பிழையே இல்லாமல் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வது தொடர்பாக, தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நடத்துகிறார். இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய மாநில கட்சிகளும், காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சேர்ந்த இரண்டு ... Read More »
முக்கிய செய்திகள்:
சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின், மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை!
சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை. அவைகளின் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சமையல் கியாஸ், பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் தொடரும். எனவே பொதுமக்களுக்கு ... Read More »
சுஷ்மா சுவராஜ் 6-ந் தேதி இலங்கை செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வதை முன்னிட்டு, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வருகிற 6-ந் தேதி கொழும்பு செல்கிறார். கடந்த மாதம் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, தங்கள் நாட்டுக்கு வருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, வருகிற 13-ந் தேதி இலங்கை செல்கிறார். அதற்கு முன்னதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற வெள்ளிக்கிழமை (6-ந் தேதி) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். அப்போது அவர் அந்த நாட்டு ... Read More »
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளின் சிலம்ப போட்டி நடைபெற்றது. திண்டுக்கலில் சிலம்பாட்ட கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 14வயது முதல் 17 வயது உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் எடை பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல். நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை,வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா.; இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மே ... Read More »
உலக கோப்பை – பாகிஸ்தான் முதல் வெற்றி பெற்றது
உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் இன்று ‘பி’ பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க வீரர் சிபாபா 9 ரன்னிலும் சிக்கந்தர் ரசா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த மசகட்சா 29 ... Read More »
புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள, முஃப்தி முகமது சயீது பேச்சால் சர்ச்சை!!
காஷ்மீரில் தேர்தல் சுமூகமாக நடைபெற பாகிஸ்தான், ஹ_ரியத் அமைப்பு மற்றும் தீவிரவாதிகள் அனுமதித்தனர் என்று பிரதமர் மோடி முன் முதல்வராக பதவி ஏற்றபின் முப்தி முகமது சயீத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 87 பேரவை தொகுதிகளுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில் பிடிபி 28 இடங்களிலும், பா.ஜ.க 25 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முரண்பாடுகள் காரணமாக கூட்டணி அமைப்பதிலும் இழுபறி ஏற்பட்டது. ... Read More »
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை, தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்!
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உள்பட அனைத்து அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம், விபத்தில் இறந்தால் நஷ்டஈடு, மருத்துவ வசதி, வீட்டு வசதி, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் இந்தச் ... Read More »
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்பு!
நேரடி மானிய திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 கோடியே 30 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களில், 75 சதவீதம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுகிறது. அதற்குரிய மானியத்தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போலிகளை ஒழிக்கவும், சிலிண்டர்களை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடுவதை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ... Read More »