Monday , 25 October 2021
Home » மாவட்டம் » இராமநாதபுரம்

இராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே நாசவேலையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது…

ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் 3 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் தப்பியோடிவிட்டார். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கனி என்கிற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ... Read More »

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் கமல்ஹாசன் பரமக்குடி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன். ... Read More »

ஓமன் நாட்டில் உயிரிழந்த மீனவர்களின் உடல்களை மீட்டுத்தர மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் உடலை மீட்டு தரக் கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளராக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட புயலால் மீனவர்கள் மாயமாகினர். பிறகு ஓமன் கடற்கரையில் ... Read More »

தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டனர். ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பொம்மலாட்ட நிகழ்ச்சியில் அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம், திருத்தொண்டர் புராணம், ஆண்டாள் திருமணம் உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டன. பொம்மலாட்ட நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் திரண்டனர். நவீன பொழுதுபோக்கு சாதனங்களின் வருகையால் பொலிவிழந்து போன பொம்மலாட்டக் கலைக்கு புத்துயிரூட்ட அரசு மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Read More »

ராமநாதபுரத்தில் கடல்நீர் உள்வாங்கியது; மீனவர்கள் அதிர்ச்சி தகவல்.

ராமநாதபுரத்தில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது என மீனவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியுள்ளது. இதேபோன்று ராமேஸ்வரத்தில் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதன்பின் அன்று பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ... Read More »

அப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைக்க வேண்டும் – பேரன் சேக் சலீம்

அப்துல்கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பேரன் சேக் சலீம் கூறினார்.மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள நினைவிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.நினைவிடத்தில் உள்ள அப்துல்கலாம் சமாதி அருகில் இன்று அவரது குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மலரஞ்சலி செலுத்தினர்.பின்னர் பேரன் சேக் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-அப்துல்கலாம் நினைவிடத்தை தேசிய நினைவிடமாக மத்திய ... Read More »

இலங்கைக்கு கடத்த முயன்ற 304 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம், கஞ்சா மற்றும் போதைபொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன.இதனை தடுக்க மாவட்ட போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் மண்டம் அருகே உள்ள சீனியப்பா கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் ... Read More »

சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட்

ராமநாதபுரத்தில், கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தும் விதமாக, ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார். இராமநாதபுரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளை கேலி,கிண்டல் செய்வது தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக கேலி செய்யும் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்தவும், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆண்ட்டி ரோமியோ ஸ்குவார்ட் என்ற அமைப்பை காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா துவக்கி வைத்தார். Read More »

ராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாகராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள்.. காவல்துறை தீவிர விசாரணை!!

ராமேஸ்வரம் அருகே கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்டியபோது பெட்டி, பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயிற்சி மேற்கொண்ட இடம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வசித்து வரும் எடிசன் என்பவரது வீட்டில் கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்ட முயற்சித்துள்ளனர். அப்போது பள்ளத்தில் சிறு, சிறு பெட்டிகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு பெட்டியை பரிசோதித்தபோது, துப்பாக்கித் தோட்டாக்கள் ... Read More »

அரசு தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் 3 பேர் கைது!!

தொண்டியில் அரியவகை கடல்பசுவை பிடித்த மீனவர்கள்! விற்க முயற்சிக்கும்போது பிடிபட்டனர்! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆர்.பட்டிணம் கடல் பகுதியில் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான நம்புதாளை கடற்கரை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று இரவு கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது.வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆண் கடல் பசுவாகும். அதிக ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com