Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 143
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 143)

மாவட்டம்

குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் புதிய படைப்பிரிவுகள் தொடக்கம்

குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் புதிய படைப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. இதற்கான கொடியை இந்திய ராணுவ தலைமை தளபதி தல்பீர்சிங் வழங்கினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும்; ராணுவ மையம் உள்ளது. இது கடந்த 1758-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த ராணுவ மையத்தில் 20-வது மெட்ராஸ், 21-வது மெட்ராஸ் படைப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளன. இந்த படைப்பிரிவுக்கு கொடி வழங்கும் நிகழ்ச்சி எம்.ஆர்.சி. ராணுவ மைய நாகேஷ் பேரக்சில் நடைபெற்றது. வழக்கமாக ராணுவ அணிவகுப்புகள், ... Read More »

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு விளைநிலங்கள் எடுக்கும் போது, விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும!

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு விளைநிலங்கள் எடுக்கும் போது விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார். தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகம் மற்றும் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து பெரியார் புரா– உழவர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை தாங்கினார். விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கலந்து கொண்டு காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான ... Read More »

கரூரில் பலத்த காற்றுடன் வீசிய சூறைக்காற்றால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் ஆறுதல்

கரூரில் பலத்த காற்றுடன் வீசிய சூறைக்காற்றால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம் கா.பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொப்பம்பட்டி, ஒண்டியூர். சம்மங்கரை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நேற்றிரவு சூறாவளி காற்று வீசியுள்ளது. இதில் அப்பகுதியில் இருந்த குடிசை மற்றும் சிமென்ட் சீட்டுகளால் வேயப்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அதனைத் தொடர்ந்து மரங்கள் சாய்ந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உடனடியாக ... Read More »

கிருஷ்ணகிரி அருகே, வங்கியில் ஜன்னல் கம்பிகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே, வங்கியில் ஜன்னல் கம்பிகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அருகே, வறட்டனபள்ளி கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று அமைந்துள்ளது. இவ்வங்கியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் வங்கியில் அதிக பணப்புழக்கம் நிகழ்வதை அறிந்த கொள்ளையர்கள் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி;த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தபோது, வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து கொள்ளைச்சம்பவத்தில் ... Read More »

ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளுக்குள் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளுக்குள் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசேமூர் எஸ்.எஸ்.பி.நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் கொசுக்கள் பெருகி டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றவில்லை என்றும், குடிநீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ... Read More »

நியாயவிலை கடைகளின் திட்டப்பணிகளை நூறு சதவீதம் கணினி மயமாக்க வேண்டும்

நியாயவிலை கடைகளின் திட்டப்பணிகளை நூறு சதவீதம் கணினி மயமாக்க வேண்டும் என்பன உட்பட 17-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், சங்க நிர்வாகிகள் உதயகுமார், ரவி, இராமலிங்கம், பாலுச்சாமி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை பாலசுப்பிரமணியம் என்பவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது, நியாயவிலை கடைகளில் பொருட்களை எடையிட்டு வாங்காமல், இருப்பு குறைவிற்கு ... Read More »

குடிநீர் வழங்கக்கோரி திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம் முன்பு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல்

குடிநீர் வழங்கக்கோரி திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம் முன்பு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி 29-ஆவது வார்டுக் உட்பட்ட நாகல்புதூர் பகுதியில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திண்டுக்கல் ரயில்வே மேம்பாலம் முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இப்போராட்டத்தால், திண்டுக்கல் நத்தம் ... Read More »

பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து நிர்வாக அலுவலர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

பள்ளிக் கல்வித் துறையை கண்டித்து நிர்வாக அலுவலர்கள் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிளஸ் 2 கணித வினாத்தாள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களைப் பணியிடை நீக்கம் செய்த தேர்வுகள் துறை இயக்குநரைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர ... Read More »

தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் மாறாக. நாம் தமிழர் கட்சி மாபெரும் சக்தியாக திகழும்!

தமிழகத்தில் அனைத்து கட்சிகளுக்கும் மாறாக நாம் தமிழர் கட்சி மாபெரும் சக்தியாக திகழும் என்று சேத்தியா தோப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்; தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்த்தில் நாம் தமிழர் கட்சியின்; தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது, தமிழகத்தில் கற்றவர்கள் அரசியலை நிரப்ப வராததால் இன்றைக்கு கயவர்கள் அரசியலுக்கு வருகின்றனர்.நாட்டில் ஊழல்,லஞ்சம்,கொள்ளை அதிகரித்து உள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும், ... Read More »

நாகர்கோவிலில் ஏழை, எளியவர்களை அலைக்கழிக்காமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பாதயாத்திரை

நாகர்கோவிலில் ஏழை, எளியவர்களை அலைக்கழிக்காமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதயாத்திரை மேற்கெர்ணடனர். அப்போது, இதுவரை விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்க வேண்டும், ஏழை, எளியவர்களை அலைக்கழிக்காமல் ஆதார் அட்டை வழங்க வேண்டும், உள்நாட்டு மீனவர்களுக்கு பஞ்சகால சேமிப்பு நிவாரண திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com