பாகிஸ்தானில் ஓடும் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் பலியாகி உள்ளனர். இஸ்லாமாபாத் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரஹீம் யார் கான் நகருக்கு அருகே ரெயில் சென்று கொண்டு இருந்த போது மூன்று பெட்டிகள் தீ விபத்துக்குள்ளாக்கியது. காலை உணவு சமைக்க ஒரு எரிவாயு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்தது. இதில் பெட்டி முழுவதும் தீ பரவியது. இதனால் அலறி அடித்து ஓடிய பயணிகள் சிலர் தீப்பிழம்புகளில் இருந்து ... Read More »
முக்கிய செய்திகள்:
காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி
காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சிவசேனா கேள்வி விடுத்துள்ளது. மும்பை, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் குழு காஷ்மீர் சென்றதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள சிவசேனா, காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையல்ல என்று தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்றது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிகள் இணைந்து 161 இடங்களில் ... Read More »
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை, காலம் சார்ந்த ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 25ம் தேதி துவங்கிய போராட்டமானது 6-வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப சுகாதாரத்துறை ... Read More »
சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? – வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம்
சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? – வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கம் குழந்தை சுஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னை, எழிலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளின் சடலங்களை நேரடியாகக் காட்டியதற்கான விமர்சனங்களை அனைவரும் எதிர்கொண்டோம். அதன்பிறகு சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது. அதைப் பின்பற்றினோம். ... Read More »
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ... Read More »
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு, இயல்பு வாழ்க்கை முடக்கம்
பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் மேற்கு வங்காளத்தைச்சேர்ந்த ஐந்து தொழிலாளர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தையடுத்து, காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகள் முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதுகாப்பு படையினர் நகரின் முக்கிய வீதிகள், மற்றும் இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பு படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில், காஷ்மீரைச் சாராதவர்களை தாக்க பயங்கரவாதிகள் ... Read More »
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக வங்க கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் மழை கிடைக்கிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலமானது வடகிழக்கு நோக்கி நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் ... Read More »
சுஜித் மரணம்: பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் – நடிகர் விவேக்
சுஜித் மரணத்திற்கு பிறகாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று நடிகர் விவேக் வலியுறுத்தி உள்ளார். சென்னை, முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ... Read More »
கடல் மட்ட நீர் உயர்வால் இந்தியாவில் 3.6 கோடிபேர் பாதிக்கப்படுவர்
tகடல் மட்ட நீர் உயர்வால் இந்தியாவில் 3.6 கோடிபேர் பாதிக்கப்படுவர் என புதிய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. புவி வெப்பமயமாவதை தடுக்கத் தவறினால் கடல் நீா் மட்டம் மேலும் அதிகரித்து வரும் 2050-ஆம் ஆண்டில் 3.6 கோடி இந்தியா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வு கணிசமாகக் குறைக்கப்படாவிட்டால் மற்றும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்படாவிட்டால், 30 கோடி மக்கள் வசிக்கும் நிலம் 2050 க்குள் வெள்ளத்தில் மூழ்கும் என்று நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வு ஒன்று ... Read More »
பாரம்பரிய விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டத்தால் ஆபத்து: பி.ஆர்.பாண்டியன்
தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு: சென்னை: தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கவே தனிச்சட்டம் உதவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என கூறினர். தனியார் ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் என்பது மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க ... Read More »