Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
இராமநாதபுரம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 2
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » இராமநாதபுரம் (page 2)

இராமநாதபுரம்

தடுத்து நிறுத்தப்பட்டது ரத யாத்திரை

ராமேஸ்வரத்தில் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது . அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ரத யாத்திரையை விஷ்வ இந்து பரிஷத் தொடங்கியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் , வார விடுமுறையை வியாழக்கிழமையாக மாற்ற வேண்டும். பள்ளி பாடப் புத்தகத்தில் ராமாயணத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ரத யாத்திரை தொடங்கப்பட்டது. 4 மாநிலங்களை கடந்து தமிழகத்தில்  ரத யாத்திரை நுழைந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் காவல்துறை அனுமதி ... Read More »

காவல்துறை இவர்களின் எதிரி ; எண்கவுன்டரில் ரவுடி சுட்டுக்கொலை…

ராமநாதபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கோவிந்தன் போலிசாரால் எண்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டான். ராமநாதபுரம் மாவட்டம் உசிலனகோட்டையை சேர்ந்தவன் கோவிந்தன். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இவனை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு கொடிபங்கு என்ற கிராமத்தில் அவனை சுற்றி வளைத்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதாகவும், இதனால் தற்காப்புக்காக போலீசார் அவனை சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதையடுத்து, கோவிந்தனின் உடலை ... Read More »

மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ; இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களால் இராமேஸ்வரத்தில் பதற்றம்

இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீனவர்கள் மீது நாட்டுப்படகு மீனவர்கள், பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் நிலவுகிறது. புதுமடம்-ஏர்வாடி கடற்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அதிகாலையில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாட்டுப்படகுகளில் வந்த அடையாளம் தெரியாத சிலர், விசைப்படகு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் நிசார்கான், முகமது அபுபக்கர் ஆகிய மீனவர்கள் காயம் அடைந்தனர். செய்யது இப்ராகிம் என்பவரது படகிலிருந்த மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காயமடைந்த மீனவர்கள் இருவரும் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ... Read More »

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு ;மீனவர்கள் கொந்தளிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியுள்ளனர். படகுகளில் இருந்த மீன்களை கடலில் வீசி எறிந்த இலங்கை கடற்படையினர் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்ததால் பெரியளவு இழப்பைச் சந்தித்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடலில் அச்சமின்றி, பாதுகாப்பாக மீன்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More »

அப்துல் கலாம் நினைவிட பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உறுதி

அப்துல் கலாம் நினைவிடத்தில் ஓராண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசினார். நினைவிடத்தில் சிலை மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல், அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் தங்கச்சிமடத்திற்கு அருகில் உள்ள பேய்க்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு மத்திய அரசு சார்பில் அப்துல் கலாமுக்கு 7 அடி உயர முழுஉருவ வெண்கலச் சிலையும், ரூ.60 கோடி செலவில் தேசிய நினைவகமும், அருங்காட்சியகமும் அமைக்க முடிவு ... Read More »

பரமக்குடி அருகே அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் தூக்கிலிட்டு தற்கொலை

பரமக்குடி அருகே அரசு கல்லூரி மாணவர் விடுதியில் பணியாற்றி வந்த சமையல்காரர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி அருகே முத்துவயல் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் நென்மேனி அரசு ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுதியின் சமையல் அறையில் பால்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி சென்று திரும்பிய மாணவர்கள், பால்ராஜ் தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமகுடி தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் ... Read More »

குவைத் நாட்டிற்கு ஓட்டுனராக சென்று, அங்கு கொத்தடிமையாக துன்பப்பட்டு வரும் வாலிபரை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

குவைத் நாட்டிற்கு ஓட்டுனராக சென்று, அங்கு கொத்தடிமையாக துன்பப்பட்டு வரும் வாலிபரை மீட்கக்கோரி, அவரது உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் அப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இராஜாமுருகன். ஓட்டுனரான இவர், 40-ஆயிரம் ஊதியத்திற்கு குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தோட்ட வேலை செய்யச்சொல்லி, ரூபாய் 10-ஆயிரம் மட்டுமே மாத சம்பளம் வழங்குவதாக இராஜாமுருகன், அவரது உறவினர்களுக்கு தொலை பேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து குவைத்தில் கொத்தடிமையாக சிக்கித்தவிக்கும் இராஜாமுருகனை இந்திய துணை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, ... Read More »

மீனவர்களின் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும்

மீனவர்களின் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்று விசைப்படகு சங்கத்தலைவர் சகாயம் ராமேஸ்வரத்தில் தெரிவித்தார். ராமேஸ்வரம் விசைப்படகு சங்கத்தலைவர் சகாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை சிறைபிடித்து சேதப்படுத்துகின்றனர். இதனால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்வதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார்கள். மேலும் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்த அவர், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் உரிமையை ... Read More »

இராமேஸ்வரம் அருகே, பாம்பன் தெற்குக்கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை

இராமேஸ்வரம் அருகே, பாம்பன் தெற்குக்கடற்கரையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமேஸ்வரம் அருகே, பாம்பன் தெற்குக்கடற்கரையில் 60-வயதுள்ள ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை கண்டன அப்பகுதி மக்கள் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்படையினர் ஆண் சடலத்தை ஆய்வு செய்து இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது குறித்தும் ... Read More »

ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் ஒப்பந்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1400 கோடி முதலீட்டில் 200 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் பூங்காவை அமைக்க தமிழக அரசுடன் அதானி குழுமம் மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (TANGEDCO) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் தமிழகத்தில் 1000 மெ.வா. உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் தொழிற்சாலையை தொடங்குவது குறித்தும் மாநில அரசுடன் அதானி குழுமம் ஆலோசனை நடத்தி வருகிறது. 200 மெ.வா மின் உற்பத்தித் திறன் கொண்ட ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com