Thursday , 21 March 2019
Home » வணிகம் (page 3)

வணிகம்

சென்னை ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில், வருமான வரி சோதனை..!

chennai gandhi hoisery

சென்னையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் நகைக்கடை உள்ளிட்ட 23 இடங்களில் நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைகளில் 7 கோடி ரூபாய் பணம், 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள காந்தி குழுமத்தின் ஆயத்த ஆடைக் கிடங்கு, வேப்பேரியில் உள்ள நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மருத்துவர் பிரகாஷ் சந்த் ... Read More »

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்: டெல்லியில் அதிகாரி பேட்டி!!

1527509972-Tuticorin-Sterlite-plant-BCCL

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்தார். வேதாந்தா நிர்வாகத்தை சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் நேற்று டெல்லி வந்திருந்தார். அங்கு நிருபர்கள் அவரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், தூத்துக்குடியில் நிகழ்ந்த கலவரம் பற்றியும் கேள்விகள் எழுப்பினார்கள்.அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் தற்போது போராட்ட அனல் வீசி வருகிறது. அந்த அனல் ஓய்ந்த பிறகு நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம். அந்த பகுதி மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் ... Read More »

2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை: வெங்கையா நாயுடு பாராட்டு

Venkaiah_Naidu_Facebook_3x2-701x468

பிளாஸ்டிக்கிற்கு தடைவிதிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் ... Read More »

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு! அமலாக்கத்துறையில்; இன்று ஆஜராகிறார் ப. சிதம்பரம்!!

15ss41

ஏர்செல்,-மேக்சிஸ் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் , ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை 6 மாதத்திற்கு முடிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் ஜூன் 5-ம் தேதி ஆஜராக ... Read More »

எஸ்.பி.ஐ இணை வங்கிகளின் “செக் புக்” மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும்

dc-Cover-20160112170832

எஸ்.பி.ஐ வங்கியின் இணை வங்கிகளுடைய செக் புக் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எஸ்.பி.ஐ சுமார் 1300 வங்கிகளுடைய ஐ.எஃப்.சி குறியீட்டை மாற்றியது. டெல்லி, மும்பை, சண்டிகார்க், பெங்களூரு, ஜெய்ப்பூர், அஹமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே, போப்பால், ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள வங்கிகளின் குறியீட்டை மாற்றியது. இதனையடுத்து அந்த வங்கிகளின் செக் புக்கை செப்டம்பர் 30,2017-க்குள் மாற்ற வேண்டும் என அறிவித்தது. பின்பு, அதற்கான கால வரையரையை டிசம்பர் 31,2017 வரை நீட்டித்தது. ... Read More »

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு …

RBI

மத்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டும் வங்கியாக செயல்பட்டு வருகின்றது. மேலும், அதற்கென தனி இணையத்தளம் ஒன்று உள்ளது. இந்தநிலையில், ரிசர்வ் வங்கி இணையத்தளம் போன்றே போலியான இணையத்தளம் ஒன்று  உருவாக்கப்பட்டு, அதில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அது போலியான இணையத்தளம் என்றும், அதை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ... Read More »

ஐபோன் 8 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்…

maxresdefault

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 (iPhone 8) மொபைல் ப்ரீமியம் மொபைல் பிரியர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெரிய திரையுடன் வரவிருக்கும் இந்த மொபைல் இன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ஐபோன் 8 மொபைலுக்கு iPhone X என்று பெயர் சூட்டப்படலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது.இந்த மொபைலுடன் சேர்த்து ஐபோன் 7எஸ் (iPhone 7s) மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் (iPhone 7 plus) ஆகிய மொபைல்களும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஆப்பிள் ஸ்மார்ட் டிவி ... Read More »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு …

PETROL_BUNK_6_2790f 2

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 72 ரூபாய் 87 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 73 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 14 பைசா உயர்ந்துள்ளது. இதேபோன்று, டீசல் விலை 27 பைசா அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. Read More »

கார்களுக்கான செஸ் வரி உயர்வு…

0

கார்களுக்கான செஸ் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கார்களுக்கான செஸ் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடுத்தர கார்களுக்கு 2 சதவீதமும், பெரிய ரக கார்களுக்கு 5 சதவீதமும், சொகுசு ரக கார்களுக்கு 7 சதவீதமும் செஸ் வரி உயர்த்தப்படுகிறது. சிறிய ரக கார்களுக்கு செஸ் வரி உயர்த்தப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியில் கார்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்பட்டது. இது, அதற்கு முன்பு இருந்த மத்திய மாநில வரிகளை விட குறைவாக ... Read More »

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு ; தயாநிதி – கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

aircel-maxis-web-660

ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் தயாநிதி மற்றும் கலாநிதிமாறனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில் கறுப்புப் பணம் பற்றி சிபிஐ நீதிமன்றத்தில் சரியாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டது. மேலும் இந்த வழக்கில் தயாநிதிமாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com