Thursday , 19 September 2019
Home » முக்கிய செய்திகள்:

முக்கிய செய்திகள்:

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம்

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும். இதேபோல் எதிர் திசையில் திருவள்ளுர், அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழிதடத்தில் 2 புறநகர் மின்சார ரயில்களின் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. Read More »

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜ.க.விற்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் சாய்பாயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராம்பூர் மற்றும் படவுன் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக வந்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும். படவுன் தொகுதியில் மாநில அமைச்சர் ஒருவர் அங்கு போட்டியிடும் தனது மகளுக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவந்துள்ளது. ... Read More »

புதுச்சேரி – பெங்களுரு இடையிலான ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வாரம் இருமுறை நிறுத்தப்படும்

புதுச்சேரி – பெங்களுரு இடையிலான ஸ்பைஸ் ஜெட் விமான சேவை வாரம் இருமுறை நிறுத்தப்படும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஹைதராபாத் மற்றும் பெங்களுருவில் இருந்து தினசரி வந்து செல்லும் விமான சேவையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி – பெங்களூர் இடையில் இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை, பராமரிப்பு காரணங்களுக்காக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஹைதராபாத்திலிருந்து புதுச்சேரி வரும் விமான சேவையில் எந்த மாற்றமும் ... Read More »

என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவி கைது

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, ரோகித்தின் தாயார் உஜ்வாலா, காவல்துறையில் அளித்த தகவல் விசாரணையின் போக்கை மாற்றியது. தன் மருமகள் அபூர்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பணம்தான் குறிக்கோள் என்றும், ரோகித்தின் சொத்தை அபகரிக்க விரும்பியதாகவும் உஜ்வாலா ... Read More »

சீனாவில் ரசாயன ஆலையில் விபத்து

சீனாவின் இன்னர் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள டோங்சிங் கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஆலையின் ஒரு பகுதியில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சீனாவில் சமீப காலமாக ரசாயன ஆலைகளில் விபத்து அதிகரித்துள்ளது. கடந்த ... Read More »

சட்டமன்றத் இடைத்தேர்தலில், போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. வருகின்ற மே- 19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவகுறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்யிடுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெயிடப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் வழக்கறிஞர் விஜயராகவன், அரவக்குறிச்சி தொகுதியில்; செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதியில் ரேவதி, ஒட்டப்பிடாரம் தனி தொகுதியில் அகல்யா ... Read More »

ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது, கார் மோதி விபத்து – 2 பேர் பலி

ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், இருவர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே புலவனூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் தனது தோட்டத்தில் விளைந்த வாழைத்தாரை விற்பதற்காக அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஈங்கூர் சென்றுள்ளார். தங்கள் பணி முடிந்து இருவரும் ஊர் திரும்பும் போது, அவர்களது வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த பழனிசாமி பெருந்துறை அரசு மருத்துவமனையில் ... Read More »

குன்றத்தூர் அதிமுக ஊராட்சி செயலாளர் மகன்;, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!

குன்றத்தூர் அதிமுக ஊராட்சி செயலாளர் மகன்; மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியில் வசிப்பவர் பாஸ்கர். தற்போது அதிமுக கட்சியின் சார்பில் ஊராட்சி செயலாளராக இருந்து வருகின்றார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகன்; தீபக்ராஜ் திங்கள் கிழமை அன்று வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திருமணத்துக்கு செல்கின்றேன் எனக் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் விடு திரும்ப வில்லை, எங்கேயும் தேடியும் ... Read More »

மம்தா பானர்ஜியின் டிரைலரை நீக்க வேண்டும்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் டிரைலரை இணையத்தில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா பானர்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து பாகினி- பெங்கால் டைக்கிரஸ் என்ற பெங்காலி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நேஹல் தத்தா என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ரூமா சக்கரபோர்த்தி என்பவர் மம்தா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிட உத்தரவிட கூடாது என்று பா.ஜ.க ... Read More »

மக்கள் கடினமாக உழைத்தால், அவர்களை, வெற்றி, தானாக பின் தொடரும்!

மக்கள் கடினமாக உழைத்தால், அவர்களை, வெற்றி, தானாக பின்தொடரும் என, பிரதமர் நரேந்திர மோடி, உறுதிபட கூறியிருக்கிறார். டெல்லி, 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இல்லத்தில், பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பேட்டி கண்டார். அப்போது, தாம் ஒரு சன்னியாசியாக வேண்டும் என நினைத்திருந்ததாகவும், ஒருபோதும் பிரதமர் ஆவேன் என நினைத்தது இல்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தாம் ஒருபோதும் கோபப்படுவது கிடையாது என்றும், இதனை இன்றளவும் மக்கள் ஆச்சர்யமாக பார்ப்பதாகவும் மோடி தெரிவித்திருக்கிறார். ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com