Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 26
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 26)

மாவட்டம்

பசுமை வழி சாலை இறுதிகட்ட பணி பாதிக்கப்பட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற காவல்துறையினர்

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அளவை கல் பதிக்கும் பணி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மூன்று கட்டமாக கல் பதித்து அளவிடும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் ரமேஷ் என்பவரது நிலத்தில் கம்பி முள்வேலி அமைத்து அரசு அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். கடும் எதிர்ப்பால் 5 முறைக்கு மேல் சென்று நிலத்தை அளவீடு செய்யாமல்; அப்பகுதியில் ... Read More »

மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாபெரும் கபடி போட்டி

சென்னை ஆவடி அடுத்த பாலவேட்டில் மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாவட்ட அளவிலான இரண்டு நாள் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. பிரிஸ் டீ.ஜே. கலை நிகழ்ச்சி உரிமையாளர் அபிராஜ் மற்றும் ஆலை ப்ரெண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரத மாநில இளைஞர் அணி துணை பொது செயலாளர் லயன் பீரீஸ் பன்னீர் கலந்து கொண்டார். சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன. நான்கு ... Read More »

அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறந்த சம்பவம் வருவாய்த்துறையினர் விசாரணை

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மதியம் தேசியகொடி அரைக்கம்பத்தில் பறந்துள்ளது.இச்சம்பவம் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது.தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றனர்.இந்திய தேசிய கொடி நாட்டில் துக்கம் அனுசரிக்கும் போது தேசிய தலைவர் அல்லது மாநில அளவில் கட்சி பிரமுகர்கள் இறந்தால் மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் ஆனால் இந்த பள்ளியில் எதற்காக தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர் என்பதும் இதனை ... Read More »

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர். ஒகேனக்கல்:கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 66 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் ... Read More »

ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை

கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 25). இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.இன்று காலை பட்டாலியன் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.சம்பவ ... Read More »

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக, தண்ணீர் திறப்பு!

மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், காவிரி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக கல்லணை இன்று திறக்கப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், கர்நாடக அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். இந்த தண்ணீர், நேற்று திருச்சி முக்கொம்புவிற்கு வந்தடைந்த நிலையில் ... Read More »

நெல் விதை மற்றும் உரத்தட்டுப்பாடு அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் குண்டாறு, கருப்பா நதி, அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் போன்ற அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போல் அருகில் உளள அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள தென்மலை நீர்த்தேக்கம் 115.82 அடி கொண்டது. இந்த அணையும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 132 அடியுள்ள அடவி ... Read More »

வனப்பொருள் சேகரிக்க தடை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் மலைப்பகுதியை உள்ளடக்கியதாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கெத்தேசால், கேர்மாளம், ஜே.ஆர்.எஸ் புரம், செலுமிதொட்டி, கானக்கரை, செலுமிதொட்டி, காடட்டி, கோட்டமாளம், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயம் மற்றும் வனப்பொருள் சேகரிப்பு முக்கிய தொழிலாகும். வனத்தில் உள்ள தேன், நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய், சீமார்புல், வேப்பங்கொட்டை, சுண்டைக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து வருமானம் ஈட்டுவதோடு அதன் முலம் கிடைக்கும் வருவாயில் அவர்களது மானாவாரி நிலங்களில் ராகி, மக்காச்சோளம், ... Read More »

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

  நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 19 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டார். இதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இதில் அடங்கும். பிளாஸ்டிக் தடையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்  குன்னூர் பெட் போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் துணி அங்காடி, பல்பொருள் அங்காடியில் குன்னூர் நகராட்சி ... Read More »

மன்னார்குடியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப சேவை சங்கங்கள் கோரிக்கை மனு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் சேவை அமைப்புகள், வர்த்தக சங்கம், ஓய்வூதியர் சங்கம், மூத்த குடிமக்கள் சங்கங்களின் சார்பில் நகரத்தில் உள்ள நீர் நிலைகளுக்குத் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர் . அவர்கள் அளித்த மனுவின் விபரம்.காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகின்ற நீரை பயன்படுத்தி நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள தமிழக அரசும் அறிவுறுத்தி உள்ளது. மன்னார்குடி நகரத்தின் நீர்நிலைகளுக்கு வடவாறு பாசனத்தின் மூலம் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com