Friday , 18 August 2017
Home » மாவட்டம்

மாவட்டம்

கஞ்சா பொட்டலம் கடத்திய தேனி வியாபாரி கைது…

kanja

கேரள மாநிலம் கொல்லத்துக்கு வயிற்றில் கஞ்சா பொட்டலத்தை கட்டி கடத்திய தேனி வியாபாரி கைது செய்யப்பட்டார். தேனியை சேர்ந்த கஞ்சாவியாபாரி மொக்கராஜ் என்பவர் தேனியில் இருந்து தென்காசி வந்து, அங்கிருந்து கேரள அரசு பேருந்தில் கொல்லம் சென்றார். ஆரியங்காவு பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வயிற்றில் கஞ்சாபொட்டலத்தை கட்டி மறைத்து எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த காவல்துறையினர் 1கிலோ 750 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். Read More »

பேருந்தில் ஏற்பட்ட பெருந்தீ ; பூந்தமல்லி அருகே சொகுசு பேருந்தில் திடீரென தீவிபத்து …

fire-3

சென்னை பூந்தமல்லி அருகே சொகுசு பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கர்நாடக மாநில அரசின் சொகுசுப் பேருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. பூந்தமல்லி அருகே சொகுசுப் பேருந்தின் பின்புறம் திடீரென தீப்பற்றியது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். Read More »

கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்து ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு …

16-1500209117-kodungaiyur-fire-accident34545

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு 10-ஆக அதிகரித்துள்ளது. சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, கடந்த 15ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் நடந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்தனர். தீயை அணைக்க வந்தபோது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர ... Read More »

ஆசிரியர் தண்டித்ததா‌க கூறி தனியார் ப‌ள்ளி மாணவர் தற்கொலை…

Teaching at Nilgiri School

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஆசிரியர் தண்டித்ததா‌க கூறி தனியார் ப‌ள்ளி மாணவர் தற்கொலை செய்து‌க்கொண்டார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்த மாணவர் பிரவீன். இவர் சரியாக படிக்காத காரணத்தால், அந்தப் பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தண்டனை கொடுத்ததோடு மற்ற மாணவர்கள் முன்னிலையில் பலமுறை அவமானபடுத்தியதாக சொல்லபடுகின்றது. இந்த நிலையில் நேற்று மாணவன் பிரவீன் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ... Read More »

கிரண் பேடியின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் …

1429873812-cp-large

காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தையடுத்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட மூவருக்கு எம்.ஏல்.ஏ.க்களாக, ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கும் கண்டனம் தெரிவித்தும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு, சில அமைப்புகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு, கூடுதலாக துப்பாக்கி ... Read More »

புதுவையில் ஜூலை 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம்…

kiran-1

புதுச்சேரியில் பா.ஜ.க.நிர்வாகிகள் 3 பேர் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து ஜூலை 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்த பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் நேற்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர்.மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநரின் நடவடிக்கையை அடுத்து, அடுத்த கட்ட ஆலோசனை குறித்து காங்கிரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், மத்திய ... Read More »

திண்டுக்கல் அருகே மளிகை கடையில் விற்பனையாகிறது மது …

Dinduagau-l-tasmac- c2n

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் சாலையில் மளிகை கடையில் நடைபெறும் மதுவிற்பனையை போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உத்தனம்பட்டி பிரிவில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு அருகே உள்ள மளிகை கடையில் அதிகாலை 5 மணியிலிருந்தே மது விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மளிகை கடையின் பின்புறம் ஒரு மதுக்கூடமே சட்டவிரோதமாக ... Read More »

சூடு பிடிக்கும் கள்ளச்சாராய வியாபாரம் ; மதுக்கடை அடைப்பினை தொடர்ந்து களமிறங்கத்தொடங்கிவிட்டது

villupuram__large

விழுப்புரம் அருகே கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக கூறி இளைஞர்கள் சாராய பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். விழுப்புரம் நகர் பகுதியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ப.வில்லியனூர். இங்கு கடந்த 15 வருடங்களாக எந்த தடையும் இல்லாமல் 24 மணிநேரமும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். இந்த கள்ளச்சாராய விற்பனையை தடை செய்ய கோரிக்கை வைத்து பலமுறை வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் ... Read More »

பூச்சிக்கொல்லி மருந்து குடோனில் கொல்லி வைத்தது யார் ?

Trichy-fire-

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் தனியார் பூச்சிக் கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சிவா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பூச்சிக் கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கு உள்ளது. கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும், சுற்றுவட்டார கடைகளுக்கு இங்கிருந்து தான் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சேமிப்பு கிடங்கில் காலை 8 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சேமிப்புக் கிடங்கிற்குள் இருந்த பூச்சிக் ... Read More »

கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

vlcsnap-2017-05-10-17h08m26s6

கழுதைக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இதனை கருத்தில் கொண்ட மோகனூர் பகுதி மக்கள், ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். காவிரியாற்றுப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவிவருவதால், நாமக்கல்லை அடுத்துள்ள மோகனூர் பகுதியில் தேவர் மலை உள்ளது. இந்த மலையின் கீழ்பகுதியில் உள்ள கிடாரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் ஒன்றுகூடி, மனிதர்களுக்கு திருமணம் செய்வதைப்போன்று, ஆண், பெண் கழுதைகளுக்கு, திருமணம் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பல கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று கழுதை திருமணத்திற்கு மொழி காணிக்கை செலுத்தினர். கழுதைக்கு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com