Tuesday , 30 November 2021
Home » மாவட்டம் » நீலகிரி

நீலகிரி

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் பனி காலங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் டைடோனியம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளன. சூரியகாந்தி மலர்களை போல் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்கள் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் மிக அதிகமாக உள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிக அளவில் மலர்கள் காட்சியளிப்பது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மஞ்சள் தூவி வரவேற்பது போல் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது Read More »

முதுமலை காப்பகம் பகுதியில் சுற்றித் திரிந்த புலி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை சுற்றுலா பயணிகள் படம் பிடித்தனர். தொடர் மழை காரணமாக பச்சைப் பசேலென இருக்கும் வனப்பகுதியின் சாலை ஓரங்களுக்கு வன விலங்குகள் பவனி வரத்தொடங்கி உள்ளன. நேற்று முதுமலைப் புலிகள் காப்பகம் வழியாக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றபோது, அவர்கள் எதிரே புலி ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் தங்களின் செல்போன்களில் படம்பிடித்தனர். Read More »

நீலகிரியில் கனமழை- பாறைகள் சரிந்து விழுந்தன

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் உதகை மற்றும் குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் பாறைகள் கடகடவென சாலையில் சரிந்து விழுந்தன. நீலகிரியில் நேற்று பகல் வேளையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் உதகை மற்றும் குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் நெடுஞ்சாலையில் 28 வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குந்தா அணைப்பகுதியில் உள்ள பாலத்தின் அருகே திடீரென பாறைகள் தரதரவென்று ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் ... Read More »

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பின் போது திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி படப்பிடிப்பின் போது திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் குமுளி: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். குமுளியில் படப்பிடிப்பின் போது தீடிரென ஏற்பட்ட மாரடைப்பால் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். நான் கடவுள்இ தவசிஇ நான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடத்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் நடிப்பதற்காக 1983 ஆம் ஆண்டு சென்னை வந்தார். பின்னர் புரொடக்ஷன் மானேஜராக வாய்ப்பு கிடைத்தது. பல படங்களுக்கு புரொடக்ஷன் மானேஜராக பணியாற்றினார். கூடவேஇ சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார்.எல்லாம் ... Read More »

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

  நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 19 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டார். இதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இதில் அடங்கும். பிளாஸ்டிக் தடையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்  குன்னூர் பெட் போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் துணி அங்காடி, பல்பொருள் அங்காடியில் குன்னூர் நகராட்சி ... Read More »

வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலை தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம்

நீலகிரி மாவட்ட குன்னூர் அருகே உள்ள அருவங்காடு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலையில் உள்ளதால் தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 3ம் கட்ட போராட்டமாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நமது இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாய் விளங்குகின்ற வெடி மருத்து தளவாட தொழிற்சாலையின் முதன்மையாக விளங்குகின்ற கார்டைட் தொழிற்சாலை ஆகும். மத்திய அரசின் வெடி மருத்து தளவாடப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்கின்ற தவறான கொள்கையால் உள்ளூர் உற்பத்தி குறைந்து தொழிற்சாலை நலிவு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களின் ... Read More »

நீலகிரி மாவட்டம் கடசனக்கொல்லி பகுதியில் இறந்த புலி ஆண்புலி பலி!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனகோட்டத்திற்குட்பட்ட பாடந்தொரை பகுதியில் உள்ள கடசனக்கொல்லி வனப்பகுதியில் ஆண்புலி ஒன்று இறந்துகிடப்பது குறித்து வேட்டைதடுப்பு காவலர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் இறந்த புலியை பார்வையிட்ட கூடலூர் கோட்ட வன அலுவலர் ராகுல் மற்றும் வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் இறந்தப் புலியை பார்வையிட்டு விசாரனை நடத்தியதோடு அப்பகுதியில் இருந்து புலியை மீட்டு கூடலூர் வன சரகம் அலுவலகத்திற்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். புலியின் உடலை பிரேதபரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த புலியின் வயது ... Read More »

ஆசிரியர் தண்டித்ததா‌க கூறி தனியார் ப‌ள்ளி மாணவர் தற்கொலை…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆசிரியர் தண்டித்ததா‌க கூறி தனியார் ப‌ள்ளி மாணவர் தற்கொலை செய்து‌க்கொண்டார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்த மாணவர் பிரவீன். இவர் சரியாக படிக்காத காரணத்தால், அந்தப் பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தண்டனை கொடுத்ததோடு மற்ற மாணவர்கள் முன்னிலையில் பலமுறை அவமானபடுத்தியதாக சொல்லபடுகின்றது. இந்த நிலையில் நேற்று மாணவன் பிரவீன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ... Read More »

ரோஜாப் பூக்கள் ஆயிரக் கணக்கில் பூத்துக் குலுங்குவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை

ரோஜா அதன் அழகிற்காக எப்போதுமே மதிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலத்தில் சிவப்பு ரோஜா உயிர் தியாகம் செய்த கிறிஸ்தவர்களின் ரத்தத்தின் குறியீடாக அங்கீகரிக்கப்பட்டாலும் நாளடைவில் இது காதலின் சின்னமாக மாறியது. காதலின் அடையாளமான ரோஜா ஓவியர்களால் அதிகம் வரையப்படும் மலராக உள்ளது. இந்த ரோஜாப் பூக்கள் கொடைக்கானலில் உள்ள பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்குகின்றன. கொடைக்கானலில் பெய்து வரும் கோடை மழைச் சாரலில் ரோஜாவின் இதழ்களில் நீர்த் துளிகள் பட்டு பிரமாண்டமாய் காட்சி தருகிறது. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜாப் பூக்கள் 7 ... Read More »

கொடைக்கானல் ஏரியி;ல் கேரளாவை சேர்ந்த நபரின் சடலம்

கொடைக்கானல் ஏரியி;ல் கேரளாவை சேர்ந்த நபரின் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறி;த்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஏரிப்பகுதியில் சடலம் இருப்பதை கண்ட, அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டு பிரரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இராஜசேகரன் என்பதும், இவர் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com