Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 130
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 130)

மாவட்டம்

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உள்பட இருவர் பலி

திருநெல்வேலி அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துக்களில் இளைஞர் உள்பட இருவர் இறந்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி மகன் சரவணன் (24). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். 2 வாரங்களுக்கு ஒரு முறை விடுமுறையில் சொந்த ஊருக்கு சரவணன் வந்து செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து சரவணன், தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம். திருநெல்வேலி அருகே ஆலங்குளம் பிரதான சாலையில் அபிஷேகபட்டியில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ... Read More »

ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணைகள்.

ஆவின் பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் பிரமுகரான வைத்தியநாதனின் மனைவி ரேவதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார். திண்டிவனத்தை அடுத்த ஊரல் பகுதியில் நடந்த ஆவின் பால் கலப்படம் தொடர்பாக சென்னையை சேர்ந்த அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் உள்பட 19 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 19 பேரை தவிர வைத்தியநாதனின் மனைவி ரேவதி, பால் ... Read More »

மர்மமான முறையில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்.

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கீரமாத்தூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் வயலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீரமாத்தூரைச் சேர்ந்த தொழிலாளி பெரியநாயகம் (வயது 65). இவர் எரும்பூரைச் சேர்ந்த நைனா முகம்மது என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு வயலுக்கு காவலுக்கு சென்றிருந்தார். அங்குள்ள பம்புசெட் அருகில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரை பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு ... Read More »

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு இரண்டு வாரங்களில் வழங்கப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணம், மீனவர் சேமிப்பு நிதி என மொத்தம் ரூ. 19.41 கோடி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் நேற்று தெரிவித்தார். தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் அவர் பேசும்போது, `மாவட்டத்தில் தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தில் 18,463 மீனவர்களுக்கு தலா ரூ. 2,700 வீதம் ரூ. 4.67 கோடி, தேசிய மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தில் 16,429 மீனவ மகளிருக்கு ... Read More »

பாலியல் தொந்தரவால் திருநங்கை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

இளைஞர்களின் பாலியல் தொந்தரவால் திருநங்கை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்தவர் திருநங்கை மதுமிதா. திருநங்கையான இவர் மீது இளைஞர்கள் சிலர் கொடுத்து வந்த பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட  அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீ காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருநங்கை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து போலீஸார் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் ... Read More »

சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரின் தந்தையை கொலை செய்த அண்ணன்.

திண்டுக்கல்லில் தனது சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரை பழிவாங்குவதற்காக, அவரது தந்தையின் தலையை துண்டித்து படுகொலை செய்த இளைஞர் தனது கூட்டாளிகள் இருவருடன் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். திண்டுக்கல் ஓடையூரைச் சேர்ந்தவர் க. கிருஷ்ணமூர்த்தி (49). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவர் என்ஜிஓ காலனி உழவர் சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற கிருஷ்ணமூர்த்தியின் ... Read More »

திண்டுக்கலில் பந்தல் ஒப்பந்ததாரர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் என்ஜிஓ காலனி அடுத்துள்ள ஓடையூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). பந்தல் ஒப்பந்ததாரராக இருந்தார். திண்டுக்கல் உழவர் சந்தை பகுதியில் வியாழக்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியின், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து, திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். Read More »

கல்பாக்கம் அருகே கோஷ்டி மோதலில் பெண் பலி, குறித்த பகுதியில் பரபரப்பு

கல்பாக்கம் அருகே கோஷ்டி மோதலின்போது காவல்துறையினர் தடியடி நடந்தது. அப்போது ஒரு பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சி புரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்துள்ள கடலூர் கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியில் கடந்த 13–ந் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடலை ஒலிபரப்பினர். இதற்கு வேறு ஒரு பிரிவை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மறுநாள் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியை கல்பாக்கம் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து ... Read More »

வேதாரண்யம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் பலி.

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் பரிதபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் அருண்குமார். இவர் டிப்ளமோ முதல் ஆண்டு படித்து வந்தார். அருண்குமாரும் அதேபகுதியை சேர்ந்தவர்கள் கந்தசாமி மகன் குமரகுருபரன் , சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் அண்டர்காட்டிலிருந்து வேதாரண்யத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனர். பூப்பெட்டி அருகே இவர்கள் சென்ற போது வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற காரும், இருசக்கரவாகனமும்; ... Read More »

கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டையில் கார்பைடு கொண்டு பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் மணி தலைமையில் சுகாதார பிரிவினர் நகரில் மாம்பழம் குடோன்களை ஆய்வு செய்தனர். விருதுநகர் ரோடு வேலாயுதபுரம் பள்ளி கூட தெருவில் மாம்பழங்கள் விற்பனை செய்யும் பவுன்பாண்டி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு கார்பைடு கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது தெரிய வந்தது. 5 டன் மாம்பழங்களை நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆணையாளர் மணி கூறும் போது ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com