Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 10
Sunday , 16 January 2022
Home » வணிகம் (page 10)

வணிகம்

ஏர்-இந்தியா சேவையில் முதன் முதலாக “ஏ320 நியோ’ விமானம்….

ஏர்-இந்தியா விமான சேவையில் முதன்முதலாக “ஏர்பஸ் 320 நியோ’ ரக விமானம் இணைந்துள்ளது. இதுகுறித்து ஏர்-இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஷ்வனி லோஹனி தெரிவித்துள்ளதாவது: ஏ320 நியோ ரக விமானம் முதன்முதலாக ஏர்-இந்தியாவின் விமான சேவையில் வியாழக்கிழமை இணைந்தது. அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன ரக என்ஜின் பொருத்தப்பட்ட இந்த விமானம் 12 உயர்வு வகுப்பு இருக்கைகள் உள்ளிட்ட 162 இருக்கைகளைக் கொண்டது. இந்த விமானத்தை சர்வதேச போக்குவரத்துக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த விமானம் குவைத் நாட்டின் அலஃப்கோ நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. ... Read More »

வரும் 20-ம் தேதி முதல் வாரம் 50,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம்

பொதுமக்கள் தங்களது சேமிப்புக் கணக்கிலிருந்து வரும் 20-ம் தேதி முதல் வாரம் 50,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. மேலும், அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.முன்னதாக, சேமிப்புக் கணக்கிலிருந்து வாரத்திற்கு 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. கடந்த வாரம், நடப்புக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான கடுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. Read More »

2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் (Airtel Surprises) என்ற பெயரில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 மில்லியனை எட்டியதை தொடர்ந்து இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. “2 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சர்பிரைசஸ் வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். கூடுதல் சலுகைகளின் மூலம், எங்களது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை பெற முடியும்”, என பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ... Read More »

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள், புழகத்திற்கு வரும்!

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் ... Read More »

பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் இரண்டரை லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருவானம் பெறுவோருக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் இரண்டரை லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்கள் இதுவரை 10 விழுக்காடு வரி செலுத்தி வந்ததாகவும், இந்த வரி விலக்கு உச்ச வரம்பு மாற்றம் செய்யப்படும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்த போதும், அது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ... Read More »

2017 – 2018-ஆம் நிதி ஆண்டில் 10 லட்சம் கோடி ரூபாய் பயிர் கடன்

2017 – 2018-ஆம் நிதி ஆண்டில் 10 லட்சம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று கூடியதும் இரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தேசிய வேளாண் சந்தையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தார். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், நுண்நீர் பாசனத்திற்காக ... Read More »

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூபாய் 48 அயிரம் கோடி ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் 2017-18-ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், 2018ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி செய்து முடிக்கப்படும் என பட்ஜெட் கூட்டத்தில் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அடுத்து வரும் காலங்களில் கிராமங்களின் வளர்ச்சி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிராம மக்களின் வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2016-17 நிதியாண்டில் ரூபாய் 38 ... Read More »

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். முதல் முறையாக பொது பட்ஜெட்டுடன் ரெயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- #விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி தள்ளுபடி தொடரும் # பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் # வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும் #அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019 ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும். #தீன் தயாள் யோஜனா ... Read More »

2017 மார்ச் வரை ‘ஜியோ 4ஜி’ இலவச சேவை வழங்கும் ;முகேஷ் அம்பானி தகவல்

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள், எதிர்வரும் மார்ச் 31ம் தேதி வரை இலவச சேவையைப் பெறலாம் என அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.   ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை அறிமுகம் செய்தார். அறிமுகமாகிய மூன்று மாதம் முடிவடையாத நிலையில் 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது ஜியோ சேவை. தொலைத் தொடர்பு நிறுவன வரலாற்றில் பெரும் மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த சாதனைக்கு, முக்கிய காரணம் இலவச ... Read More »

தேயிலை ஏற்றுமதி 2 சதவீதம் சரிவு ….

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பின் அடிப்படையில் 2 சதவீதம் சரிவடைந்தது. இதுகுறித்து தேயிலை வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத கால அளவில் ரூ.2,084.06 கோடி மதிப்புக்குத் தேயிலை ஏற்றுமதியாகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு ஏற்றுமதி மதிப்பான ரூ.2,214.97 கோடியுடன் ஒப்பிடும்போது இது 2 சதவீதம் குறைவாகும். அளவின் அடிப்படையிலும் தேயிலை ஏற்றுமதி 10.63 கோடி கிலோவிலிருந்து ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com