Tuesday , 2 March 2021
Home » வணிகம் (page 20)

வணிகம்

காய்கறிகளின் விலை உயர்வு

காய்கறிகளின்வரத்து குறைவாக உள்ளதால், பெரும்பாலான காய்கறிகளின் விலை, 1 கிலோ, 100 ரூபாய் வரை சென்றுள்ளது. 10 ரூபாய் விலை கொண்ட சுரைக்காய், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ‘மழை விட்டால், நான்கு நாட்களில் இயல்பு நிலைக்கு வரும்’ என, வியாபாரிகள் கூறினர்.இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவையும் மழை விட்டு வைக்காததால், தமிழகத்திற்கான காய்கறி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினமும், 300 லாரிகளில் காய்கறி வரும். ஒரு வாரமாக, 100 லாரிகள் கூட வரவில்லை. நேற்று, 110 ... Read More »

ரயில்களில் முன்பதிவின்போது 5 முதல் 12 வயதுக்குட்பட்ட, சிறார்களுக்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படும்!

ரயில்களில் முன்பதிவின்போது 5 முதல் 12 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கும் முழுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த விதிமுறை, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்களில் 5 முதல் 12 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கான முன்பதிவு கட்டண விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவின்போது, பெரியவர்களுக்கான கட்டணத்தில் பாதி கட்டணம் சிறார்களுக்கு வசூலிக்கப்படுகிறது. ஆனால், சிறார்களுக்கும் முழு கட்டணம் வசூலிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு தனியாக படுக்கை அல்லது இருக்கை ... Read More »

சென்னையில் மழை நின்றுள்ள நிலையில், வெள்ள நீர் வடிய தொடங்கியது!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கிகளின் வேலை நேரத்தில் நீட்டிக்கவும், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்த இடங்களில் ஒன்றான போரூரில், பாதிக்கப்பட்ட மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இதேபோல் சென்னையின் பல பகுதிகளிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை குறைந்த போதிலும், பல இடங்களில் பால் வினியோகம் சீரடையாத காரணத்தால், மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒரு ... Read More »

வசதி இருந்தும் கடனை திருப்பித் தராமல் இருப்போர் மீது, அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்!

வசதி இருந்தும் கடனை திருப்பித் தராமல் இருப்போர் மீது, அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்க வங்கிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டில்லியில் அருண் ஜெட்லி தலைமையில், பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், ரிசர்வ் வங்கி அதிகாரிகள், அரசு துறை செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வங்கிகளின் வராக் கடன் பெருகி வருவது, சர்வதேச மந்த நிலையால் உருக்கு மற்றும் அலுமினிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு விஜய் மல்லையாவின் கிங் பிஷர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் ... Read More »

கரும்பு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு, 4 ரூபாய் 50 காசுகள் மானியம்!

கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த மானியமாக குவிண்டாலுக்கு 4 ரூபாய் 50 காசு வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2015 – 16-ம் ஆண்டு பயிர் பருவத்துக்கான இந்த மானியம் மூலம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவார்கள் என அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இத்தொகை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மறுபுறம் அமைச்சரவையின் மற்ற முடிவுகள் குறித்து பேசியபோது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 3 ... Read More »

சென்னையில் கூடுதலாக 50 தற்காலிக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்

மழை காரணமாக காய்கறி விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த, சென்னையில் கூடுதலாக 50 தற்காலிக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளை திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதனால், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 இடங்களில் கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஏற்கனவே உள்ள 42 கடைகளுடன் , ... Read More »

கனமழை காரணமாக சென்னையில் காய்கறி விலை 2 மடங்கு உயர்வு

கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சென்னையில் காய்கறி விலை 2 மடங்கு உயர்ந்து விட்டது.கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் லாரிகளில் வரும். ஆனால் மழையின் காரணமாக 500 லாரிக்கு பதில் 200 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்தது. கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால் மீன் விலையும் உயர்ந்து விட்டது. இதேபோல் பூ விலையும் ‘கிடுகிடு’ என உயர்ந்துள்ளது. மல்லி 300 கிராம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ... Read More »

புதிய முயற்சிகளை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியாவிற்கு பெருமைக்குரிய இடம் உண்டு

புதிய முயற்சிகளை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியாவிற்கு பெருமைக்குரிய இடம் உண்டு என்று ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆன்ட்ரூரோப் சென்னையில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்த்தில் தனியார் உணவு விடுதியில் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீடு அமைச்சர் ஆன்ட்ரூரோப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய முயற்சிகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியாவிற்கு பெருமைக்குரிய இடம் உண்டு. நுண்ணிய ஒலி அலைகள் மூலம் படம் பிடிக்கும் கருவி, விமானத்தின் போக்கை பதிவு செய்யும் கறுப்புபெட்டி, கோச்சியர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட உயிர் மின்னணுவியல் காது மற்றும் விலைத் தளத் தொடர்பு போன்ற ... Read More »

பருப்புகள் மொத்த விலை குறைகிறது!

பருப்பு விலை உயர்வு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் அதன் மொத்த விலை குறைந்திருக்கிறது. டெல்லியில் துவரம் பருப்பின் விலை 100 கிலோ கொண்ட ஒரு குவின்டாலுக்கு 200 ரூபாய் குறைந்தது. நேற்று அது ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் வீழ்ச்சி கண்டிருந்தது. குறைந்த விலையில் விற்பனை செய்ய தினமும் ஒரு லட்சம் கிலோ பருப்பை வழங்க இறக்குமதியாளர்கள் முன்வந்திருக்கும் தகவலையடுத்து, விலை குறைந்ததாக வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. உளுத்தம் பருப்பின் விலை குவின்டாலுக்கு 200 ... Read More »

பருப்பு விலையைக் கட்டுப்படுத்த, மேலும் 3 ஆயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதுக்கல்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி சோதனை எதிரொலியாக 10 மாநிலங்களில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறையினர் சுமார் இரண்டரை லட்சம் டன் பருப்பு இறக்குமதி செய்துள்ளதால் விலை விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருப்பு வகைகளின் விலை கடந்த சில நாட்களாக கடுமையான விலையேற்றம் கண்டு வருகிறது. கிலோ 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது 230 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பருப்பு விலையேற்றம் பொதுமக்களை வெகுவாகப் பாதித்துள்ள ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com