ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் கறுப்புப் பணம் பற்றி சிபிஐ நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டது. மேலும் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ... Read More »
வணிகம்
மீண்டும் பங்குகளை வாங்க முடிவு ; இன்ஃபோஸிஸ் நிறுவனம் அதிரடி…
3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்கவுள்ளதாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாட்டின் 2வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயலதிகாரி உள்ளிட்ட பதவிகளிலிருந்து விஷால் சிக்கா அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் பங்குச்சந்தையில் இன்ஃபோஸிஸ் நிறுவன பங்குகளின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 5 ரூபாய் முகமதிப்பு கொண்ட, முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளை திரும்ப வாங்க இன்ஃபோஸிஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ... Read More »
மினிமம் பேலன்ஸ் ; அபராத நடவடிக்கையால் எஸ்பிஐ வங்கிக்கு 235.06 கோடி வருமானம் …
நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சில மாதங்களுக்கு முன்பு சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் அதாவது குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இதனை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் எஸ்பிஐ வங்கி சுமார் 235.06 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது. Read More »
ஏட்டிக்கு போட்டியாய் ஏர்டெல் ; ஜியோவிற்கு நிகராய் புதிய ஆஃபர்கள் அறிமுகம் …
இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் 4ஜி போன் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதன்படி தீபாவளிக்கு முன்பு 2,500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஜியோவிற்குப் போட்டியாக அந்தப் போனுடன் பண்டில் ஆஃபராக இலவச இணையதளத் தரவு மற்றும் குரல் அழைப்புகளை வழங்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Read More »
சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.6 சதவீதம்…
தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.6 சதவீதம் அதிகரித்து ரூ. 140.32 கோடியை எட்டியுள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டில் வங்கியின் லாபம் ரூ. 123.52 கோடியாக இருந்தது. வங்கியின் வருமானம் ரூ. 960.86 கோடியாகும். இது முந்தைய ஆண்டில் ரூ. 883.30 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ. 502 கோடியாகும். வங்கியின் வருமானம் கடந்த நிதி ஆண்டில் ரூ. 3,657 கோடியாக இருந்தது. நடப்பு ... Read More »
டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநரின் ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடி…
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா) டி.வி. நரேந்திரனின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.8.17 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 11.87 சதவீதம் உயர்வாகும். 2105-16-ம் நிதி ஆண்டில் ரூ.7.3 கோடியாக இவரது சம்பளம் இருந்தது. குழும செயல் இயக்குநர் கவுசிக் சாட்டர்ஜியின் சம்பளம் 10.06 சதவீதம் உயர்ந்து ரூ.8.09 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் முக்கியமான உயரதிகாரிகளின் சம்பளம் பெரிய அளவில் உயரவில்லை என ... Read More »
கறுப்பு பண விவரங்களை பகிர்ந்துகொள்ளவதற்கு ஸ்விஸ் வங்கி ஒப்புதல்…
இந்திய தகவல் பாதுகாப்பு சட்டங்கள் பாதுகாப்பானவையாக இருக்கின்றன. கறுப்பு பணம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு இந்த ஒப்பந்தங்கள் போதுமானவையாக இருக்கிறது என ஸ்விஸ் அரசு தெரிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்விஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் தகவல்களை இந்தியா தெரிந்துகொள்ள முடியும். இதுதொடர்பாக அறிக்கையை ஸ்விஸ் அரசு வெளியிட்டிருக்கிறது. அதில் தகவல்களைப் பரிமாற்றம் செய்ய பாதுகாப்பான நாடு இந்தியா என குறிப்பிட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஸ்விஸ் பெடரல் கவுன்சில் கறுப்பு பண தகவல் பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்தியா மட்டுமல்லாமல் மேலும் ... Read More »
அருண் ஜேட்லியின் மக்கள் கருணை …
சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) கிடைக்கும் பலனை பொதுமக்களுக்கு அளியுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். மாநில அரசுகள் அடுத்த 15 தினங்களுக்குள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 20-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலான சரக்குகளை 10 கிலோ மீட்டருக்கு மேல் எடுத்து ... Read More »
ஆப்பிள் பங்குகள் மூலம் ஒரே நாளில் வாரன் பஃபெட்டுக்கு ரூ.6,500 கோடி ஆதாயம் …
ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மூலம் ஒரே நாளில் வாரன்பஃபெட்டுக்கு 100 கோடி டாலர் (ரூ.6587கோடி) ஆதாயம் கிடைத்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய பங்கு முதலீட்டாளரான பஃபெட் ஆப்பிள் நிறுவனத்தில் 2.5 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இந்த பங்குகள் மூலம் பஃபெட்டுக்கு ஒரே நாளில் 100 கோடி டாலர் ஆதாயம் கிடைத்துள்ளது. பஃபெட்டின் ஹாத்வே நிறுவனத்தின் வசம் ஆப்பிள் நிறுவனத்தின் 13.5 கோடி பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஹாத்வே நிறுவனத்துக்காக ஜனவரி மாதத்தில் 7.6 கோடி பங்குகளையும் வாங்கியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ... Read More »
ஜியோ-வில் அதிவேக 4ஜி ; நெட்வொர்க் வரிசையில் ரிலையன்ஸ் முதலிடம்…
இந்தியாவின் வேகமான நெட்வொர்க் வரிசையில் ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் தரவிறக்க சராசரி வேகம் விநாடிக்கு 18 மெகாபைட்டாக (எம்பிபிஎஸ்) உள்ளது. டிராய் சோதனைகளின்படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தரவிறக்க சராசரி வேகம் மிகக் குறைவாக 8.91எம்பிபிஎஸ் ஆக உளளது . பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தரவிறக்க வேகம் மிக அதிகமாக இருப்பதாக தனியார் நிறுவனத்தின் அளவீட்டின் அடிப்படையில் ஏர்டெல் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோ ... Read More »