Friday , 16 November 2018
Home » மாவட்டம் » சென்னை

சென்னை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்

chennai-high-court

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் தேர்தலை நடத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி, எத்தனை ஆண்டுகள்தான் தேர்தலை நடத்த திட்டம் போடுவீர்கள் என கேள்வி எழுப்பினார். கடந்த ஆண்டே 2 முறை ... Read More »

காவேரி மருத்துவமனையின் முன்பு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

WhatsApp_Image_2016-12-04_at_11_நேற_00284

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைப் பெற்று வரும் காவேரி மருத்துவமனையின் முன்பு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் திமுக தலைவர் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு காரணமாக ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டதாக காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்திற்கு ... Read More »

தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்: விஜயகாந்த்

KARUNANIDHI

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை,தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில், ... Read More »

4 டாக்டர்கள் கொண்ட காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு வருகை கோபாலபுரம் இல்லத்திற்கு

201807271032260940_For-Gopalapuram-House-With-4-doctors-Kaveri-Hospital-Medical_SECVPF

மருத்துவமனை மருத்துவர்கள் மேலும் 4 பேர் மருத்துவ உபகரணங்களுடன் வருகை கோபாலபுரம் இல்லத்திற்கு 4 டாக்டர்கள் கொண்ட காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு வருகைந்துள்ளனர்.சென்னை,வயது முதிர்வு மற்றும் உடல் நிலை காரணமாக திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து சென்றார். கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு ... Read More »

பிரதமர் மோடி நலம் விசாரிப்பு. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து

Modi_Karunanidhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி.பிரதமர் மோடி நலம் விசாரிப்பு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் மோடி.. கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More »

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Petrol prices expected to rise by up to 4p a litre

நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.18 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் ... Read More »

பரங்கிமலை ரெயில் நிலையம் விபத்தில் பலியான 4வது நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது

201703160114418453_Electric-trainWhen-climbingHe-fellYoungKills_SECVPF

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியான 4வது நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.சென்னையில் கோடம்பாக்கம் முதல் மாம்பலம் இடையே புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் பகுதியில் நேற்று காலை உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதனால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாக ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் புறநகர் ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்பட்டன குறைவான ரெயில்களின் இயக்கம், காலதாமதம் ஆகியவற்றால் பயணிகளின் கூட்டம் அதிகரித்து ரெயில்களில் நெரிசல் ஏற்பட்டது.இந்த நிலையில், சென்னை ... Read More »

பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது தடுப்புச்சுவரில் மோதி 4 பேர் உயிரிழந்தனர்

6bebc173-1009-4e8a-b75c-a54685489204

சென்னையில் இன்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். மின்சார ரெயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு – படிக்கட்டில் பயணம் செய்தபோது பரிதாபம் சென்னை:கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இதில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பயணித்தனர். இருக்க இடம் கிடைக்காமல் பலர் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணம் செய்தனர்.இந்நிலையில், பரங்கிமலை ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, படிக்கட்டில் தொங்கிகொண்டிருந்தவர்கள் ... Read More »

மக்கள் நீதி மய்ய கட்சி செயற்குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

kamal56678-19-1500439993

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி அக்கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக சுரேஷ், பொதுச்செயலாளராக அருணாச்சலம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More »

தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி

Daswant_accused_EPS

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த 2017 பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். சிறையிலிருந்த அவர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பை தப்பி ஓடினார்.பின்னர், தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரை பிடித்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com