வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மறைமுகமாக உதவ முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இதுவரை சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 100 ... Read More »
வணிகம்
செல்போன், ஏலக்காய் வரி குறைப்பு!
செல்போன், ஏலக்காய் ஆகியவற்றுக்கான வரி குறைப்பு, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்ற அறிவிப்பு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 25-ந் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு வரிச்சலுகைகளை அவர் அறிவித்தார். அவற்றில் நூலுக்கு பசையிடுதல், ஏலக்காய், செல்போன் ஆகியவற்றுக்கான வரிகள் குறைக்கப்படுவதாக அவர் கூறினார். இந்த நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் அரசிதழ் ஒன்றை வெளியிட்டார். அதில் நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்த ... Read More »
கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால், வட்டி ரத்து செய்யப்படும்!
கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால் வட்டி ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, அதாவது ரூபாய் 5 அயிரத்து 500 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழக்குவதை இலக்காக கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும். மேலும், கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு இக்கடன்கள் வட்டியின்றி கிடைக்கும். இதற்கான, வட்டி மானியம் வழங்கிட இந்த பட்ஜெட்டில் ரூபாய் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று ... Read More »
காப்பீட்டுத்துறையில் சேவை வரியை நீக்க வேண்டும்
காப்பீட்டுத்துறையில் சேவை வரியை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் எல்.ஐ.சி.கிளை லியாபி சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் சிவகிரியில் எல்.ஐ.சி.கிளை லியாபி சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் காப்பீட்டுத்துறையில் சேவை வரியை நீக்க வேண்டும், பாலிசி முதிர்ந்து கிடைக்கும் தொகைக்கான வரிமான வரியை நீக்க வேண்டும், பாலிசி தாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்தித்தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. Read More »
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும்!
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; வெளியிட்டுள்ள அறிக்கையில்,பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு 15 நாள்களுக்கு ஒருமுறை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்றவாறு அவற்றின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மார்ச் 15-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே ... Read More »
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில், பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்கு உயர்வு!
நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1–ந்தேதி முதல் உயருகிறது. இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும் போது, ரயிலில் பயணம் மேற்கொள்வோர் தங்கள் பயணச்சீட்டுகளை 60 நாள்களுக்கு முன்னர் பதிவு செய்து வருகின்றனர். இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. ரயில் நிலையத்தில் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் பயணச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயணச் சீட்டு எடுப்பதற்கான நேரத்தைக் ... Read More »
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக, பணம் பதுக்குவோர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை!
கருப்புப் பணத்தை பதுக்குதல் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வழிசெய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கணக்கில் வராத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் மசோதா-2015 எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கடந்த பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார்.இந்நிலையில், இந்த மசோதா குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது, இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ... Read More »
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்பு!
நேரடி மானிய திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து, நாடு முழுவதும் சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 கோடியே 30 லட்சம் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களில், 75 சதவீதம் பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு சந்தை விலையில் கியாஸ் சிலிண்டர் அளிக்கப்படுகிறது. அதற்குரிய மானியத்தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. போலிகளை ஒழிக்கவும், சிலிண்டர்களை வேறு பயன்பாட்டுக்கு திருப்பி விடுவதை தடுக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ... Read More »