Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 25
Saturday , 24 September 2022
Home » வணிகம் (page 25)

வணிகம்

மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மாறும்போது, மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி (எம்என்பி) நேற்று அமலுக்கு வந்தது. இதுகுறித்து மத்தி–்ய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘நாடுமுழுவதும் எம்என்பி வசதி பொதுமக்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், மொபைல் நிறுவனங்களின் சேவை தரம் உயரவும் வழிவகுக்கும். நாட்டில் எங்கு சென்றாலும் உங்கள் மொபைல் எண் உங்களுடனேயே இருக்கும். கடந்த ஆண்டு நவம்பரிலேயே இது நடைமுறைக்கு வரவேண்டியது. இருப்பினும் தற்போது செயல்பாட்டுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். Read More »

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 71 காசுகளும் குறைப்பு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 71 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 69 ரூபாய் 84 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு லிட்டர் டீசல் விலை 53 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் ... Read More »

சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் இணைய, இன்று கடைசி நாள்!

சமையல் எரிவாயு மானியத் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இணைவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாகச் செலுத்தும் திட்டம், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த நேரடி மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏராளமானவர்கள் விண்ணப்பித்து, நேரடி மானியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இன்று இந்தத் திட்டத்தில் இணைவோருக்கு, ஜனவரி முதல் இதுவரை வாங்கிய சிலிண்டர்களுக்கு, ... Read More »

மலிவான அதிவேக இன்டர்நெட் வசதி விரைவில்

இணைய தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான சாதனையை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மலிவான, அதிவேக இன்டர்நெட் வசதி விரைவில் சாத்தியம் எனக் கூறப்படுகிறது.வேகமான இன்டர்நெட் இணைப்புக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது டேட்டாவை கொண்டுச்செல்லும் கண்ணாடி இழை கேபிள்கள் தான். டேட்டாவை அதிவேகமாகவும் தூரமாகவும் கொண்டுச்செல்ல இந்த கண்ணாடி இழை கேபிள்களின் இயல்பை விட அதிக அளவு மின்சாரம் செலுத்த வேண்டும். அப்படி செய்யும் போது டேட்டா சிதைவு ஏற்படுகிறது. எனவே அதிவேக இன்டர்நெட் வசதி சாத்தியம் இல்லாமல் இருந்தது.தற்போது குவால்காம் இன்ஸ்டிடியூட் ... Read More »

உலக பொருளாதாரம் பெரும் மந்த நிலையை அடையும்

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், லண்டன் நகரில் உள்ள லண்டன் வர்த்தக கல்வி நிறுவனத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “நாம் வளர்ச்சியை செயல்படுத்துவதற்காக முயற்சித்தபோது, 1930-களில் பெரும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதே போன்றதொரு நிலைமைக்குள் இப்போது மெதுவாக சென்று கொண்டிருக்கிறோம் என்பது கவலை அளிக்கிறது. இது உலகத்துக்கே பிரச்சினை என்றுதான் கருதுகிறேன். இது தொழில்வளம் கண்ட நாடுகளுக்கு அல்லது சந்தைகளை கொண்டுள்ள நாடுகளுக்கு ஆன பிரச்சினை ... Read More »

முட்டை கொள்முதல் விலை 45 காசுகள் குறைந்தது

சமீப காலமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை கொள்முதல் விலை குறையத் தொடங்கியது.நேற்று 4 ரூபாய் 5 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை இன்று 3 ரூபாய் 60 காசுகளாக குறைந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் 45 காசுகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை விற்பனை கடைகளில் 5 ரூபாய் வரை விற்கப்பட்ட ... Read More »

2005–ம் ஆண்டுக்கு முந்தைய அச்சிடப்பட்ட, ரூபாய் நோட்டுகளை மாற்றும் விவகாரம்!

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. கள்ள நோட்டுகள் தயாரிப்பை தடுக்க 2005–ம் ஆண்டுக்கு பிறகு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கு முன்பு அச்சிடப்பட்ட ஆண்டுகளில் அத்தகைய அம்சங்கள் இல்லை. இதனால், அவை கள்ளநோட்டு புழக்கத்துக்கு வழிவகுப்பதாக இருந்தன. எனவே, 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் ... Read More »

பணபரிவர்த்தனைக்கு கார்டு பயன்படுத்தினால், வரிச்சலுகை வழங்கப்படும்!

நாட்டில், ரூபாய் தாள்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சட்ட வரைவை வெளியிட்டுள்ள மத்திய அரசு, இதுகுறித்து வரும் 29ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த வரைவின்படி, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும். ரயில் டிக்கெட், பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் எரிவாயு ஏஜென்சி ஆகியவற்றில் பணம் ... Read More »

சமையல் எரிவாயு மானிய திட்டத்தால்  அரசுக்கு ரூ 36 ஆயிரம் கோடி கூடுதல் செலவு

மத்திய அரசு கொண்டு வந்த சமையல் எரிவாயு மான்ய திட்டத்தால் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் அரசுக்கு ரூ 36 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.சமீபத்தில் பிரதமர் மோடி சமையல் எரிவாயு மானியம் தவிர்ப்பு பிரசாரத்தை தொடங்கினார். வசதி படைத்தவர்கள் மானியத்தை தவிர்த்தால் இது ஏழைகளுக்கு செய்யும் உதவி என பிரதமர் மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால், வசதி படைத்தவர்கள் இன்னும் இதனை தவிர்த்து அரசிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு வருவதில் ஆர்வம் இல்லாமலே இருக்கின்றனர்.இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ... Read More »

2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, 9 நாள் அவகாசம்!

கடந்த 2005க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள், இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள், வங்கிகளில் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்குகளில், டிபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், கடந்த 2005க்கு முன் அச்சிடப்பட்ட ஆயிரம் மற்றும் 500 ரூபாய் உட்பட, அனைத்து ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகாது. எனவே, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com