Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 131
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 131)

மாவட்டம்

தென்காசியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இரண்டு பேர் பலி

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இரண்டு பேர் பரிதபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். ராகுல் கீழச்சுரண்டையை சேர்ந்த உறவினரான குருநாதனுடன் கீழச்சுரண்டையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் பராங்குன்றாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கீழச்சுரண்டை அருகே வரும் போது திருநெல்வேலியில் இருந்து புளியங்குடி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் ராகுல் மற்றும் குருநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ... Read More »

காரைக்குடியில் கிணற்றில் முழ்கி இளைஞர் ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கிணற்றில் முழ்கி இளைஞர் ஒருவர் பரிதபமாக உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் தெருவை சேர்ந்தவர் அழகப்பன் மகன் கார்த்திகேயன். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்தார். பலவான்குடி கோயில் திருவிழாவுக்கு சென்றவர் நண்பர்களுடன் சின்ன குன்றக்குடியில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால், கரையில் இருந்து குளித்தவர், தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து காரைக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் ... Read More »

சன்கடை ஊழியர் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதால் ஊழியர்கள் போராட்டம்

தேனி-பெரியகுளத்தில் ரேசன்கடை ஊழியர் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதால் அனைத்து ரேசன் கடை ஊழியர்களும் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் ரமேஷ் வடகரையில் உள்ள 15 நம்பர் ரேசன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் விசம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசுதலைமை மருத்துவமனையில் தீவிர சிகி;ச்சை பிரிவில் சேர்த்;துள்ளனர். தற்கொலை முயற்சி செய்து கொள்ள முயன்ற ரமேஷ் எழுதிய கடிதத்தில் மாவட்ட வழங்கள் அலுவலர் பேபி ரேசன் ... Read More »

விழுப்புரம் மாவட்டம், நீலமங்களத்தில் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நீலமங்களத்தில் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மாணவன் வில்லியன்குமார். ஜனனி, மோகூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் பவித்ரா ஆகிய மூன்று பேரும் நீலமங்கலத்தில் உள்ள ஏரியில் இறங்கி மீன்பிடித்துள்ளனர். அப்போது வில்லியன்குமார் நீரில் மூழ்கியுள்ளான். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் ஏரியில் இறங்கி வில்லியன்குமாரை மீட்க முயன்றனர். அப்போது பவித்ரா, ஜனனி ஆகியோரும் நீரில் மூழ்கி இறந்தது ... Read More »

பெண் மருத்துவரைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபர் கைது

அம்பத்தூர் அருகே பல் மருத்துவமனையில் நுழைந்து பெண் மருத்துவரைக் கொன்று, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல் கட்டுவதற்காக சங்கீதாவின் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆவடியை அடுத்த கோவில் பதாகையைச் சேர்ந்த  38 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர். பல் மருத்துவமனையில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு அந்த நபர் திட்டமிட்டு சங்கீதாவைக் கொன்று, அவரது நகைகளைக் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (36). தனியார் ... Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் முதலிடங்களை பெற்ற மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை தனியார் பள்ளி மாணவர்களே பிடித்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டங்களில் 289 பள்ளிகளில் இருந்து, 41 ஆயிரத்து 365 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 36 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த தனியார் பள்ளிகள்: ... Read More »

பிளஸ் 2 தேர்வு – மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மதுரை மாவட்டத்தில் 92.87 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை, சிஇஓ., பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 1200க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். செயின்ட் ஜோசப் பள்ளியை சேர்ந்த அக்ஷ்யா என்ற மாணவி 1200க்கு 1184 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், சிஇஓ., பள்ளியை சேர்ந்த மாணவர் ஜோதி சரண் 1200க்கு 1183 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். Read More »

கடலூர் மாவட்டத்தில் 84.69 மாணவர்கள் தேர்ச்சி

கடலூர் மாவட்டத்தில் 84.69 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்…. நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் எஸ் சர்வேஸ் 1187 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். வடலூரை சேர்ந்த மாணவி எஸ்.கீர்த்தனா 1182 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் எஸ்.சவன்த் டே ஈடன் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர். கடலூர் புனித ஆனிஸ் பள்ளியை சேர்ந்த எம்.பவித்ரா 1181 மதிப்பெண்களை பெற்று மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். கடந்தாண்டை  விட இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை .54 சதவீத அதிகரித்துள்ளது. Read More »

பிளஸ் 2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில் 83.08 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தில்  83.08 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 815 பேர் தேர்வு எழுதினர்.  மாவட்ட அளவில் மேல்மறவக்காடு தேவி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி  ஆர். உமாமகேஸ்வரி 1180 மதிப்பெண் பெற்று முடல் இடம் பிடித்துள்ளார். திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி வி.லட்சுமி 1178 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மன்னார்குடி துய வளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி அரசன் குமாரி 1177 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் ... Read More »

வையம்பட்டி வாரச்சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பலத்த பாதுகாப்புடன் அகற்றம்

திருச்சி மாவட்டம் வையம்பட்டி வாரச்சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை பலத்த பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் காய்கனி வாரசந்தை உள்ளது. இந்த வாரசந்தையின் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி பொதுநல வழக்கு தாக்கல்செய்தார். இந்த மனுவின் அடிப்படையில் வாரசந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து வாரசந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை மணப்பாறை வட்டாட்சியர் கமலகண்ணன், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் சித்ரா ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com