Tuesday , 22 January 2019
Home » வணிகம் (page 2)

வணிகம்

வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை

whats up

வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் ... Read More »

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா X6

Nokia x6

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.நோக்கியா மொபைல் போன்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டது. நோக்கியாவின் முதல் நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட X6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், நோக்கியாவின் அதிகாரப்பூர்வ சர்வதேச வலைத்தளத்தில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் ... Read More »

கூகுள் க்ரோம் புதிய அப்டேட் மூலம் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தலாம்

chrom

ஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோரும் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், அதிவேக இணைய இணைப்பு பரவலாக கிடைப்பதில்லை. தினசரி டேட்டாவை கொண்டு பிரவுசிங் செய்ய நினைத்தால், டேட்டா வேகம்நம் அமைதிக்கு ஆப்பு வைக்கிறது.இதுபோன்ற பிரச்சனைகளை சரியாக புரிந்து வைத்திருக்கும் கூகுள், தனது க்ரோம் செயலியில் புதிய சேவையை சேர்த்திருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் செயலி நீங்கள் வைபை நெட்வொர்க் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் ... Read More »

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவு

INrUSD

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.68.03 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் அதிகரித்து ரூ.67.99 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More »

முன்பணம் இல்லாமல் ஐபோன் ஆப்பிள் நிறுவனம் அதிரடி திட்டம்!!

Iphone logo

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஐபோன்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு முன்பணம் இல்லாமல், குறைந்த வட்டியில் மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X போன்ற மாடல்களுக்கு இந்த சலுகை பொருந்தும் என்பதோடு பயனர்கள் 18 மாதங்களுக்கு மாத தவனை செலுத்த வேண்டும். இந்தியாவில் வழங்கப்பட்ட தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், ஹெச்டிபி நிதி சேவைகள் ... Read More »

ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியீடு!!

voda

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. ... Read More »

பெட்ரோல், டீசல் மீதான, வரிக்குறையைக் குறைக்க வாய்ப்பே இல்லை!

64632681

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தினால் பெட்ரோல், டீசல் மீதாக வரிகளை முக்கிய வருவாய் ஆதாரமாக அரசு சார்ந்திருக்க வேண்டிய ... Read More »

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் செயலி

WhatsApp-Desktop

விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப் .ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows ... Read More »

இருமடங்கு டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை !!

Airtel

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் முன்பை விட இம்முறை இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி 2 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போன்றே ரிலையன்ஸ் ஜியோ ... Read More »

பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள்

paneer hero2

பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ பிச்சாண்டி மும்பை தாராவியில் உள்ள குடிசை  பகுதிகளை கட்டிடங்களாக கட்ட அம்மாநில அரசு துபாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது போல் தமிழகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் குடிசைகளில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com