Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 10
Thursday , 7 July 2022
Home » மாவட்டம் (page 10)

மாவட்டம்

வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி ரெட்டியார்பட்டியில் காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பணிகளை கே.எஸ்.அழகிரி பார்வையிட்ட போது எடுத்த படம். நெல்லை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்குநேரி தேர்தல் முடிவு தமிழகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக அமையும். இது பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடைபெறும் மகாபாரத போர். ஆளும் கட்சியினர் பணபலம், அதிகார பலத்தை ... Read More »

நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு

நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் ஓட்டு போடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நெல்லை: பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி நாங்குநேரி தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சமுதாயத்தினர் அறிவித்து இருந்தனர். ... Read More »

கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்

கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான புகாருக்கு பதிலடியாக கவர்னர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக டி.ஜி.பி.யுடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியும் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார் கவர்னர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் புதுவையில் ஆய்வு செய்ய அலுவலக ஊழியருடன் ஸ்கூட்டரில் சென்ற புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், அமைச்சரவைக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடைசி நாள் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரித்தார். ... Read More »

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு

காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-32.54 % நாங்குநேரி-23.89% வாக்குப் பதிவு காலை 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 32.54%, நாங்குநேரி தொகுதியில் 23.89% வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் ... Read More »

கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கஜா புயலால் பலர் பாதிக்கப்பட்டனர். இதில் வீடுகளை இழந்த 10 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. இதனையடுத்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில், நாகை மாவட்ட செயலாளர் ... Read More »

தென் மாவட்டங்களில் கனமழை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு

தென் மாவட்டங்களில் கனமழை: உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க” மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் “மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு ... Read More »

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார்.

அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு ... Read More »

சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி

சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி சென்னை: காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ம் தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் ... Read More »

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, வந்தவாசி, செம்பூர், மாம்பட்டு, நெற்குணம், செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ... Read More »

திருவண்ணாமலை கலெக்டரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்த அதிகாரிகள்

திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் வீடு கட்டுவதற்கான ஆணையை இன்று வழங்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்களை சஸ்பெண்டு செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி வாட்ஸ்-அப்பில் எச்சரித்து தகவல் அனுப்பினார். இந்த வாட்ஸ்-அப் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com