Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 128
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 128)

மாவட்டம்

வாணியம்பாடியில் நாய்கடித்ததில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்துள்ளது

வாணியம்பாடியில் நாய்கடித்ததில் புள்ளிமான் ஒன்று உயிரிழந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியில் அங்குள்ள காப்பு காட்டிலிருந்து தண்ணீர் தேடி வந்த மான் வழி தவறி ஊருக்குள் வந்த போது நாய்கள் துரத்தி கடித்துள்ளன .அப்போது இளைஞர்கள் சிலர் அங்கு கிரிகெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர் . மானை நாய்கள் துரத்தி கடித்து கொண்டிருந்ததை பார்த்து மானை காப்பாற்ற முயன்ற போது நாய்கள் கடித்து பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலயே மான் பரிதபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மானை ... Read More »

ஐம்பொன் சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஐம்பொன் சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் வழியாக துபாய்க்கு ஒரு கண்டெய்னர் செல்ல இருந்தது. இந்த கண்டெய்னரில் உலர்ந்த தேங்காய்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த கண்டெய்னருக்குள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு சூரியபகவான் ஐம்பொன் சிலை மற்றும் கல்சிலையையும் சுங்கத்துறை அதிகாரிகள் செந்தில்நாதன், முரளி, நந்தகுமார், ரகுபதி, செல்வக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பால்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு ... Read More »

விருதுநகர் அருகே சாலை விபத்து முதியவர் பலி

விருதுநகர் அருகே சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி(70). இவர் அருப்புக்கோட்டை சாலையில் காமராஜர் நினைவு மண்டபம் முன்பு புதன்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாராம். இது தொடர்பாக சூலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து ... Read More »

உயிருடன் இருந்த குழந்தை இறந்ததாக கூறிய மருத்துவமனை, உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாகத் தெரிவித்த தனியார் மருத்துவமனையைக் கண்டித்து, குழந்தையின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் ஜெகதாபியைச் சேர்ந்தவர் கணேசன் (30). இவரது மனைவி மகாலட்சுமி(25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகாலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. குழந்தையை அடக்கம் செய்வ ... Read More »

திருச்சி மாவட்டத்தில் விபத்து ஒருவர் பலி மேலும் நால்வர் வைத்தியசாலையில்

குளித்தலை அருகே ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் தந்தை மகன் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரைச் சேர்ந்தவர் ஆனந்த் (39). இவர் தனது தந்தை லெட்சுமணராவ் (60) என்பவருடன், தனது தாய்க்கு திதிகொடுக்க முத்தரசநல்லூரிலிருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் உள்ள கோயிலுக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார். ஆட்டோவை முத்தரநல்லூர் தேவாங்கிநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50) என்பவர் ஓட்டி வந்தார். ஆட்டோ திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலம் ... Read More »

பெட்ரோல் குண்டுகளை வைத்த கூலித் தொழிலாளி கைது, தனிப்பட்ட தகறாரே காரணம்.

கோவையில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகளை வைத்த கூலித் தொழிலாளியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். கோவை அம்மன்குளம் ஏரிமேடு, வாய்க்கால் மேட்டைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவரது மனைவி காமாட்சி (30). இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காமாட்சியின் வீட்டு முன்பு ஒரு மர்ம பை கிடந்துள்ளது. பையை திறந்து பார்த்தபோது, அதில் பெட்ரோல் நிரப்பப்பட்டு, திரியுடன் 15 பாட்டில்கள் இருந்துள்ளன. மேலும் பையில் ஒரு ... Read More »

ஆலங்குடி அருகே விஷ வண்டு கடித்ததில், சுகவீனமுற்ற 40-பேர் மருத்துவமனையில்

புதுக்கோட்டையை அடுத்த ஆலங்குடி அருகே விஷ வண்டு கடித்ததில், வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 40-பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள விடுதி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது கோவிலின் அருகே உள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த விஷ வண்டுகள் பொதுமக்களை கடித்தது. இதில் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். Read More »

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை விசாரணைகள் ஆரம்பம்.

தென்காசியில் முன் விரோதம் காரனமாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகவதிபுரத்தை சேர்ந்தவர் பிஜிமோன். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பண்டாரத்திற்கும் கடந்த சிலநாட்களுக்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பண்டாரம் மது அருந்திவிட்டு பிஜிமோனியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் பண்டாரம் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிஜிமோனை தாக்கிவிட்டு தப்பி ... Read More »

குடிநீர் வழங்கக் கோரி வாணியம்பாடி, பகுதிகளில் கிராம மக்கள் போராட்டம்.

வாணியம்பாடியில் குடிநீர் வழங்கக் கோரி வாணியம்பாடி, அணைக்கட்டு பகுதிகளில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் தீடிர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறைபிடித்தனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், வாணியம்பாடி கிராமிய ... Read More »

விருதுநகரில் இளம்பெண்ணை காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

விருதுநகரில் சகோதரரி வீ்ட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்ற இளம்பெண்ணை காணவில்லையென தாயார் காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை புகார் செய்தார். விருதுநகர் அருகே பெரியார் நகரைச் சேர்ந்த மாரீஸ்வரியின் மகள் ஜோதி(17). இவர் திருப்பூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தாராம். தற்போது, பொங்கல் திருவிழாவிற்காக ஊருக்கு வந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் அருகில் உள்ள சகோதரரி வீட்டிற்கு செல்வதாக  கூறிவிட்டுச் சென்றாராம். அதையடுத்து நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர் மற்றும் தோழி வீடுகளில் விசாரித்துள்ளனர். ஆனால், ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com