Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
முக்கிய செய்திகள்: | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 5
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: (page 5)

முக்கிய செய்திகள்:

திருச்சியில் 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். திருச்சி காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒழுங்காற்று குழுவின் செயலாளர் குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு உட்பட 4 மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை ... Read More »

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் பலி

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மின்டனா பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 22 கி.மீ. ஆகும் என்று தெரிவித்துள்ளது. திடீர் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இதில் ஓட்டல், அலுவலக கட்டிடங்கள் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சுமார் 50 பேர் ... Read More »

காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி -கோவை நீதிமன்றம்

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கோவை, கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதாநாயர். இவர் கோவை வடவள்ளியில் நிறுவனம் நடத்தி, காற்றாலை அமைத்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதையடுத்து வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன் ரூ.28 லட்சமும், ஊட்டியை சேர்ந்த வெங்கட்ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ.5½ லட்சமும் கொடுத்தனர். ஆனால் சரிதா நாயர் குறிப்பிட்டபடி காற்றாலை அமைத்து கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரிதாநாயர், ... Read More »

மகா புயல் தீவிரம் அடைகிறது – தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ‘மகா’ புயல் தீவிரம் அடைவதால் தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறி உள்ளார். ‘மகா’ புயல் தீவிரம் அடைகிறது – தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை மகா புயல் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ‘மகா’ புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இரவு பகலாக மழை கொட்டி தீர்த்தது. 23 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை ... Read More »

சிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘கடபதாரி’ படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்த பிரபல நடிகை இணைந்திருக்கிறார். சிபிராஜ் படத்தில் கமல் பட நடிகை சிபிராஜ் கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கபடதாரி’. இதில் சிபிராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நந்திதா நடிக்க நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது இவர்களுடன் கமலின் ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்ற பூஜா குமார் இணைந்திருக்கிறார். சிபிராஜ் – பூஜா ... Read More »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் ... Read More »

ரஜினிகாந்துடன் கூட்டணியா? – கமல்ஹாசன் பதில்

ரஜினிகாந்துடன் அரசியலில் இணைந்து பயணிப்பது தொடர்பாக இருவரும் பேச வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- கட்சி நடத்த உங்களுக்கு பணம் எங்கு இருந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு பதில்? பதில்:- ‘என் பாக்கெட்டில் இருந்துதான் வருகிறது. என் கட்சியில் உள்ள பலரும் அவரவர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து போட்டுத்தான் கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ‘இங்கிருந்து ... Read More »

கேப்டவுன் ஆகிறதா சென்னை?

தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரம் கேப்டவுன் சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலைக்கு சென்றதுபோல இப்போது சென்னையும், பெங்களூருவும் சென்று கொண்டிருப்பதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறி உள்ளார். கேப்டவுன் ஆகிறதா சென்னை? கேப்டவுன் தண்ணீர்… தண்ணீர்… இது மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளிவந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் மட்டுமல்ல. தண்ணீர்… தண்ணீர்… என நாம் கதறுகிற நிலை வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லுகிற நிலையும் கூட. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறதே; ... Read More »

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றுக்கொண்டார். புதுடெல்லி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று ... Read More »

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உக்கடம் ஜி.எம் நகரில் நிசார் என்பவரது வீட்டிலும், லாரிபேட்டையில் சவுருதீன் என்பவரது வீட்டிலும், 5 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு, மாநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாகூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com