Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 129
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 129)

மாவட்டம்

கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் பெட்ரோல் குண்டுகள் மீட்பு.

கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் சாலையோரம் கிடந்த பை ஒன்றில் 15 பெட்ரோல் குண்டுகள் இருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்டெடுத்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டு வாயிலில் ஒரு பை இருந்ததைப் பார்த்த பெண், அதனை எடுத்துப் பார்த்த போது, அதனுள் 15 பெட்ரோல் குண்டுகளும், ஒயர்களும் இருந்ததைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அந்த பையினுள் ஒரு கடிதம் இருந்தது. அதில், எங்கள் அமைப்புக்கு ஆதரவு கொடுத்திருப்பதற்கு நன்றி என்று பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ளது. உடனடியாக அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர், ... Read More »

பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது

பெண்ணை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.ஊ.சி சாலையைச் சேர்ந்தவர் நல்லமுத்து மகன் கண்ணன் (27). இவர் மன்னார்குடி தெப்பக்குளம் பகுதியில் வசித்து வந்த ராஜலட்சுமி (61) என்ற பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு கழுத்தை அறுத்துக்கொலை செய்து கொலை செய்தார். இச்சம்பவம் மட்டுமின்றி மன்னார்குடி பகுதியில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ... Read More »

திருச்சியில், மகனை கொலை செய்த தந்தை – விசாரணைகள் ஆரம்பம்

திருச்சியில் மனைவிகளுடன் வாழாமல் சுற்றித்திரிந்த பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த அவரது தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகிலுள்ள ஜெய்நகரைச் சேர்ந்தவர் நடேசன். ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர். இவரது மூத்த மகன் சுரேஷ். மின்னணு பொறியியல் பயின்ற இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் கடந்த சில ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வருகிறார். மேலும், சுரேஷ் தீவிர மதுப்பழக்கம் உள்ளவர். இவருக்கு இரு முறை திருமணம் செய்தும், இவரது மதுப் பழக்கத்தால் சுரேஷின் மனைவிகள் ... Read More »

நாமக்கல் மாவட்டம், சாலை விபத்தில் இருவர் பலி,

நாமக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2-பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் செவிட்டுரங்கம்பட்டியை சேர்ந்த பெண்கள் 5-பேர் திருச்சி சாலையில் நடந்து சென்றனர். அப்போது, வலையாபட்டியில் இருந்து வந்த காரின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நடந்து சென்ற பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 2-பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோகனூர் காவல்துறையினர், ... Read More »

குடும்பத்தகராறு காரணமாக, கணவன்-மனைவி இருவரும் தற்கொலை

மதுராந்தகம் அருகே, குடும்பத்தகராறு காரணமாக, கணவன்-மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே, முன்னுத்திக்குப்பம் பகுதியில் தனியார் பண்ணை ஒன்றில் கணவர் மகேஷ் மற்றும் மனைவி லட்சுமி இருவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உட்பட 3-பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில் நேற்றிரவு விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை ... Read More »

திருப்பூர் மாவட்டத்தில் முதியவரின் மர்மமான மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்.

தாராபுரம் அருகே மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பிரிவு சாலையில முதியவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையிலும், மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததார். இதை அறிந்த பொதுமக்கள் தாராபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்தவர் பிரபல தனியார் ... Read More »

நெல்லை மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளர் ஒருவர் கைது.

நெல்லை மாவட்டம் தென்காசியில் பாலம் அமைப்பதற்கு தடையில்லா சான்று வழங்க ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுரண்டை அருகே குலசேகரமங்கலம் கிராமத்தில் உள்ள அப்பகுதி விவசாயிகளுக்கு சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்ல உரிய பாதை வசதி கிடையாது. இதனை தொடர்ந்து அந்த விளை நிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து சுமார் 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் குலசேகரமங்கலம் கால்வாயில் சிறிய ... Read More »

இராமநாதபுரம் மாவட்டத்தில் தூத்துக்குடி மீனவர்கள் இருவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சுருக்கு மடி வலையை பயண்படுத்தி மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா நரிப்பையூர் அருகே உள்ள ரோச்மா நகரில் மீன் இனப்பெருக்க காலத்தில் தடையை மீறி சுருக்கு மடி வலையை பயண்படுத்தி மற்றும் பட்டாசு வெடித்து மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்களை,ரோச்மான் மீனவர்கள் சிறைபிடித்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்த்தனர். இவர்கள் கரையோரங்களில் சுருக்குமடி வலைகளை வீசியும்,மற்றும் பட்டாசுகளை வெடித்தும் மீன் பிடிப்பதாகவும் ,இப்படி சுருக்குமடியை பயண்படுத்தியும்,பட்டாசினை வெடித்தும் மீன் பிடிப்பதால் மீன் ... Read More »

அணை புனரமைப்பு திட்ட குழுவினர் மேட்டூர் அணையில் ஆய்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் மத்திய அரசின் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்ட குழுவினர்; ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்திலுள்ள 108 அணைகளில் 740 கோடி ரூபாய் செலவில், ஐந்து ஆண்டுகளில் புனரமைப்பு மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதல்கட்டமாக 11 அணைகளில் புனரமைப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் 11 அணைகள் புனரமைப்பு பணி துவங்க உள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி மத்திய நதிநீர் ஆணைய செயற்பொறியாளர் யோகிவிஜய் அணை பாதுகாப்பு நிபுணர் வினோத் சர்மா, மேட்டூர் அணையில் ... Read More »

ஜெயலலிதா விடுதலை திருநெல்வேலியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியினர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். திருநெல்வேலி சந்திப்பில் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர் பாசறை செயலர் மு. ஹரிஹரசிவசங்கர் தலைமையில் திரண்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களுக்கு லட்டு கொடுத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com