Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 138
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 138)

மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதிய கொலைகளை தடுக்க விசேட நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜாதிய கொலைகளை தடுக்க பேருந்துகளில் வெப் கேமரா வைத்து கண்காணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து ஜாதி ரீதியான மோதல்கள் காரணமாக தொடர்ந்து கொலைகள் நடந்து வந்தது. இதனை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே நடந்து வரும் கொலைகளுக்கு முக்கிய காரணம் வயல்களில் மாடு மேய்க்கும் போது ஏற்படும் பிரச்னைகள், பேருந்துகளில் செல்லும் பெண்களை கேலி செய்வதால் ஏற்படும் ... Read More »

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இழப்பிடு வழங்க கோரிக்கை

விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் உயிர் இழந்த 8 பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இழப்பிடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் நிர்வாக நீர்கேட்டை சரிசெய்திட வேண்டும் என்றும், உயிர் இழந்த 8 பச்சிளம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிய இழப்பிடு வழங்க ... Read More »

சிவகங்கையில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

சிவகங்கையில் நேற்று பலத்த மழை பெய்ததால். மின்னல் தாக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணியான அக்காள் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்தநிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் உக்கிரத்துக்கு இடையே சற்று குளிர்ச்சி காணப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. அப்போது சிவகங்கையை அடுத்த இடையமேலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மனைவி மகேஸ்வரி, அவரது தங்கை ராஜகுமாரி ஆகியோர் இருசக்கர ... Read More »

நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழிலாளர் மற்றும் உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி விசைத்தறித் தொழிலாளர் மற்றும் உரிமையாளர்களுக்கு, 20 சதவீத கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ளாத விசைத்தறித் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் முத்தரப்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததோடு, போராட்டத்தை தொடர்வதாகவும் அறிவித்தனர். கூலி உயர்வு வழங்கக்கோரி கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செங்கோடு கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், கூலி உயர்வு பிரச்னைக்கு ... Read More »

உண்டு உறைவிடப் பள்ளிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை வழங்கக் கோரி, நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

உண்டு உறைவிடப் பள்ளிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதியை வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொண்டு நிறுவன நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் தொண்டு நிறுவனம் மூலம் உண்டு உறைவிடப் பள்ளி நடத்தி வருபவர் ஞானசேகரன். இந்தப் பள்ளியில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள், வறுமையால் பள்ளி செல்லாக் குழந்தைகள் என 47 பேர் தங்கிப் படித்து வந்தனர். இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கும் உணவு, ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள், ... Read More »

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன் (35). ஊராட்சித் துணைத்தலைவராக இருந்து வந்தார். இவர், திங்கள்கிழமை பிற்பகலில் தனது பைக்கில் பொருள்கள் வாங்க பாளையங்கோட்டைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தபோது சிவலப்பேரி சாலையில் சக்திநகர் பகுதியில் பைக்கில் வந்த மர்மகும்பல் பாலமுருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். Read More »

திருநின்றவூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை

திருநின்றவூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி கைபந்து விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளுர் மாவட்டம் திருநின்றவூரில் ஜாய் கிட்னஸ் சமுக நல அமைப்பு சார்பில் டானியல் ராஜம்மாள் கைபந்து போட்டி நடைபெற்றது. இதில் சென்னை திருவள்ளுர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என 36 அணிகள் பங்குபெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் டி.எஸ்.மசாலா அணியும், ஆண்கள் பிரிவில் பேரம்பாக்கம் அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் ரொக்க ... Read More »

கூடலூரில் இளம்பெண்ணை கொலை, இளைஞர் ஒருவர் கைது.

திட்டக்குடி அருகே கூடலூரில் இளம்பெண்ணை கொலை செய்தது தொடர்பாக ரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இந்நிலையில், செல்வராணி கூடலூர் காலனியில் உள்ள அவரது வீட்டில் படுக்கை அறையில் ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினரான பெரம்பலூர் மாவட்டம், இறையூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் செல்வராணியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். அதன்பேரில் ... Read More »

கொடைக்கானலைச் சுற்றி உள்ள வனப்பகுதிகளில் நக்சல் தீவிரவாதிகள் இல்லை

கொடைக்கானலைச் சுற்றி உள்ள வனப்பகுதிகளில் நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நக்சல் தீவிரவாதிகள் இல்லை என உறுதியானது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான வடகவுஞ்சி அருகே உள்ள பொய்யா வழி வனப்பகுதிக்குள் கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் நாள் நக்சல் தீவிரவாதி நவீன் ப்ரசாத் நக்சல் தடுப்பு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஆனால் இவரது கூட்டாளிகள் 9 பேர் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் நக்சல் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நாளில் ... Read More »

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் காவல் நீட்டிப்பு.

வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோருக்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருநெல்வேலியில் வேளாண் பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் முத்துக்குமாரசாமி (57). இவர்இ கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com