Thursday , 21 March 2019
Home » வணிகம் (page 5)

வணிகம்

இந்திய பார்மா நிறுவனத்தை சீன நிறுவனம் வாங்க திட்டம் …

GROWTH DRIVERS FOR TOP 10 INDIAN PHARMA COMPANIES

ஹைதராபாத்தை சேர்ந்த கிளான்ட் பார்மா நிறுவனத்தை, சீனாவை சேர்ந்த ஷாங்காய் போசன் பார்மா குழுமம் வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்தது. 130 கோடி டாலரில் இந்திய நிறுவனத்தை வாங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) மற்றும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்ஐபிபி) அனுமதியும் கிடைத்திருக்கிறது. இருந்தாலும் மத்திய அரசு இந்த இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இணைப்பு நடைபெறும் பட்சத்தில் இந்தியா சீனா இடையே மிகப்பெரிய கையகப்படுத்துதலாக இருக்கும். (சீன நிறுவனம் இந்திய நிறுவனத்தை வாங்குவதன் அடிப்படையில்) பொருளாதார விவகாரங்களுக்கான ... Read More »

அதிவேக ..அதிதூர பயணத்துக்கேற்ற வோல்வோ கிராஸ் கன்ட்ரி கார்ஸ் …

2017-Volvo-V90-Cross-Country-rear-three-quarter-01

கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஸ்வீடனின் வோல்வோ நிறுவனம் இந்திய சாலைகள் மற்றும் சாகசப் பயணத்துக்கேற்ற வோல்வோ வி90 கிராஸ் கன்ட்ரி காரை அறிமுகம் செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வோல்வோ கார்ஸ் 20 ரக மாடல்கள் அறிமுகமாயின. உலக அளவில் இன்னமும் பிரபலமாக இருக்கும் இந்த மாடல் கார்களின் மேம்படுத்தப்பட்ட ரகமாக கிராஸ் கன்ட்ரி கார் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சாலைகளில் பயணிக்கும்போது சொகுசும், ஆடம்பரத்தை பறைசாற்றுவதாக இது நிச்சயம் இருக்கும். சாகசப் பயணத்தின் போது அதற்கேற்ப இதன் செயல்பாடு ... Read More »

கணக்கில் வராத பணம் ரூ.71,941 கோடி என்ன ஆனது ?

Parliment

கடந்த மூன்று ஆண்டுகளில் கணக்கில் வராத பணம் ரூ.71,941 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆய்வுகள், சோதனை மற்றும் கணக்கில் வராத பணத்தை கையக்கப்படுத்துதல் மூலம் இந்த பணத்தைக் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அதாவது கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி வரை மட்டும் கணக்கில் வராத பணம் ரூ.5,400 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 303.367 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ... Read More »

டாடா கன்சல்டன்சி சர்வீசசின் நிகர லாபம் குறைவு …

TCS_Tata_Consultancy_TCS1-1-770x433

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசசின், நிகர லாபம் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 5 ஆயிரத்து 945 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் டிசிஎஸ் நிறுவன லாபம் ஆறாயிரத்து 317 கோடியாக இருந்தது. இது 5 புள்ளி 9 சதவிகித சரிவாகும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் பத்து சதவிகிதம் குறைந்துள்ளது. Read More »

அமேஸிங் …அமேசான் ; இப்போது சில்லறை விற்பனையில் களமிறங்குகிறது…

amazon_logo_RGB

அமேசான் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களைக் கவர ஸ்மார்ட் போன்கள், உடைகள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பிக் பில்லியன் சேல் போன்ற பல்வேறு சலுகைகளை அடிக்கடி வழங்கி வாடிக்கையாளர்களின் கவனத்தையும் அது ஈர்த்து வந்தது. இந்நிலையில் உணவு வர்த்தகத்திலும் அமேசான் தற்போது களமிறங்கியுள்ளது. அமேசானுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவு பொருள் சில்லறை விற்பனைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி அமேசான் நிறுவனம் முழு உரிமை கொண்ட வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்கவுள்ளது. இதன் ... Read More »

உள்ளூர் விமானங்களில் இனி அசைவ உணவு வழங்கப்படமாட்டாது ; ஏர் இந்தியா நிறுவனம்…

article-icfwiurnlv-1453814989

தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் உள்ளூர் விமான சேவைகளில் இனி அசைவ உணவு வழங்கப்படமாட்டாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளூர் விமானங்களில் குறைந்த கட்டண பிரிவில் (எகானமி) பயணம் செய்பவர்களுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பிஸினஸ் மற்றுக் எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணிப்பவர்களுக்கு தொடர்ந்து அசைவ உணவு வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவுப் பொருட்கள் ... Read More »

விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ; ஜுலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்…

vijay-mallya650_650x400_71497415923

விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜுலை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் ரூ.9,000 கோடி கடன் பெற்றும் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் பலமுறை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜராக உத்தரவிட்டும் ஆஜராகததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏகே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் யாரும் ஆஜராகததால் உச்ச நீதிமன்ற ... Read More »

தொழில்நுட்ப காரணங்களால் தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் 3 மணி நேரம் முடக்கம் …

Stock-market-investment-guide

தொழில்நுட்ப காரணங்களால் தேசிய பங்குச் சந்தையின் வர்த்தகம் நேற்று 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. நேற்று காலை தேசிய பங்குச் சந்தையில் பங்குகளில் விலையை தெரிந்து கொள்ளவும், குறியீடுகளையும் முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள முடியாத சூழல் உருவானது. இதனால் முதலீட்டாளர்களிடையே பரபரப்பு நிலவியது. தேசிய பங்குச் சந்தை நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தது. தொழில் நுட்ப கோளாறு சரி செய்யபட்டபின் 12.30 மணியிலிருந்து மீண்டும் வர்த்தகம் தொடங்கியது. 9,727 புள்ளியிலிருந்து மீண்டும் வர்த்தகம் நடைபெற்றது. அனைத்து துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமானது. ... Read More »

சிண்டிகேட் வங்கி வட்டி விகிதம் 0.15 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதமாக குறைவு….

Syndicate_Bank.svg

நடுத்தர கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் வரை சிண்டிகேட் வங்கி குறைத்துள்ளது. இந்த வட்டிக்குறைப்பு ஜூலை 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு மாத கால நடுத்தர கடனுக்கான வட்டி விகிதம் 8.35 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத கால நடுத்தர கடனுக்கு வட்டி விகிதம் 8.40 சதவீதத்திலிருந்து 8.15சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத கால நடுத்தர கடனுக்கு வட்டி விகிதம் 8.60 சதவீதத்திலிருந்து 8.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ... Read More »

விலை குறையும் சாம்சங் மொபைல்கள் …

samsung-galaxy-s8-010

ப்ளாக்‌ஷிப் கில்லர் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ரூ.4000 வரை சந்தை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மொத்த விற்பனை மையம் மஹேஷ் டெலிகாம்தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி மாடல்களில், 6GB RAM உடன், 128GB உள்ளடக்கிய மொபைல் ரூ. 74,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை மஹேஷ் டெலிகாம்வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பக்கத்தில் ரூ.4090 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.70,900 என விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் Exynos 8895 பிராசஸருடன் இணைந்து செயல்படும் 4GB ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com