Thursday , 21 March 2019
Home » வணிகம் (page 30)

வணிகம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது.

M_Id_462635_Gold_jewellery

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2513-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.56 குறைந்து ஒரு சவரன் ரூ.20104-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26880-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.10-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36575-க்கும் விற்கப்படுகிறது. Read More »

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் – உலக வங்கி

download (8)

சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளன. இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற நிலையை இந்தியா அடையும். இதுவரை சீனாதான் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்து வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு வளர்ச்சியானது சர்வதேச நாணய நிதியம் கூற்றுபடி 7.5 சதவீதமாகவும், உலக வங்கியின் ஆய்வுபடி அது 7.9 ... Read More »

இந்தியாவின் ஏற்றுமதி இலக்கினை அடைய முடியாது அமைச்சக அதிகாரி தகவல்

ID-10085126

இந்தியாவின் ஏற்றுமதி இலக்கினை அடைய முடியாது என வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். 2014-15 நிதி ஆண்டுக்கான ஏற்றுமதி இலக்கு 34,000 கோடி டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் 30,800 முதல் 31,000 கோடி டாலர் வரை மட்டுமே ஏற்றுமதி இருக்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 2013-14-ம் நிதி ஆண்டில் 31,235 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி இருந்தது. அந்த நிதி ஆண்டிலும் ஏற்றுமதி இலக்கினை இந்தியாவால் அடைய முடியவில்லை. அப்போதைய ஏற்றுமதி இலக்கு 32,500 கோடி டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ... Read More »

சென்னையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

M_Id_462635_Gold_jewellery

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 மட்டும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2525-க்கு விற்கப்படுகிறது.சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.20200-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27010-க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50-க்கும், மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36935-க்கும் விற்கப்படுகிறது. எதிர்வரும் 17 ஆம் திகதி அட்சயதிருதியை என்பதுடன் மக்களின் நகை வேண்டுவதற்கான மோகம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Read More »

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

M_Id_462635_Gold_jewellery

சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 80 அதிகரித்துள்ளது, ஒரு பவுன் தங்கம் ரூ. 20 ஆயிரத்து 136-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 517-க்கு விற்பனையானது. இதேபோல, வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. வெள்ளிக்கிழமை விலை நிலவரம்: ஒரு கிராம் தங்கம் ரூ. 2517 ஒரு பவுன் தங்கம் ரூ. 20136 ஒரு கிராம் வெள்ளி ரூ. 39.60 ஒரு கிலோ வெள்ளி ரூ. 37050 வியாழக்கிழமை விலை நிலவரம்: ஒரு கிராம் தங்கம் ரூ. 2507 ஒரு ... Read More »

மோடியின் புதிய பொருளாதார அணுகுமுறை.

1897378

அரசு பத்திரங்களில் மறுமுதலீடு செய்யும் அன்னிய முதலீ்ட்டாளர்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியிருக்கிறது பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் அன்னிய முதலீ்ட்டாளர்களுக்கு இந்திய அரசு பத்திரங்கள் 90 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து அன்னிய முதலீடு அதிகரிக்கவே மீதமுள்ள இடைவெளியையும் குறைத்திருக்கிறது செபி. செபியின் இந்த புதிய முடிவால் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பிரதமராக வந்த பிறகு நிலையான ஆட்சி மற்றும் ... Read More »

பெட்ரோல் பங்குகள் நாளை பகலில் மட்டும் இயங்கும்- விற்பனை டீலர்கள்

vlcsnap-2015-04-10-10h23m37s169

பெட்ரோல்-டீசல் கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நாளை பகலில் மட்டும் இயங்கும் என்று விற்பனை டீலர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பிரநிதிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 2010-ம் ஆண்டு அபூர்வா சந்திரா கமிட்டி குழு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் 50 காசுகளும், , டீசலுக்கு 2 ரூபாயும் கமிஷன் தொகையாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வழங்க பரிந்துரை செய்ததை சுட்டிக்காட்டினார். ஆனால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் ... Read More »

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு.

parliament_350_121812072129

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு. ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என அறிவிப்பு!! கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுஇ 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல்இ 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும்இ அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இந்த உயர்வூ 2014–ம் ... Read More »

தமிழகத்திலுள்ள 18 சுங்கச் சாவடிகளில், இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!

images

தமிழகத்திலுள்ள 18 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதன்படி 1992 ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்கக்கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 18 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More »

வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு, நேரடி மானியத்திட்டத்தை கைவிட வேண்டும்!

narendra-modi-final

வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் ஏழைகளுக்கு மறைமுகமாக உதவ முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இதுவரை சமையல் எரிவாயு மானியத்தை கைவிட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 100 ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com