Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
வணிகம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 17 May 2022
Home » வணிகம்

வணிகம்

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம்

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும். இதேபோல் எதிர் திசையில் திருவள்ளுர், அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வழிதடத்தில் 2 புறநகர் மின்சார ரயில்களின் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. Read More »

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது

சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 72.74 என்ற அளவில் சரிந்தது.  அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72.69 என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி 22 காசுகள் ... Read More »

சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 38,126.65 புள்ளிகளை தொட்டது

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு முதன்முறையாக 263.06 புள்ளிகள் கடந்து 38,210.94 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.இது கடந்த ஆகஸ்டு 9ந்தேதி இருந்த 38,076.23 என்ற முந்தைய சாதனை பதிவை விட அதிக அளவாகும்.இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு முதன்முறையாக 11,500 புள்ளிகளை தொட்டுள்ளது.  இது 46.50 புள்ளிகள் கடந்து 11,517.25 புள்ளிகளாக உள்ளது.இது கடந்த ஆகஸ்டு 9ந்தேதி இருந்த 11,495.20 என்ற அதிகபட்ச அளவை விட அதிகம் ஆகும்.உலோகம், ரியல் எஸ்டேட், ... Read More »

முதன்முறையாக 38 ஆயிரம் புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 162.56 புள்ளிகளை கடந்து முதன்முறையாக 38,050.12 ஆயிரம் புள்ளிகளை தொட்டுள்ளதுஇதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 45.20 புள்ளிகளை கடந்து 11,495.20 புள்ளிகளாக புதிய அளவை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய 11,459.95 புள்ளிகள் என்ற நேற்றைய புதிய அளவை கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் குறியீடு மதிப்புகள் உயர்ந்து வருகின்றன. இவற்றில் கடந்த 6ந்தேதி, மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் ... Read More »

இனி வாட்ஸ்அப் செயலியில் அதிக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது

வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எதிர்கொள்ளும் நோக்கில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி ... Read More »

வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா!!

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.199 சலுகையை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 78.4 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த சலுகையில் அன்லிமிட்டெட் ... Read More »

ரூ.39-க்கு அன்லிமிட்டெட் கால் வழங்கும் புதிய சலுகை – பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மட்டுமின்றி, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. எனினும் ... Read More »

ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்கிறது

சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு நிறம், சாம்பல் நிறம் மற்றும் சுறுள் வகை தலைமுடி, சொட்டை தலை சார்ந்த ... Read More »

இணைய சமநிலை கொள்கை – டிராய் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இணைய சமநிலை (நெட் நியூட்ரலிட்டி) என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது என்பதாகும்.ஆனால், சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக்கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித்தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில்  மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு ... Read More »

730 ஜிபி டேட்டா வழங்கும்  புதிய சலுகை-பி.எஸ்.என்.எல்.

ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.1,999 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை சுமார் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்களுக்கு மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவன 4ஜி சேவைகள் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக பி.எஸ்.என்.எல். ரூ.1,999 சலுகை சென்னை மற்றும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com