Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 28
Tuesday , 16 August 2022
Home » வணிகம் (page 28)

வணிகம்

தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன மத்திய வங்கி வட்டியை குறைத்துள்ளது

கடந்த நவம்பரில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக சீன மத்திய வங்கி வட்டியை குறைத்தது. சர்வதேச மந்த நிலைக்கு பிறகு வளர்ச்சி குறைந்ததால் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்திருக்கிறது சீன மத்திய வங்கி. கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.1 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் ஒரு வருடத்துக்கான டெபாசிட் விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 2.25 சதவீதமாக இருக்கிறது. இவை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தி பிபுள் பேங்க் ஆப் சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ... Read More »

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிவுடன் காணப்பட்டது. இன்றைய துவக்கத்தில் நேரத்தில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ.63.88 ஆக இருந்தது. பங்குசந்தைகளில் காணப்படும் சரிவாலும் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. Read More »

ஆபரண தங்கம் விலை உயர்வு

ஆபரண தங்கம் விலையில் கடந்த வாரத்தில் ஏற்ற, இறக்கம் இருந்து வந்தது. கடந்த 3–ந்தேதியில் இருந்து விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 152 அதிகரித்தது. இன்று காலையில் ஒரு கிராம் ரூ. 2,557 ஆகவும், சவரன் ரூ. 20,456 ஆகவும் இருந்தது.நேற்று கிராம் ரூ. 2,538–க்கும் சவரன் ரூ. 20,304–க்கும் விற்கப்பட்டது.ஒரு கிராமுக்கு ரூ. 19–வும், ஒரு சவரனுக்கு ரூ. 152–வும் உயர்ந்து உள்ளது. கடந்த 3 தினங்களில் சவரனுக்கு ரூ. 280 அதிகரித்தது.இதே போல் வெள்ளி விலையும் ... Read More »

சமையல் எரிவாயு மானியத்திற்கு வருமான வரி கிடையாது!

சமையல் எரிவாயு மானியத்திற்கு வருமான வரி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி தொடர்பான சட்டதிருத்தத்தில், ஒரு தனி நபர் தான் பெறக்கூடிய மானியங்கள், ஊக்கத்தொகை போன்ற பலன்களும் அவரது வருமான கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்ததே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கூறினர். மத்திய அரசு இதனை ... Read More »

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு கடந்த நிதி ஆண்டில் (2014-15) 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 3,432 கோடி டாலர் (சுமார் ரூ. 2,12,764 கோடி) அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சரிந்து வந்ததும், தங்கத்தின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியதுமே இறக்குமதி அதிகரிக்கக் காரணங்களாகும். முந்தைய நிதி ஆண்டில் (2013-14) மொத்தம் 2,870 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு அதிகரித்து ... Read More »

தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 82.30 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 291.32 புள்ளிகள் உயர்ந்து 27,302.63 என்ற அளவில் உள்ளது. தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 82.30 புள்ளிகள் அதிகரித்து 8,263.80 என்ற அளவில் உள்ளது. மற்ற ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங் பங்குச்சந்தை 0.14 சதவீதம் உயர்வுடன் பங்குவர்த்தகத்தை துவக்கியுள்ளது. ஜப்பான் பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More »

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.18 குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.18 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,522க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,176க்கு விற்பனை ஆகிறது. 24 கரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,697க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (10 கிராம்) ரூ.26,970க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,955க்கு விற்பனை ஆகிறது. Read More »

பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் 18 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 ... Read More »

சர்க்கரை இறக்குமதி வரியை 40% ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

சர்க்கரை மீதான இறக்குமதி வரியை, தற்போதுள்ள 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஎன்ஏ) புதன்கிழமை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தாலும், சர்க்கரை இறக்குமதியை கட்டுப்படுத்த, அதன் மீதான வரியை மத்திய அரசு அதிகரிக்கிறது. அதே வேளையில், கரும்புச் சக்கையில் இருந்து உற்பத்தியாகும் எத்தனால் மீதான கலால் வரியை நீக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த வரிநீக்க நடவடிக்கை, அடுத்த கரும்பு பருவத்தில் இருந்து ... Read More »

விற்பனையில் முதலிடம் சாம்சங் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிளை நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது சாம்சங். 2015-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 82.4 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது சாம்சங் நிறுவனம். இது மொத்த ஸ்மார்ட் போன் விற்பனையில் 24.5 சதவீதமாகும். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 7 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டின் இறுதி காலாண்டை ஒப்பிடும் போது ஆப்பிளின் விற்பனை சரிந்துள்ளது. இந்த காலாண்டில் 61.2 மில்லியன் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம். அனைத்து ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com