Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 29
Tuesday , 16 August 2022
Home » வணிகம் (page 29)

வணிகம்

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை   ரூ. 5 அதிகரித்து ரூ. 2,528க்கும் சவரன் ஒன்றிற்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 20,224க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 6 அதிகரித்து ரூ. 2,704க்கும் விற்கப்படுகிறது. சில்லரை வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இன்றி ரூ. 38.80 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 65 அதிகரித்து ரூ. 36,285 என்ற அளவில் உள்ளது. Read More »

பங்குச்சந்தையில் மெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்துள்ளது

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 63.43 ரூபாயாக உள்ளது. அந்நிய செலாவணிச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளுக்கு அமெரிக்க டாலர் தேவை அதிகரித்ததையடுத்தும், அந்நிய முதலீடு பங்குச்சந்தையில் குறைந்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து காணப்பட்டதாக தெரிகிறது. Read More »

பேஸ்புக் முதல் காலாண்டின் வருவாயில் 20 வீதம் சரிவை சந்தித்துள்ளது

சமுக வலைத்தளத் துறையில் பேஸ்புக் நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டு இலாப அளவு 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இந்நிறுவனத்திற்கு மொபைல் விளம்பரத்தின் மூலம் அதிக அளவிலான வருவாயக் கிடைத்தாலும், இலாபத்தில் சரிவை தழுவியுள்ளது பேஸ்புக் நிறுவனம். இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 42 சதவீதம் அதிகரித்து 3.5 பில்லியன் டாலராக உள்ளது. இதில் விளம்பர வருவாய் முக்கியப் பங்குகளை வகுக்கிறது. டொலர் மதிப்பு மாற்றத்தால் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய் மட்டும் 3.32 பில்லியானாக உள்ளது. ... Read More »

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 7 அதிகரித்து ரூ. 2,533க்கும் சவரன் ஒன்றிற்கு ரூ. 56 உயர்ந்து ரூ. 20,264க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட்  தங்கம் கிராம் ஒன்றுக்கு  ரூ. 2,709க்கு விற்பனையாகிறது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றி்ற்கு 10 காசுகள் குறைந்து ரூ. 38.90 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 36,320 என்ற அளவிலும் உள்ளது. Read More »

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மே 23,24ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் 9, 10 அன்று நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோடை காலத்துக்கு பின் மாநாட்டை நடத்த முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. Read More »

அந்நிய செலாவணிச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டொலருக்கு நிகரான  24 காசுகள் குறைந்து 63.15 ரூபாயாக இருந்தது. அந்நிய செலாவணிச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளால் அமெரிக்க டொலர் மீதான தேவை அதிகரித்ததால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை கண்டது. Read More »

எடை, தரத்தை உறுதிப்படுத்தாத நகைக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நுகர்வோர் சங்கம்.

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கினால், பொன்னும் பொருளும் சேரும் என்பதாக ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் பொன் நகைகளை மக்கள் வாங்க தயாராகி வருகின்றனர். கடந்த வருடத்தை விட இவ்வருடம் 20 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் வியாபாரம் ஆகும் நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான நகைக்கடைகளில் கடந்த வருடத்தை விட, 40 சதவீத அளவுக்கு நகை வாங்க முன்கூட்டியே பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நகைக்கடைக்காரர்கள் கவலையடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுவதால் ... Read More »

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தி்ல், இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து ரூ. 62.37 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை அதிகரித்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததற்கான காரணங்களாக, போரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய வர்த்தகநேர முடிவில், இந்திய ரூபாயின் மதிபபு 6 காசுகள் அதிகரித்து ரூ. 62.30 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.   Read More »

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,516-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.20,128 ஆக உள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26,910-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.30-க்கு விற்கப்படுகிறது. மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,765-க்கு விற்கப்படுகிறது. Read More »

செல்வமகள் சேமிப்புக் கணக்கு 320 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை வருவாய்.

அஞ்சலகங்களில் அண்மையில் தொடங்கப்பட்ட “செல்வமகள்’ சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரூ.320 கோடி முதலீடாகக் கிடைத்துள்ளது. செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் கடந்த நிதியாண்டில் 28 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.320 கோடி முதலீட்டுத் தொகையாக கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 11,835 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட அஞ்சலகத்தில் மட்டும், 2 லட்சத்து 23,340 சேமிப்புக் கணக்குகள் ஆகும். இந்த சேமிப்புக் கணக்குகள் வாயிலாக ஏறத்தாழ ரூ.90 ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com