Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 140
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 140)

மாவட்டம்

ஆந்திராவில் மேலும் 130 தமிழர்கள் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்ற 130 அப்பாவி தமிழர்களை கைது செய்துள்ளதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே பல நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. போலி என்கவுன்டர் வெளியுலகிற்கு தெரியவந்ததால், துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்புவதற்காக 130 பேரையும் கைது செய்துள்ளதாக ஆந்திர போலீஸ் தெரிவித்துள்ளது எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஆந்திரா சென்றபோது ... Read More »

சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

லட்சத்தீவு, கர்நாடகம் அருகே உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த 2 தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆந்திராவில் கடப்பா, அனந்தபுரம், கர்னூல், விசாகப்பட்டினம், நெல்லூர் ஓங்கோல், சித்தூர், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டியது. தெலுங்கானாவில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக கரீம்நகர், நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையில் வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 7 பேர் பலியானார்கள். அனந்தபுரத்தில் வீடு இடிந்து மல்லம்மாள், ... Read More »

சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல் வெளியிட்டு விழா

சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதம் எண்ணாயிரம் நூல்வெளியிட்டு விழா நடைபெற்றது. சென்னையில் உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதம் எண்ணாயிரம் நூல்வெளியிட்டு விழாவிற்கு தஞ்சை தமிழ் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் இராசேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு பாரதம் எண்ணாயிரம் நூலை வெளியீட்டு சிறப்புரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் பேச வேண்டும் என்று தெரிவித்தார். இதில் தலைவர் வீரபத்திரன், இணைச் செயலாளர் சாதிக், பாரதம் எண்ணாயிரம் நூலாசிரியர் ... Read More »

வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டினத்தில் சாலைவசதி மற்றும் குடிநீர்த்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் பொன்கல்யாண சுந்தரனார் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தூத்துக்கு-திருச்செந்தூர் இணைப்பு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும், வீரபாண்டி பட்டினத்திற்கு குடிநீர்; திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ... Read More »

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும்

காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற இந்திய ஐனநாய கட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இந்திய ஐனநாயக கட்சியின் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் அதன் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஐ; தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராNஐந்திரன் மற்றும் மாநில வேந்தர் பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அப்போது, 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுகொன்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், காவிரியின் குறுக்கே ... Read More »

மாட்டு இறைச்சி தடையை வாபஸ் பெற வேண்டும்

மாட்டு இறைச்சி தடையை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது விழுப்புரம் மந்தகரை திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமை தாங்கினார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம் முன்னதாக வரவேற்று பேசினார். மேலும் இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் நெல்லை மஜீத் கலந்து கொண்டு ... Read More »

இறந்த பின்னரும் மக்கள் மனங்களில் உயிருடன் வாழ்பவர்கள் ஒரு சிலரே.

25 வயதே ஆன சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவருக்கு திடீரென மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது குடும்பத்தினர் முன்வந்ததை அடுத்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், கண்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப்பட்டது. இதன் மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்து அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை ... Read More »

தாலி அகற்றும் போராட்டம் மத உணர்வை புண்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்

திராவிடர் கழகம் அறிவித்துள்ள தாலி அகற்றும் போராட்டம் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருந்தால், அதன் தலைவர் கி.வீரமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14-ஆம் தேதி தாலி அகற்றும் போராட்டத்தை நடத்தவுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்தார். இவரது அறிவிப்பு ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. எனவே வீரமணி அறிவித்துள்ள போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ... Read More »

சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் உரிமம்பெற தகுதி பெறாத வாகன ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  பள்ளி சிறுவர்களும் மோட்டார் சைக்கிள்களை வேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இது அவர்களுக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனை உணர்த்தும் விதமாக வியாசர்பாடியில் நேற்று ஒரு விபத்து நடந்தது. வியாசர்பாடியை சேர்ந்த ஜீவா என்பவருடைய மகன் யுவராஜ் (வயது 15). மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (15), பிரேம்நாத் (15) ஆகியோரும் யுவராஜின் வகுப்பு நண்பர்கள். இவர்கள் 3 பேரும் ... Read More »

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்த தரை கடைகளை அகற்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் முன் உள்ள நடைபாதையை பழக் கடை, தேனீர் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நகராட்சி நகரமைப்பு அலுவலர் விமலா, வருவாய் ஆய்வாளர்கள் மணிமாறன் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com