Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 120
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் (page 120)

மாவட்டம்

கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய மூவர் கைது

கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்த பிரபாகர், வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பிஜி ஆகிய மூவரும் திருவனந்தபுரத்திலிருந்து நகர்கோவிலுக்கு சிலை கடத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, 3 பேரையும் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பேசியுள்ளனர். அவர்கள் கையில் இருந்த பையை சோத கன்னியாகுமரியில் ஐம்பொன் விநாயகர் சிலையை கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்த பிரபாகர், வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பிஜி ஆகிய மூவரும் ... Read More »

திருவிழாவில் குழுக்களுக்கிடையில் மோதல் விசாரணைகள் ஆரம்பம்.

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி அருகே கோயில் திருவிழாவின் போது ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பாட்டிலால் குத்திக்கொண்டத்தில் 9 பேருக்கு காயமேற்பட்டது. திருமக்கோட்டை காவல் சரகத்திற்கு உள்பட்ட பைங்காநாடு கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.இதன் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்ற போது இந்த பகுதியை சேர்ந்த ஒரே சமூகத்தை சேர்ந்த இளைஞர் சிலர் இரு குழுவாக பிரிந்து செயல்பட்டு வந்தனராம்.மேலும் இரு தரப்புக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் திடீரென ... Read More »

அதிக வெப்பம் காரணமாகவே சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சிவகாசி அருகே ஏழாயிரம்பண்ணை எனும் இடத்தில் பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இரண்டு அறைகள் தரைமட்டமாகின. விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தொழிலாளர்களுக்கு காயமும் ஏற்படவில்லை. சாத்தூர் – சிவகாசி இடையே இருக்கிறது ஏழாயிரம்பண்ணை. அந்த ஊரில் சிவசங்கப்பட்டி எனும் இடத்தில் கண்ணன் என்பவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி பெற்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 75 அறைகள் இருக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட ... Read More »

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து. மீட்புப் பணிகள் தீவிரம்.

சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூரை அடுத்த சிவசங்குபட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிமருந்துகள் உராய்ந்ததால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 90க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறின. இதனால் அப்பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ... Read More »

ஒட்டன்சத்திரம் அருகே வாகன விபத்து, இருவர் பலி மேலும் பலர் காயம்.

ஒட்டன்சத்திரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து இன்று அதிகாலை திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. 5 மணியளவில் ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு கரிலோடு ஏற்றி வந்த லாரி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. பேருந்தின் பக்கவாட்டு பகுதி சிதைந்து பலத்த சேதமடைந்து, ... Read More »

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயில் சேவை.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையிலான சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 06042: ஜூன் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண் 06044: ஜூன் 6 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, ... Read More »

புதுவையில் அக்னி வெயிலின் தாக்கம், ஜூன் 12–ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

புதுவையில் அக்னி வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. . இந்த வெப்ப நிலை மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை மேலும் 10 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 12–ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். என கல்விதுறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். எனினும்  10–ம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 2–ந் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்தது என்பது ... Read More »

வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை வருவாய் ஆய்வாளருக்கு நெருக்கடி கொடுத்த வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேரடி நியமன வருவாய்த்துறை ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை அடுத்த தொண்டராபட்டு பகுதி வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் செல்வக்குமார். அவருக்கு வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் துணை வட்டாட்;சியர் கோவிந்தராஜ் ஆகியோரின் பணிசம்மந்தமான நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சல் அடைந்து தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செல்வக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் , மனஉளைச்சல் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ... Read More »

மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி.

விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை அங்காடி தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் இந்தத் திட்டம் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் சாலை அகரம் ஊராட்சியில் மகளிர் குழு கூட்டமைப்பின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அம்மா சிமென்ட் விற்பனை அங்காடி தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ... Read More »

கந்து வட்டி கேட்டு வீட்டை பூட்டி எடுத்துச் செல்லப்பட்ட சாவி,மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கந்து வட்டி கேட்டு வீட்டை பூட்டி எடுத்துச் செல்லப்பட்ட சாவியை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் மாரிமுத்து என்ற பெண் புகார் மனு அளித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாரிமுத்து என்ற பெண் மாவட்ட ஆட்சியர் முனுசாமியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், காரைக்குடி ஆனந்த் நகரில் உள்ள எனது மகள் சசிகலாவுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறேன். சசிகலாவும் மருமகன் ராஜாவும் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். அவர்களது குழந்தைகளான துர்கா , எட்டு மாத குழந்தையான காவ்யஸ்ரீ ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com