ஏற்றுமதியாளர்கள் இறால் கொள்முதல் விலையை குறைப்பதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராடத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மீனவர்கள் போராட்டத்தை திரும்ப பெற முடிவு செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும் கூட்டத்தில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. Read More »
இராமநாதபுரம்
மீன்பிடி தடை காலத்தை அடுத்த ஆண்டு முதல் அக்டோபர், நவம்பரில் மாற்ற மீனவர்கள் கோரிக்கை.
மீன்பிடி தடை காலத்தை அடுத்த ஆண்டு முதல் அக்டோபர், நவம்பரில் மாற்ற ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை இரவும், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ... Read More »
இராமநாதபுரம் மாவட்டத்தில் தூத்துக்குடி மீனவர்கள் இருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் சுருக்கு மடி வலையை பயண்படுத்தி மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா நரிப்பையூர் அருகே உள்ள ரோச்மா நகரில் மீன் இனப்பெருக்க காலத்தில் தடையை மீறி சுருக்கு மடி வலையை பயண்படுத்தி மற்றும் பட்டாசு வெடித்து மீன் பிடித்த தூத்துக்குடி மீனவர்களை,ரோச்மான் மீனவர்கள் சிறைபிடித்து கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்த்தனர். இவர்கள் கரையோரங்களில் சுருக்குமடி வலைகளை வீசியும்,மற்றும் பட்டாசுகளை வெடித்தும் மீன் பிடிப்பதாகவும் ,இப்படி சுருக்குமடியை பயண்படுத்தியும்,பட்டாசினை வெடித்தும் மீன் பிடிப்பதால் மீன் ... Read More »
பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 5-பேர் சம்பவ இடத்திலேயே பலி
பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 5-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இராமநாதபுரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பரமக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து கீழகோட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேண் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த கௌசல்யா, லட்சுமி, வினோதினி முருகன் மற்றும் வேன் ஓட்டுனர் முகமதுஅப்துல் ஆகிய 5-பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 20-பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். ... Read More »