Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
முக்கிய செய்திகள்: | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 30
Thursday , 7 July 2022
Home » முக்கிய செய்திகள்: (page 30)

முக்கிய செய்திகள்:

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு பெரிய அளவில் சாதிக்கிறார்கள்

இளைஞர்கள் பெரிய கனவுகளைக் கண்டு, பெரிய அளவில் சாதிப்பதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இதுதான் புதிய இந்தியா என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். 50-வது மன் கீ பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மன் கீ பாத் தொடங்கப்பட்டதன் பின்னணியை விவரித்தார். மன் கீ பாத் என்னும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி, 130 கோடி மக்களுக்குமானது என்றும், இதில் அரசியல் இல்லை என்றும் மோடி விளக்கமளித்தார். மன் கீ ... Read More »

அடுத்த 6 மாதத்திற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் தேவையில்லை

அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திலும், தன்னாட்சி அதிகாரத்திலும் மத்திய அரசு தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரிசர்வ் வங்கியை கைப்பற்றி, அதன் வசம் உள்ள உபரி மூலதனத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, அடுத்த 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பணம் தேவையில்லை தெரிவித்தார். மேலும், பணப்புழக்கம் ... Read More »

தொழில் அதிபரைக் கடத்திய நபர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொழில் அதிபர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடத்தல் கும்பலில் ஒருவனை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து, 3 பேரை தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானி ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் என்பவரை மர்ம கும்பல் ஒன்று சொகுசு காரில் கடத்திச் சென்றது. தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட காவல்துறையினர் அந்த கும்பலை பிடிக்க பின்தொடர்ந்து வந்துள்ளனர். கடத்தல் கும்பல் சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதி வழியாக செல்வதாக தெரிய வந்ததை அடுத்து, காவல்துறையினர் ... Read More »

மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் இருமுறை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரதமர் ராஜ பக்சேவும், அவரது அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்த நிலையில் ராஜபக்சே பிரதமர் அலுவலகத்தை அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவரது நியமனம் ... Read More »

புயல் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக ஆய்வு செய்கிறது மத்திய குழு

புயல் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக மத்திய குழு, இன்று ஆய்வு செய்கிறது. கஜ புயலின் காரணமாக, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன. கஜ புயல் பாதிப்பை ஆய்வு செய்யவும், சேதத்தை மதிப்பிடவும் மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் குழு நேற்று, திருச்சி, புதுக்கோட்டைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் ஆய்வை தொடங்கிய மத்திய ஆய்வு குழுவினர் இன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு ... Read More »

தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர் தற்போது என் தாயைப் பழிக்கின்றனர்

தன்னுடன் போட்டியிட முடியாத காங்கிரஸ் கட்சியினர், தற்போது தன் தாயைப் பழிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தார்பூரில் பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை மாமா என அவதூறு செய்பவர்கள், தங்கள் சொந்த மாமாக்களான குவாத்ரோச்சி, வாரண் ஆண்டர்சன் பற்றி சிந்தித்துப் பார்க்கட்டும் என விமர்சனம் செய்தார். 4 தலைமுறை காங்கிரஸ் ஆட்சியையும், தேநீர் வியாபாரியான தனது 4 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறிய பிரதமர் நரேந்திரமோடி தம்முடைய ... Read More »

சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த மின்வாரிய பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

கஜ புயல் சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த மின்வாரிய பணியாளர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி ரூபாய் 15-லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜ புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திர மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் ... Read More »

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாள்களுக்கு நீட்டிப்பு

கேரள மாநிலம் சபரிமலை, நிலக்கல், பம்பா ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், ஐயப்ப பக்தர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலை, நிலக்கல், பம்பா பகுதிகளில் 144 ... Read More »

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு வருகை

கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. மூன்று நாட்கள் இந்த குழு ஆய்வு செய்கிறது.கஜா புயல் சேதங்களுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயல் பாதிப்புகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக 4 கோடியே 50 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக தரவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க, 200 கோடியை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. குடிசை ... Read More »

ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது ஆட்டு இறைச்சி தான் ஆய்வில் தகவல்!!

இராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி தான் என அதை ஆய்வு செய்த சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது. இராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் கிலோ இறைச்சியை நவம்பர் 17ஆம் நாள் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த இறைச்சி ஆட்டிறைச்சி இல்லை என்றும் நாய் இறைச்சி என்றும் கூறப்பட்டதால் ஒரு உருப்படியை மட்டும் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். நாய் இறைச்சி என்றும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com