Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 119
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் (page 119)

மாவட்டம்

கோவை ரயில்நிலையத்தில் மேல்மட்ட நடைபாதை அமைக்கும் பணிகள்.

கோவை ரயில்நிலையத்தில் ரூபாய் 2 கோடி செலவில் மேல்மட்ட நடைபாதை அமைக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளது என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்ரான்சு தெரிவித்தார். கோவை மத்திய ரயில்நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. அவசரத் தருணங்களில் பொதுமக்கள் விரைவாக பயணச்சீட்டுகளை பெறும் வகையில் கோவை மத்திய ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட இரு தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்ரான்சு கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். ... Read More »

பாளையங்கோட்டையில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி.

பாளையங்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் தேவாலயத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிடத் தொழிலாளர்கள் 3பேர் பரிதபமாக உயிரிழந்தனர். நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேவியர் காலனியில் தூய பேதுரு ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மேல்தளம் கட்டும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. சுமார் 60 அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்ட மேல்தளத்தில் கான்கிரீட் கூரை அமைக்கும் பணி நேற்று காலை முதல் நடந்தது. 20 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இறுதிக்கட்ட பணியில் பெரும்பாலான தொழிலாளர்கள் ... Read More »

மனைவி இறந்த துக்கத்தினால் முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மனைவி இறந்த துக்கத்தினால் வேதனை அடைந்த முதியவர் ஒருவர் இரவு தூக்கிட்டு உயிரிழந்தார். விருதுநகர் அருகே பந்தல்குடியைச் சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி(57). இவர் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத நிலையில் உயிரிழந்தாராம். அதனால், மனைவியை அடிக்கடி நினைத்து மனவேதனையில் இருந்து வந்தாராம். இதையறிந்த அவரது சகோதரர் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்கிழமை வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, உறவினர் வீடுகளிலும், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தேடிபார்த்தனர். அப்போது, ... Read More »

பாமக பிரமுகர் படுகொலை, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதனூர் அருகே பாலூரில் பாமக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாதனூர் – ஒடுக்கத்தூர் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதனூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்க கவுண்டர் மகன் பாமக முன்னாள் மாதனூர் ஒன்றிய செயலர் சின்னபையன் (45).பாலூரில் இவர் விவசாயம் செய்து வந்தார்.  மேலும் அங்கேயே கோழிப்பண்ணையும் நடத்தி வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு தன்னுடைய நிலத்துக்கு சென்ற சின்னபையன் வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொள்ள அவரது குடும்பத்தினர் முயற்சி செய்தனர். ... Read More »

தலைமைக் காவலர் மீது நடவடிக்கை எடுக்காததால், பெண் தற்கொலை முயற்சி

புதுவையில் தலைமைக் காவலர் மீது புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால், காவல் தலைமையகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி அருகே உள்ள சின்னகோட்டக்குப்பம் சுப்பரமணியபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா(35). இவர், சனிக்கிழமை புதுவை காவல் தலைமையகம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, தன்னை ஏமாற்றி, சொத்துக்களை அபகரித்துக் கொண்டு மிரட்டல் விடுத்துவரும், புதுவையைச் சேர்ந்த போலீஸ் தலைமைக் காவலர் சுரேஷ்குமார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.இதனையடுத்து, புதுவை மகளிர் காவல் ... Read More »

அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து, 42 பேர் காயம்

கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 10 பெண்கள் உட்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி நேற்று 12 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தை ஓட்டுநர் செந்தில்(38) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் கண்டெக்டர் முருகன் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதே போல் பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக திருவண்ணமலை நோக்கி மற்றொரு அரசு பேருந்து சென்றது. இப்பேருந்தை ஓட்டுநர் கவியரசு(39) ... Read More »

சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக – அதிமுக உறுப்பினர்களுக்கு கைகலப்பு.

சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக – அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே இன்று பயங்கர மோதல் வெடித்தது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கினர். சேலம் மாநகராட்சிக் கூட்டம் இன்று காலை துவங்கியதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கு வாழ்த்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக உறுப்பினர் தெய்வலிங்கம் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்டது. தெய்வலிங்கம் கூட்டத் தொடரில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். Read More »

ஜெயா விடுதலை மொட்டை போட்ட ஐந்தாயிரம் பேர்.

ஜெயலலிதா விடுதலை ஆனதையொட்டி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 5000 பேருடன் மொட்டை போட்டு கரூர் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி ஏந்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற நாள் முதல் அவரது விடுதலைக்காக அதிமுகவினர் கோவில் கோவிலாக சென்று வேண்டிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை ஆனார். அவர் மீண்டும் முதல்வராக கடந்த 23ம் திகதி பதவியேற்றார். இதையடுத்து பல்வேறு கோயில்களிலும் அதிமுகவினர் மொட்டை அடித்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். ... Read More »

துபாயில் வேளைக்காக சென்ற பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என கணவர் கோரிக்கை.

துபாயில் மருத்துவ உதவியாளராக பணியாற்றச் சென்ற தனது மனைவியை, வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாக குடியாத்தத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார். ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார். Read More »

திண்டுக்கல் மாவட்டம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கண்டேயபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (48). விவசாயியான இவர் குடும்பப் பிரச்னை காரணமாக தனது மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com