சென்னை: தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நிர்வாக முறைகளைச் சிறப்பாக செய்வதற்கு ஏதுவாக பெரிய பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்று தொகுதிகளாகப் பிரித்து அவற்றைப் புதிய மாவட்டங்களாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துவந்தது. அதன்படி தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37ஆக உயர்த்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; ... Read More »
முக்கிய செய்திகள்:
சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் : தமிழகத்தில் 256 இடங்களில் அமைகிறது
டெல்லி : சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்கள் விடும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்யும் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்க 2,636 சார்ஜ் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேட்டரியில் இயங்கும் வாகன தயாரிப்பு (எஃப்ஏஎம்இ -இந்தியா 2) ... Read More »
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 5 மணி நிலவரம் வாக்கு எண்ணிக்கை சென்னை தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவும், தி.மு.க.வும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி வெளியான நிலவரம் வருமாறு: மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 240 இடங்களிலும், திமுக 266 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை இரு இடத்தில் ... Read More »
எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமருக்கு மம்தா கேள்வி
மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜி, எப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்? பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மக்கள் அனைவரும் என்னுடன் ... Read More »
குடியுரிமை சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் -அமித் ஷா உறுதி
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். –– ADVERTISEMENT –– இது ஒருபுறமிருக்க, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ... Read More »
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது…
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் நடைபெறும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதிஉள்ளிட்ட மற்ற சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணியளவில் கோவின் பின்புறம் உள்ள 2 ... Read More »
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்
நாளை விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட்டுக்கான கவுண்டவுன் இன்று மாலை 3 மணிக்கு துவங்க இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோள் நாளை மாலை 3.25 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது ... Read More »
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு.. தீவிரமடையும் போராட்டங்கள்..!
குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அசாமில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், வடகிழக்கு மாணவர்கள் கூட்டமைப்பு, 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால், அசாம் மாநிலத்தின் குவஹாத்தி (Guwahati), திப்ருகார்(Dibrugarh) உள்ளிட்ட இடங்களில், கடைகள், ... Read More »
சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு
சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக நிலக்கல்லில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு சபரிமலை ஐயப்பன் கோவில் திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை ... Read More »
குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்க முடிவு
சிவில் நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு செய்ய பாகிஸ்தான் ராணுவ சட்டத்தை மாற்றியமைக்கிறது. இஸ்லாமாபாத், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (வயது 49). இவர் இந்திய கடற்படையில் பணிபுரியும் அதிகாரி என்றும், தங்கள் நாட்டில் உளவு வேலை பார்த்தார் என்றும் பாகிஸ்தான் அபாண்டமாக பழி சுமத்தி, 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் 3-ந்தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதுகுறித்த தகவலை இந்தியாவுக்கு 22 நாட்கள் கழித்து தெரிவித்தது. ஆனால் குல்பூஷண் ஜாதவ், இந்திய கடற்படையின் ஓய்வு ... Read More »