Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
முக்கிய செய்திகள்: | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 4
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: (page 4)

முக்கிய செய்திகள்:

மாஸ்கோவில் காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை

மாஸ்கோவில் உள்ள காந்தி சிலைக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தியா-ரஷ்யா இடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவிற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற ராஜ்நாத் சிங், அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “உலகம் முழுவதும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு ... Read More »

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இரு பிரிவினர் இடையே மோதல்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி சாத்துமுறை சிறப்பு உற்சவம் நடைபெற்றது. அப்போது தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களை பாட முயற்சித்தபோது, நீதிமன்ற தடை உள்ளதால், பிரபந்தங்களை பாடக்கூடாது என வடகலை ஐயங்கார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் உருவானது. தகராறு முற்றியதால் தள்ளுமுள்ளு மற்றும் கைககலப்பில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தாசில்தார் கோவில் ... Read More »

எடியூரப்பா எனக்கு ரூ.1000 கோடி கொடுத்தார் -தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ

எடியூரப்பா எனக்கு ரூ.1000 கோடி கொடுத்தார் -தகுதி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏ கர்நாடகத்தில் முன்பு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அந்த கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. அதன் பிறகு எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த புதிய அரசு நேற்று முன்தினத்துடன் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ... Read More »

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து ... Read More »

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்..!

கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று மாலை திருச்செந்தூரில் நடைபெறுவதையொட்டி அனைத்து முருகன் ஆலயங்களிலும், அதிகாலை தொடங்கி முருகப்பெருமானுக்கு, அபிஷேகம் அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர்: துன்பம் விளைவித்து அட்டூழியம் செய்யும் அசுரர்களை தேவர்களும், சிவன், விஷ்ணு, பராசக்தி என அனைத்து தெய்வங்களும் அழித்தொழிப்பதுதான் வழக்கம் என்றும், அதற்கு மாறாக முருகப்பெருமான் அசுரனுடன் போரிட்டு வதம் செய்தபின், அவனை மன்னித்து தன்னுடன் ஆட்கொள்வதால் தான் இந்த நிகழ்வு சம்ஹாரம் எனப்படுவதாக ஐதீகம் கூறப்படுகிறது. இதையடுத்து ஐப்பசி மாதம் வரும் ... Read More »

அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ... Read More »

போராடும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு இறுதி வேண்டுகோள்

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது…. தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசின் வேண்டுகோளை ... Read More »

மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 611 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு எடப்பாடி, ஓமலூர் உட்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதற்காக 611 கோடி ... Read More »

மன அழுத்த பிரச்சினை: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு

மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார். மெல்போர்ன், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், அதிரடிக்கு பெயர் போனவர். தனத்து அசாத்திய ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள மேக்ஸ்வெல், சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் குறிப்பிடும்படியாக ஆடவில்லை. தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ... Read More »

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது- அசோக் கெலாட் எச்சரிக்கை

ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூர், இந்தியா ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:- பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக) வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com