Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 139
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 139)

மாவட்டம்

அரூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து மிரட்டிய நால்வர் கைது.

அரூர் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி கடந்த 8–ந் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஆர்.கோபிநாதன்பட்டியை சேர்ந்த 2 வாலிபர்கள் வலுக்கட்டாயமாக, காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தின்போது உடன் சென்ற மற்றொரு வாலிபர், பாலியல் பலாத்காரத்தை செல்போனில் படம் பிடித்துள்ளார். அதன்பின் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களின் ... Read More »

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவக்குழு ஆய்வு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சென்னை மருத்துவக்குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், நேற்று மாலையும், நள்ளிரவிலும் மேலும் 3 குழந்தைகள் மரணமடைந்தன. உடனடியாக இறந்த குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுவாசக்கோளாறு காரணமாகவே, குழந்தைகள் உயிரிழந்தாக, மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பாக சென்னையில் இருந்து சென்றுள்ள மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். Read More »

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் விழுப்புரம் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 7 குழந்தைகள்  உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு பிரிவுக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக வருகின்றனர். இங்கு கடந்த 12–ந்தேதி திருக்கோவிலூர் தாலுகா ஏமப்பூரை சேர்ந்த ராகேஷ் என்பவரின் மனைவி பார்வதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அதேப்போல் அங்கு பிரசவத்துக்காக வந்த சங்கராபுரம் சீர்பனந்தலைச்சேர்ந்த ... Read More »

யானைக்கால் நோயாளிகள் பல்வேறு அடிப்படை வசதிகளை கோரி தமிழக அரசுக்கு மனு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள யானைக்கால் நோயாளிகள் இலவச பேருந்து பயண அட்டை, உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்காம் நிலையில் உள்ள 516 யானைக்கால் நோயாளிகளிகள் உள்ளனர். இவர்கள் ஒரு இடத்தில் நீண்ட நேரம் நிற்க்கவோ, நடக்கமுடியாது. இவர்களுக்கு யாரும் வேலை வாய்ப்பும் அளிப்பதில்லை. மேலும் உறவினர்களால் ஒதுக்கப்பட்டுள்ள இவர்கள் மருத்துவமனைகளுக்கு சென்றால் முறையான சிகிச்சை அளிக்காமல் புறக்கணிக்கப்படுகின்றனர். இதனால் தங்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, அரசு மருத்துவமனைகளில் ... Read More »

விழுப்புரம் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் 7 குழந்தைகள் உயிரிழப்பு.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில், 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு பிரிவுக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக வருகின்றனர். இங்கு கடந்த 12–ந்தேதி திருக்கோவிலூர் தாலுகா ஏமப்பூரை சேர்ந்த ராகேஷ் என்பவரின் மனைவி பார்வதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அதேப்போல் அங்கு பிரசவத்துக்காக வந்த சங்கராபுரம் சீர்பனந்தலைச்சேர்ந்த முனியன் மனைவி கோவிந்தம்மாளுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ... Read More »

காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர்ப் பஞ்சாயத்தாரால் தள்ளிவைக்கப்பட்ட காதல் தம்பதி

காதல் திருமணம் செய்து கொண்டதால் ஊர்ப் பஞ்சாயத்தாரால் தள்ளிவைக்கப்பட்ட காதல் தம்பதி, தங்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்ளக் கோரி தங்கள் வீட்டு முன் தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க கிளை செயலாளர் ஜெயராமன் மகன் கோவிந்தராஜ். இவர் கடந்த 12.12.2014 அன்று அதே பகுதியை சேர்ந்த அனுஷா என்பவருடன் கோவிந்தராஜ் வீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அனுஷாவின் அம்மா தனக்கும் தனது மகளுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை ... Read More »

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்17-ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தகுதி வாய்ந்த ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளன. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம். மேலும், தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை ... Read More »

அயல்நாட்டில் இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தர வேண்டும் என இறந்தவரின் தாய் கோரிக்கை.

அயல்நாட்டில் இறந்த தனது மகனின் சடலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்தவரின் தாய் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், வேங்கடத்தான்பட்டியைச் சேர்ந்த N அம்மாக்கண்ணு. தனது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 4 மகள்களையும் ஒரு மகனையும் படிக்கவைத்து பெண்களுக்குத் திருமணம் செய்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் வெல்டர் மற்றும் பிட்டர் வேலை செய்து வந்த இவரின் கடைசி மகன் வெங்கடாசலம் நண்பர்கள் உதவியுடன் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி துபைக்கு ... Read More »

நாமக்கல் மாவட்டத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள குடும்பம் தீர்வை பெற்றுத்தர கோரிக்கை.

தனிப்பட்ட முறையில் உள்ள கோபத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள பிரச்னையில் தலையிட்டு சுமூகமான தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.கவூண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.கவூண்டம்பாளையத்தில் வசித்து வரும் பழனிவேல் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர் சிலர் என் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எங்கள் வீட்டுக்கு வரும் நபர்களை யாரும் அவரது வீட்டுக்கு செல்லக்கூடாது ... Read More »

திருவள்ளுர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை

திருவள்ளுர் அருகே முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அருகே நெய்தவாயலைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் திருவெள்ளைவாயலில் உள்ள உணவகத்தில் உணவூ வாங்கி கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏற முயன்றார். அப்போது அங்கு வந்த 6 பேர் நாகராஜை கத்தியால் சராமரியாக வெட்டி விட்டு தப்பிச் ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com