Monday , 25 October 2021
Home » மாவட்டம் (page 20)

மாவட்டம்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு.

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? : கல்வித்துறை திடீர் கணக்கெடுப்பு நாகர்கோவில்: அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா, தனியார் பள்ளிகளில் படிக்கிறார்களா? என்ற விபரத்தை பள்ளி கல்வித்துறை திடீரென்று சேகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 34 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மதிய உணவு, இலவச சீருடை போன்ற நல உதவிகளை அரசு வழங்கி வருகிறது. ... Read More »

ஒரத்தநாடு அருகே குடிபோதையில் 4 பேருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

ஒரத்தநாடு அருகே குடிபோதையில் 4 பேரை கத்தியால் குத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு அருகே புதூர் வடக்குதெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் சிகப்பிரகாசம் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சுதன் (25), மகாகவி (24), விஜயராகவன் (26) ஆகியோருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். அவர்களுக்கு அருகில் ஒரத்தநாடு யானைக்கார தெருவை ராகவன் (35) அவரது நண்பர்கள் தினேஷ் (31), கணேஷ் (28) ஆகியோர் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ... Read More »

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி அணைக்கு 2 ஆயிரத்து 247 கன அடியாக நீர் வந்துகொண்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் தற்போது நீர் இருப்பு 42.50 அடியாக உள்ளது. அணையின் ஏழு மதகுகளும் உறுதித்தன்மையின்றி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், வினாடிக்கு ஆயிரத்து 985 கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையை ஒட்டிய தரைப்பாலத்தை ... Read More »

மூன்று தொகுதிகளிலும் களைகட்ட துவங்கியுள்ள தேர்தல் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 3 தொகுதிகளிலும் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது. ... Read More »

வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்ற ரயில்களில் பெண் பயணிகளிடம் சங்கிலி, பணம் பறிப்பு

காட்பாடி: வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்ற ரயில்களில் பெண் பயணிகளிடம் சங்கிலி, பணம் பறிக்கப்பட்டுள்ளது. கிளித்தன்பட்டறையில் சிக்னலுக்காக காத்திருந்த 2 ரயிகளில் சென்ற பயணிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பணம் மற்றும் நகையை எடுத்து கொண்டு மர்மநபர்கள் தப்பி ஓடினர். Read More »

உயர்கல்விக்கு செல்வோர் 48.98 சதவீதமாக உயர்வு

கோபி : தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை, 48.98 சதவீதமாக நடப்பாண்டில் உயர்ந்துள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ‘இஸ்ரோ’ மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், இஸ்ரோ விண்வெளி கண்காட்சி நிறைவு விழா, ஈரோடு மாவட்டம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. விண்வெளி ஆராய்ச்சி குறித்து நடந்த, பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற, 286 மாணவ – மாணவியருக்கு, அமைச்சர் செங்கோட்டையன், பரிசு வழங்கி பேசியதாவது:இந்தியாவில் உயர்கல்விக்கு செல்வோர், 25 சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில், 48.98 ... Read More »

விழுப்புரம் அருகே திருட சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய கொள்ளையன் கைது

விழுப்புரம் அருகே திருட சென்ற வீட்டில் ஊஞ்சலாடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் சுதாகர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52), ஆசிரியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்டு வீட்டில் திருட வந்த வாலிபர் ஒருவர் வீட்டின் மாடியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜாலியாக ஆடியது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ... Read More »

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.3.84 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றிரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவர் அமெரிக்க டாலர்களை தனது கைப்கையிலும், யூரோ கரன்சிகளை உருட்டி கருப்பு டேப்பால் சுற்றி தனது ஆசன வாயில் மறைத்தும் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கரன்சிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஆசாத்திடம் ... Read More »

ஈரோடு மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தீவிர சிகிச்சை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, தாளவாடி, சத்தியமங்கலம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பேருக்கு டெங்கு நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு நேரலை கட்டுப்படுத்த 76 குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த குழுவினர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தண்ணீரை தேக்கி வைக்க ... Read More »

சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு.

சீன அதிபர் ஜின்பிங் தங்கவுள்ள நட்சத்திர ஓட்டலில் மாயமான நைஜீரியரால் பரபரப்பு மாயமான நைஜீரிய இளைஞர் சென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள் அரசு முறை பயணமாக வரும் 11-ம் தேதி தனி விமானத்தில் சென்னை வருகிறார். அன்று பகல் 1.30 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேரும் ஜின்பிங்குக்கு அங்கு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு முடிந்ததும் பகல் 1.45 மணிக்கு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com