்பெற்று, நாரிட்டு விவசாய நிளங்களை தயார்படுத்தி உள்ளனர், ஆனால் இந்த ஆண்டு எதிர்ப்பார்த்தவாறு தண்ணீர் திறக்கப்படாததால் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் பாசனவசத்தி பெற்று வந்த சுமார் 8 ஆயிரம் விவசாய நிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்,கர்நாடாக மாநிலங்களில் ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இரண்டாம் கட்டமாக 40சதவீத ரசாயண பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் வெளியேற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 17 ஆம் தேதி கந்தக அமிலம் சேமிப்பு கொள்கலனில் கசிவு ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாத் தலைமையிலான ஆய்வு குழு ஆய்வினை மேற்கொண்டது. இதில் கந்தக அமில கொள்கலனில் லேசான கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டதை  தொடர்ந்து அதனை அகற்றும் பணி கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு 7 தினங்களில் 2124 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு நியமித்த உயர்மட்ட ... Read More »

தண்ணீர் திறப்பது காவிரி ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் !!

தமிழ்நாட்டில் காரைக்கால் உட்பட12 மாவட்டங்கள் ஒரு போக சம்பா சாகுபடி சுமார் 6.95 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ள நேரடி விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஜூலை 19ல் மேட்டூர் அனை திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.ஜூன் முதல் வாரமே கர்நாடக அனைகள் நிரம்பிய நிலையில் காவிரி ஆணையம் உத்திர விட்ட 31 .25 டிஎம்சி தண்ணீரை விடுவித்திருந்தால் குறுவை சாகுபடி மேற்கொண்டிருக்க முடியும்.உபரி நீரை கர்நாடகா விடுவிப்பதால் காவிரி டெல்டா வடிகால் பகுதியாக மாறிவிட்டது ... Read More »

பள்ளிக்கு குழந்தைகள் செல்வதில் பாதிப்பு பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததால் பரபரப்பு!!

கரூர் மாவட்டம் கிருஷ்னராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட ஆண்டிபாளையம் பகுதியில் அரசு துவக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-முதல் 5-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் நடைபாதை பல வருடங்களாக இருந்து வந்தது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் வீடு கட்டுவதற்க்காக கட்டுமான பொருட்களை கொண்டு வந்து அவர் இடத்தில் இறக்கி இருந்தார். பொருட்கள் களவு போகமல் இருப்பதற்க்காக அவரது வீட்டின் அருகே வேலி அமைத்திருந்தார். இந்தபாதை வழியாகத்தான் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிகுழந்தைகள் சென்று வந்தனர். ... Read More »

கேபிள் ஆப்பரேட்டர் வீட்டு பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருட்டு!!

திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து பஞ்சாயத்துக்குட்பட்டது நல்லாம்பட்டி ஆகும்.இங்குள்ள ஒடுக்கம் ரோடு விஎஸ் நகரில் வசிப்பவர் பாஸ்கர் கேபிள் ஆப்பரேட்டராக உள்ளார்.இவரது மனைவி மேரி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகின்றார்.இவர்கள் இருவரும் பணியின் நிமித்தம் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீடு பூட்டி இருப்பதை நோட்டம் விட்ட மர்ம நபகர்கள் வீடடின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோ கதவுகளை திறந்து(பூட்டவில்லை) பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளை திருடி சென்றுள்ளனர்.மதியம் உணவு அருந்த வீட்டிற்கு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com