Tuesday , 22 January 2019
Home » மாவட்டம் » கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மாணவியின் மனித நேயத்தை பாராட்டி புது சைக்கிளை பரிசாக வழங்கிய நிறுவனம்

Cycle

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம் கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை இழந்து தவித்து உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்த சஜீரா ... Read More »

ஆசிரியர் கைது தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

vlcsnap-2018-07-05-10h53m07s383

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது தொடர்பாக ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு -முன் விரோதம் காரணமாக ஆசிரியர் மீது பாலியல் குற்றம்சாட்டி அவரை தாக்கியதாக குற்றசாட்டு.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் முன் விரோதம் காரணமாக ... Read More »

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

vlcsnap-2016-08-06-10h05m17s160

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றினை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நகராட்சியின் சார்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குடிநீருக்கான ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ளது. இதிலிருந்து வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள கடைகளுக்கும், பேருந்து நிலையத்துக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ள பகுதியில் பேருந்து நிலைய கடைகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் தேங்குவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு ... Read More »

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 4 அணைகளை நாளை முதல் திறக்க முதலமைச்சர் உத்தரவு

jayalalitha

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 4 அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் சித்தார் 2 அணைகளிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். Read More »

குவைத் நாட்டில் சிக்கித்தவிக்கும், தமிழக மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், மீனவர்களின் உறவினர்கள் மனு

vlcsnap-2016-03-21-16h24m18s40

குவைத் நாட்டில் சிக்கித்தவிக்கும், தமிழக மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மேல்மிடாலம், இராமன்துறை, குறுபம்ணை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களிலிருந்து 10-மீனவர்களும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரும் கடந்த ஜுலை மாதம் மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்றனர். ஆறு மாதகாலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீனவர்கள் பணியாற்றிய நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்கியதாக போலி ஆவணம் தயாரித்து ... Read More »

தமிழகத்தில் எந்தவொரு பின்னனியும் இன்றி உருவானவர்தான் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன்

vlcsnap-2016-03-08-17h41m01s252

தமிழகத்தில் எந்தவொரு பின்னனியும் இன்றி உருவானவர்தான் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் என தமிழன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் கா.கலைக்கோட்டுதயம் பெருமிதம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சென்பகராமன் புதூரில் இயங்கிவரும் தமிழன் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவும், ஆண்டுவிழாவும் கல்லூரி நிறுவனர் திருக்கடலுதயம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் எந்தவொரு பின்னணியும் இன்றி உருவானவர்தான் எழுச்சித் தலைவர் ... Read More »

மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்

vlcsnap-2016-03-08-10h22m01s30

மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நாகர்கோவிலில் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற கல்லூரி விழாவில்; கலந்து கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,தமிழக அரசு உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. மக்கள் நலக்கூட்டணி முதலிலேயே அமைத்து விட்டதால்தான், திமுக, அதிமுக கூட்டணி அமைப்பதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும்,மக்கள் நலக்கூட்டணி தமிழக சட்டப்பேரவைத் ... Read More »

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை

vlcsnap-2016-01-19-10h13m11s65

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழல் இல்லையென சுற்றுலா பயணிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த கிளாரா ஜாய்ஸ் – பிராசிஸ் ஜோன் தம்பதியர் கடந்த 15ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு வாகன நுழைவு கட்டணம் வசூலிப்பவர்கள், அதிக கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியினர் தாக்கப்பட்டனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் விடுதிகளில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு ... Read More »

ஆரல்வாய்மொழி பொய்கை அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 

vlcsnap-2016-01-02-16h22m01s0

குமரி மாவட்ட ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சர்ஜர்சிங்சவான் திறப்பு வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே, 11-ஆண்டுகளுக்குப்பின் 32-அடி கொள்ளளவை எட்டிய பொய்கை அணையிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் சர்ஜன்சிங்சவான் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நகிழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சைமாள்,நாஞ்சில்-முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று முதல் 23-நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 900- ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More »

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும்

vlcsnap-2015-12-29-09h55m47s179

வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இப்போட்டியை நடத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனவே, இந்த தைப் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதியாக தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. அதற்கு, மத்திய ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com